தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சிறுமிகள் மீதான பாலியல் சேட்டைகள்! ஆசிரியர்கள் கைது…

சென்னை: தமிழ்நாட்டில் சிறுமிகள், பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சேட்டைகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக ஆசிரியர், ஓய்வுபெற்ற ஆசிரியர், இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் என 3 பேர்  கைது செய்யப்பட்டு உள்ளனர். விருதுநகரில் 22வயது இளம்பெண்ணை 4 சிறுவன்கள் உள்பட 8 பேர் சேர்ந்து கடந்த இரு மாதங்களாக பொள்ளாச்சி  பாலியல் சம்பவங்களைப் போல வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பள்ளி மாணவிகள், சிறுமிகள் மீதான … Read more

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய அமர்வில், மக்கள் நலப்பணியாளர் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலப் பணியாளர்களை முதன்முதலாக நியமித்தது திமுக ஆட்சிதான். ஆனால், அதிமுக ஆட்சியில் அவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தற்போது இந்த விவகாரம் உச்சநீதி … Read more

ஜெயலலிதா கைரேகை, சிபிஆர் சிகிச்சை, எக்மோ கருவி பொருத்தப்பட்டது குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்…

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுகசாமி தலைமயிலான ஆணையம் விசாரணை நடத்தி வ ருகிறது. இதில் 2வது நாளாக ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். அப்போது ஆணையம் தரப்பில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பரபரப்பு பதிலை கூறினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுகசாமி தலைமயிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த ஆணையத்தில் ஆஜராகுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சம்மன் … Read more

தடுப்பூசி போடாதவர்களாலேயே கொரோனா வைரஸ் உருமாற காரணம்! உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

டெல்லி: தடுப்பூசி போடாதவர்களாலேயே கொரோனா வைரஸ் உருமாற காரணம் என உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தடுப்பூசி பெரும் பங்காற்றி வருகிறது. இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 181 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 81.9 கோடி பேருக்கு இரு டோஸ் தடுப்பூசிகளும், 59.04 சதவிகிதம் பேருக்கு இரு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு உள்ளது என மத்தியஅரசு அறிவித்து … Read more

ஆன்லைன் சூதாட்டம்: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்….

சென்னை: ஆன்லைன் சூதாட்டம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அந்த தடை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதன் காரணமாக மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தினால் பலர் தற்கொலை முடிவை எடுத்து வரும் அவலங்கள் தொடர்கின்றன. இதனால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும் என … Read more

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் நீட்டிப்பு குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா நோய் வெகுவாக கட்டுக்குள் உள்ள நிலையில்,  கொரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று  நடைபெற்றது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சீனா உள்பட சில ஐரோப்பிய நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது.  சில நாடுகளில் தொற்று அதிகரித்து வருவதால்  மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் மக்கள் இன்னும் சில மாதங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை … Read more

22வயது தலித்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 2திமுக இளைஞர்அணி நிர்வாகி, 4 மைனர் பையன் உள்பட 8 பேர் கைது! இது விருதுநகர் கொடூரம்….

மதுரை: விருதுநகர் மாவட்டத்தில், 22வயது தலித்பெண்ணை 2திமுக நிர்வாகிகள் 4 மைனர் பையன்கள் உள்பட 8 பேர் செய்து கூட்டு பலாத்காரம் செய்து, அதை படமெடுத்து வெளியிட்ட கொடுமை நடைபெற்றுள்ளது. இது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை நிறைவுகூறும் வகையில் உள்ளது. இவர்களில் 2 பேர் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த கொடூர குற்றவாளிகள் மீது  தமிழகஅரசு கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற கூட்டு … Read more

மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி – குறைகளை களைய குழு அமைப்பு! தமிழகஅரசு

சென்னை: மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி – குறைகளை களைய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப் பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணியில் சேருவதற்கு, கடந்த அதிமுக ஆட்சியின்போது,  2019ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. மாதம் ரூ. 15 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் 5 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்படுவார்கள் எனவும், இரண்டு ஆண்டு களுக்குப் பின்னர் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்யப்படுவார்கள் … Read more

உக்ரைன் போர் : ரஷ்ய அதிபரை சந்திக்க உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்

கிவ் உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போரை நிறுத்துவது. குறித்து ரஷ்ய அதிபரைச் சந்திக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வலியுறுத்தி உள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.  இதனால் இரு தரப்பிலும் போர் வீரர்கள் தவிர உக்ரைன் நாட்டின் மக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.  உக்ரைனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதால் விமான போக்குவரத்து அடியோடு நின்று போனது. இந்த போரை நிறுத்த பல கட்ட சமாதானப் பேச்சு வார்த்தைகள் நட்ந்தன.  இவற்றில் இரு நாடுக்ளைச் … Read more

137 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னை இன்று முதல் 137 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிபபு ஆகியவற்றின் அடிப்படையில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது.  ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாகக் கடந்த சில மாதங்களாக விலை உயராமல் இருந்தது. தேர்தல்கள் முடிந்த பிறகு மொத்தமாக டீச்ல் டாங்கர் லாரி மூலம் டீசல் கொள்முதல் செய்வோருக்கு லிட்டருக்கு … Read more