நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதியாக உள்ள நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி,முருகன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர்.   இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக முந்தைய அதிமுக அரசு தீர்மானம் இயற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.  இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் இருந்தார்; … Read more

ரசிகர்களை கிறங்கடிக்கும் மன்மத லீலை டிரெய்லர்!

மன்மத திரைப்படத்தின் டிரைலர் நேற்று இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் ஆறு லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு மற்றொரு பெண்ணிடம் ஏற்படும் காதலை சொல்லுவது தான் மன்மதலீலை திரைப்படத்தின் கதை. இப்படம் தெலுங்கிலும் அதே பெயரில் உருவாகி வருகிறது. மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கி உள்ள திரைப்படத்திற்கு மன்மத லீலை என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை … Read more

பாஜக ஆளும் புதுச்சேரியில் மத்திய பாஜக அரசை கண்டித்து முழு அடைப்பு

புதுச்சேரி பாஜகவை எதிர்த்து வரும் 29 ஆம் தேதி நடக்கும் வேலை நிறுத்தத்தில் பாஜக அளும் புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர். மத்திய  பாஜக அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 28, 29ம் தேதிகளில் நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது.  இதையொட்டி புதுவையில் ஐஎன்டியூசி, ஏஐடியூசி, சிஐடியூ, தொமுச, எம்எல்எப், எல்எல்எப், ஏஐசிசிடியூ, ஏஐயூடியூசி, என்டிஎல்எப் ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து 28ம் தேதி வேலைநிறுத்தம், 29ம் தேதி முழு அடைப்பு போராட்டமும் அறிவித்துள்ளனர். ஐஎன்டியூசி மாநில தலைவர் … Read more

ஆர்.ஆர்.ஆர். வெறித்தனம் : ராம் சரண் தேஜா – ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்களை சமாளிக்க இரும்பு வேலியுடன் தயாரானது திரையரங்கம்

ராம் சரண் தேஜா – ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரின் வெறித்தனமான ரசிகர்களை சமாளிக்க ஆந்திர தியேட்டரில் இரும்பு முள் வேலி அமைக்கப்பட்டுள்ளது. ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மார்ச் 25 ம் தேதி ரிலீசாகிறது. எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. தெலுங்கு மட்டுமன்றி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி … Read more

2 வருடங்களில் பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக மின்சார வாகனம் விலை குறையும் : அமைச்சர் உறுதி

டில்லி மின்சார வாகனங்களின் விலை பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக 2 வருடங்களில் குறையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியத் தலைநகர் டில்லி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராக முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக, டாக்கா (வங்கதேசம்), ஜமேனா (சாட்), துஷான்பே (தஜிகிஸ்தான்) மற்றும் மஸ்கட் (ஓமன்) ஆகிய நகரங்கள் உள்ளன.  இந்த தகவல்கள் 2021 உலக காற்று தர அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவையில் 2022-23ஆம் ஆண்டுக்கான சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கான மானியங்களுக்கான … Read more

இனி 60 கிமீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும் : நிதின் கட்கரி அறிவிப்பு

டில்லி இனி தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிமீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் பல சுங்கச் சாவடிகள் விதிகளை மீறிச் செயல்படுகிறது என்றும் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 2008 சட்டப்படி, 60 கி.மீ. குறைவான இடைவெளியில் செயல்படும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல் திருமாவளவன் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தார். மேலும் சமீபத்தில் நிதின் கட்கரியை சந்தித்த … Read more

தமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  22/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,490 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 29,192 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,53,27,498 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதுவரை 34,52,490 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,025 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 89 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,13,930 பேர் குணம் அடைந்து வீடு … Read more

முஸ்லிம்கள் மீதான வெறுப்பை தடுக்க இஸ்லாமிய நாடுகள் தவறி விட்டன : இம்ரான் கான்

இஸ்லாமாபாத் உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் மீது வளரும் வெறுப்பை தடுக்க இஸ்லாமிய நாடுகள் தவறி விடடதாக பாகிஸ்தான் பிரதம்ர் இம்ரான் கான் கூறி உள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்துக் கொண்டார்.  அவர் தனது உரையில், “இஸ்லாமிய சமயத்தில் மிதவாதம், தீவிரவாதம் என எதுவும் இல்லை. தீவிரவாதத்துக்கும் மத நம்பிக்கைக்கும் எந்தவிதத்திலும் தொடர்பும் இல்லை. மேற்கத்திய நாடுகள் இஸ்லாத்தை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு மிதவாத மற்றும் தீவிர முஸ்லிம்கள் என எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்க முடியும்? எனது வாழ்நாளின் பெரும்பகுதியை நான் இங்கிலாந்தில் செலவிட்டுள்ளேன், உலகம் முழுவதும் சர்வதேச விளையாட்டு வீரராக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன்.  எனவே … Read more

“அந்த ராஜாவும் ஒன்னே ஒன்னு.. இந்த ராஜாவும் ஒன்னே ஒன்னு” : காதல் செய் விழாவில் இளையராஜா

கணேசன் இயக்கத்தில், புதுமுகங்கள் சுபாஷ் சந்திரபோஸ் – நேஹா ஜோடியாக நடிக்கும் படம் காதல் செய். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று இசையமைப்பாளர் இளையராஜாவின் ஸ்டூடியோவில் நடந்தது. விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, பி.வாசு உள்பட பலர் கலந்துகொண்டனர். இளையராஜா பேசும்போது, “எதிர்கால பாரதிராஜாக்களே… நிகழ்கால பி.வாசுக்களே… எதிர்கால இளையராஜாக்களே…” என்று துவங்கினார். மேலும், “ஏன்யா, காலகாலத்துக்கும் பாரதிராஜாக்கள், இளையராஜாக்கள் வருவாங்களா? கிடையவே கிடையாது. ஒரே ஒரு பாரதிராஜாதான். ஒரே ஒரு பி.வாசுதான். ஒரே ஒரு இளையராஜாதான். … Read more

மத்திய பல்கலைக்கழகங்களில் இனிமேல் நுழைவு தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை! யுஜிசி புதிய அறிவிப்பு…

டெல்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வு மூலம் மட்டுமே இனி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், 12ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என யுஜிசி புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும், நடப்பாண்டு (2022-2023) மாணவர் சேர்க்கை, பொது நுழைவுத் தேர்வு மூலமாகவே நடத்தப்பட வேண்டும் என்றும் தனித்தனி நுழைவுத் தேர்வுகள் மூலமாகவோ , பிளஸ் … Read more