காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி : ராகுல் காந்தி அறிவிப்பு

டில்லி பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி யின் பெயரை அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மொத்தம் 177 தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக பிப்ரவரி 20-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தேர்தலில் சரண்ஜித் சன்னியை முதல்வர் வேட்பாளராகக்  காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.  இதை அவர் . லூதியானாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளர் யார் … Read more

பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு : நாளை மகாராஷ்டிராவில்  பொது விடுமுறை அறிவிப்பு

மும்பை பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மரணத்தை ஒட்டி நாளை மகாராஷ்டிர மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இன்றும் ரசிக்கும் படியான பல நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள பிரபல பாடிகியான லதா மங்கேஷ்கர் இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்டார். இவர் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். லதா மங்கேஷ்கரின் உடல்நிலை ஓரளவு தேறிய நிலையில், … Read more

மத்திய அரசு அலுவலகங்கள் நாளை முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் – அமைச்சர்

புதுடெல்லி: கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து நாளை (7 ம் தேதி ) முதல் 100 சதவீத பணியாளர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்க உள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பிப்ரவரி 15 ம் தேதி வரை 50 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து மத்திய அரசு அலுவலகங்கள் … Read more

ஆளுநர் ரவியின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ரத்து

சென்னை: ஆளுநர் ரவியின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 3 நாள் பயணமாக நாளை ஆளுநர் ரவி டெல்லி செல்லவிருந்தார். இந்த பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மசோதாவை ஆளுனர் திருப்பி அனுப்பி இருந்த நிலையில் அவருக்கு எதிரான கண்டனக் குரல்கள் அதிகரித்து வந்தது. இதனையடுத்து டெல்லி செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று 6,120 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 06/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 6,120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,10,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,33,537 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,25,25,017 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 6,120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 34,10,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 26 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,759 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 23,144 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 32,51,295 பேர் குணம் அடைந்து வீடு … Read more

புதுச்சேரி முதல்வர் – நடிகர் விஜய் சந்திப்பு குறித்து பதில் அளிக்க மறுக்கும் அமைச்சர்

புதுச்சேரி நடிகர் விஜய் மற்றும் புதுச்சேரி முதல்வர் சந்திப்பு குறித்து பதில் அளிக்க முடியாது என அமைச்சர் நமச்சிவாயம் கூறி உள்ளார். சென்னையில்  நடிகர் விஜய்யை அவரது இல்லத்துக்குச் சென்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசினார்.   அப்போது முதல்வர் இதை வழக்கமான சந்திப்பு எனக் கூறிய போதிலும் பல வித யூகங்கள் எழுந்துள்ளன. ரங்கசாமி தனது தேர்தல் வெற்றிக்கு  பிறகு பிரதமர் மோடி, அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வத்தை சந்திக்கவில்லை. ஆனால் … Read more

லதா மங்கேஷ்கரின் இழப்பு எனக்கு மிகவும் மனவேதனையை அளித்துள்ளது : இளையராஜா உருக்கம்… வீடியோ

இந்திய திரைப்பட இசை உலகின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கரின் மறைவு தனக்கு மிகவும் மனவேதனை அளித்திருப்பதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். இளையராஜா இசையில் ‘ஆராரோ ஆராரோ’ என்று பிரபு நடித்த ஆனந்த் படத்திலும், ‘வலையோசை கலகலகலவென’ என்று கமல் நடித்த சத்யா படத்திற்க்காகவும் பின்னணி பாடியவர் லதா மங்கேஷ்கர். கொரோனா காரணமாக ஜனவரி மாதம் 8 ம் தேதி மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் உடல்நிலை நேற்று மிகவும் மோசமானது. … Read more

பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை:  பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா பங்கேஷ்கர் இந்தி,தமிழ், மராத்தி என பல்வேறு மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். லதா மங்கேஷ்கர் முதன் முதலாக 1942 இல் கிதி ஹசால் என்ற மராத்திப் பாடலைப் பாடினார். கடந்த 70 ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழில் வளையோசை, ஆராரோ ஆராரோ, எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் உட்பட … Read more

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.07 லட்சம் பேர் பாதிப்பு – 14.48 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 16,11,666 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 14,48,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,07,474 பேர் அதிகரித்து மொத்தம் 4,21,88,138 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 865 அதிகரித்து மொத்தம் 5,01,979 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 2,13,248 பேர் குணமடைந்து இதுவரை 4,04,61,148 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 12,25,011 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று இந்தியாவில் 45,10,770 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு … Read more

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மரணம்

மும்பை பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தாக்குதலால் இன்று உயிர் இழந்தார். சென்ற மாதம் 8 ஆம் தேதி அன்று பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.  இதையொட்டி அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று  அவர் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாக  மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டது..  அவர் தொடர்ந்து 29 நாட்களாகச் சிகிச்சையில் இருந்தார்.  இன்று காலை அவர் உயிர் … Read more