நடுரோட்டில் சென்ற பிச்சைக்காரர் மீது கார் ஏறியதில் பலி… டி.ஆரின் கார் ஓட்டுநர் கைது… பதைபதைக்க வைக்கும் வீடியோ….

நடுரோட்டில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த பிச்சைக்காரர் மீது கார் ஏறியதில் பலியானார். கடந்த வெள்ளிக்கிழமை (18-3-2022) இளங்கோ சாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக டி.ராஜேந்தரின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக அந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இது தொடர்பான முதல் கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டிருக்கும் கார் ஓட்டுனரின் பெயர் செல்வம் என்பதும் இவர் இயக்குனரும் நடிகருமான டி. ராஜேந்தரின் கார் ஓட்டுநர் என்பதும் தெரியவந்திருக்கிறது. விபத்தில் … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்க முடியாது! சட்டப்பேரவையில் அமைச்சர் பதில்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் (O Panneerselvam), டி.என்.பி.எஸ் சி – ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதால் கிராமப்புற மாணவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை. அதனால், காவல அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,  ஒரே விண்ணப்பதாரர் 2 முறை விண்ணப்பிக்க கூடாது என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது 2020-இல் கொண்டு வரப்பட்டது. எனவே விண்ணப்பிக்க கால அவகாசத்தை … Read more

வெற்றியும் தோல்வியும் அரசியலில்  சகஜம்! பிரேமலதா விஜயகாந்த்…

திருச்சி: வெற்றியும் தோல்வியும் அரசியலில்  சகஜம் என்று கூறிய  பிரேமலதா விஜயகாந்த், 10 ஆண்டு ஆட்சியில் இல்லாத கட்சி தற்பொழுது ஆட்சியில் உள்ளது. ஆட்சியில் இருந்த கட்சி தற்போது ஆட்சி இல்லாமல் இருக்கிறது. எங்கள் இடத்தை நாங்கள் மீண்டும் பிடிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார். கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  பெட்ரோல் டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை … Read more

முதலமைச்சரான பிறகு முதன்முதலாக துபாய் பயணமாகிறார் மு.க.ஸ்டாலின்…!

சென்னை: முதலமைச்சரான பிறகு  மு.க.ஸ்டாலின் முதன்முதலாக துபாய் பயணமாகிறார். அங்கு நடைபெறும் தொழில் கண்காட்சியில் பங்கேற்ககிறார். தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிக கவனம் செலுத்துகிறார். அதற்காக,  தொழில்துறை சார்பில், வெளிநாடு மற்றும் வெளிமாநில முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு முதலீடுகள் ஏற்பட்டு வருகிறது. அதுபோல, மாநிலத்தின் ஏற்றுமதித்திறனை வெளிப்படுத்தும் வகையில், “ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் மாநாடு உள்பட  … Read more

வைரலாகும் ‘கே ஜி எஃப் 2’ வின் ‘தூஃபான்’ பாடல்

முன்னணி நடிகர் யஷ் நடிக்கும் ‘கே ஜி எஃப் ‘ படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற ‘தூஃபான்..’ பாடல் வெளியாகி இணையத்தில் சாதனை படைத்து வருகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் 2’. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, இந்திய அளவில் வசூலை வாரி குவித்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் … Read more

ராணுவத்தின் பெயரில் மோசடி முயற்சி… தப்பிய சென்னை தொழிலதிபர்…

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த கோகுல் என்பவரிடம் இந்திய ராணுவத்தில் பணி புரிவதாகக் கூறி மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருந்து கடை மற்றும் பரிசோதனை கூடம் நடத்தி வரும் கோகுலிடம் கடந்த வெள்ளியன்று தொலைபேசியில் இந்தியில் பேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவன் தான் இந்திய ராணுவத்தில் பணிபுரிவதாக கூறியுள்ளான். சில மருத்துவ பரிசோதனைகளைக் கூறி இந்த பரிசோதனைக்கு எவ்வளவு கட்டணம் என்று விசாரித்துள்ளான். தவிர தங்கள் குழுவில் பணிபுரியும் மொத்தம் 30 பேருக்கு … Read more

இதுவரை 208 வாக்குறுதிகள் நிறைவேற்றம் – எதிர்க்கட்சியினரின் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்! முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி…

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் இதுவரை 208 வாக்குறுதிகள் நிறைவேற்றி இருப்பதாக பெருமிதத்துடன் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தவர், எதிர்க்கட்சியினரின்  வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றும் என்று கூறினார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய விவாதத்தின்போதுஎதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக நகைக்கடன் தள்ளுபடி செய்யவில்லை,  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார். இதையடத்து, இன்று  … Read more

‘இந்தியாவின் எடிசன்’ ஜி.டி.நாயுடு பிறந்த தினம் இன்று…..

நெட்டிசன்:  எழுத்து : வழக்கறிஞர் வீரசோழன் க.சோ.திருமாவளவன் ‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்ட சிறந்த அறிவியல் மேதையும், மகத்தான கண்டுபிடிப்பாளருமான “ஜி.டி.நாயுடு” பிறந்த தினம் இன்று….. அரசுப் பேருந்தில் செல்லவே அச்சமடைந்த ஒரு காலகட்டத்தில் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே பேருந்துகளை இயக்கி அனைவரையும் அதிசயிக்கச் செய்தவர். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தானியங்கி டிக்கெட், ரேடியேட்டர் அதிர்வு கருவி, பேருந்து வழித்தட கருவி என அதிசய இயந்திரங்களை கண்டறிந்து மாடர்னாக பஸ்ஸை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர். … Read more

ராமநாதபுரம் பருந்து கடற்படை  தளத்தில் புதிதாக மேலும் 2 ஹெலிகாப்டர்கள் இணைப்பு….

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஐ.என்.எஸ். பருந்து கடற்படை தளத்தில் 2 அதிநவீன ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட்டு உள்ளது. தென்மாவட்ட கடற்கரை பாதுகாப்பு பணியில் இது பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்த பருந்து கடற்படை வானூர்தி தளம் (INS Parundu)  தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம், சேர்வைகாரன் ஊரணி ஊருக்கருகே அமைந்துள்ள இந்திய கடற்படை விமான நிலையம் ஆகும். முன்னதாக இந்த  உச்சிப்புளி பகுதியானது, இரண்டாம் உலகப் போரின் 3000 அடி நீளமுடைய விமானத்தளமாக செயல்பட்டது. பின்னர், அதை கடற்படை … Read more

மேற்குவங்கத்தில் பயங்கரம்: உயிரோடு தீ வைத்து எரித்துகொல்லப்பட்ட 10 பேர் …

கொல்கத்தா: மேற்குவங்கத்தில்  10 உயிரோடு தீ வைத்து எரித்துகொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் சில காலமாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த கொடூர சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தன்று மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டம் பர்ஷால் பஞ்சாயத்தின் துணைத் தலைவராக இருக்கும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த  பாதுஷேக் என்பவர் மீது ஒரு கும்பல் … Read more