ஆளுநர் ரவியின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ரத்து
சென்னை: ஆளுநர் ரவியின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 3 நாள் பயணமாக நாளை ஆளுநர் ரவி டெல்லி செல்லவிருந்தார். இந்த பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மசோதாவை ஆளுனர் திருப்பி அனுப்பி இருந்த நிலையில் அவருக்கு எதிரான கண்டனக் குரல்கள் அதிகரித்து வந்தது. இதனையடுத்து டெல்லி செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.