தமிழகத்தில் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வந்தால் அனுமதிக்கக்கூடாது – பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வர தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வர தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதி இல்லை. 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே அதுவும் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறுவர்கள், ஓட்டுநர் … Read more

1,000 ரேஷன் கார்டுகள் உள்ள நியாய நிலை கடைகள் பிரிக்கப்படும் – அமைச்சர் இ.பெரியசாமி

சென்னை: 1,000 ரேஷன் கார்டுகள் உள்ள நியாய நிலை கடைகள் பிரிக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவகாரம் நடைபெற்று வருகிறது. அப்போது திருப்பூரில் நியாயவிலைக் கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் செயல் குறிப்பு அரசிடம் இருக்கிறதா? என செல்வராஜ் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் கூறிய அமைச்சர் ஐ பெரியசாமி, திருப்பூரில் 30 நியாயவிலை கடைகள் இயங்கி வருகிறது. திருப்பூரில் 3 முழு நேர கடைகள் மற்றும் … Read more

மகிளா தலைவராக அனிஷா பாகுலை நியமிக்கும் முன்மொழிவுக்கு காங்கிரஸ் ஒப்புதல்

மும்பை: மகிளா தலைவராக அனிஷா பாகுல் நியமனத்திற்கு காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. மும்பை மண்டல மகிளா காங்கிரஸின் தலைவராக அனிஷா பாகுலை நியமிக்கும் முன்மொழிவுக்கு காங்கிரஸ் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டுக்காக மேலும் பணியாற்ற பத்ம பூஷன் எனக்கு ஊக்கமளிக்கிறது – குலாம் நபி ஆசாத்

புதுடெல்லி: நாட்டுக்காக மேலும் பணியாற்ற பத்ம பூஷன் எனக்கு ஊக்கமளிக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் 2 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 54 பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். மூத்த காங்கிரஸ் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரியுமான குலாம் நபி … Read more

ஹிமாச்சல பிரதேச கட்சித் தலைவர்களை நாளை சந்திக்கிறார் சோனியா காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கட்சித் தலைவர்களை சந்திக்கிறார். இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் சவால்களுக்குத் தயாராகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த கட்சித் தலைவர்களை நாளை சந்திக்கிறார்.

21 துணை ஆட்சியர்கள் நிலையில் மாற்றம் மற்றும் பணி நியமனம்

சென்னை: 21 துணை ஆட்சியர்கள் நிலையில் மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, தமிழ்நாடு அரசு இ-சேவை முகமைக்கும், திண்டுக்கல் கோட்டாட்சியர் காசிச்செல்வி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் பணிக்கும், புதுக்கோட்டை மாவட்டம் இலும்பூர், கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, கரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், தென்காசி மாவட்ட ஆட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளர் கவிதா, சோழிங்கநல்லூர் உதவி ஆணையராகவும், … Read more

தமிழ்க பல்லிகளில் உடல் பயிற்சி பாட வேளைக்குப் பள்ளிக்கல்வி ஆணையர் அனுமதி

சென்னை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் உடல் பயிற்சி பாடவேளைக்கு பள்ளிக் கல்வி ஆனையர் அனுமதி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டான.  பிறகு கொரோனா பரவல் குறைவு காரணமாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.   ஆயினும் உடல் பயிற்சி பாட  வேளைகள் ரத்து செய்யப்பட்டன.  தற்போது கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 –  9ம் வகுப்பு வரை மட்டும் விளையாட்டு மைதானத்தில் உடல் … Read more

தமிழகத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  21/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 31,568 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,52,98,306 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதுவரை 34,52,442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,025 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 96 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,13,841 பேர் குணம் அடைந்து வீடு … Read more

கன்னியாகுமரி : விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி தரைப் பாலம்

கன்னியாகுமரி கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி தரைப் பாலம் அமைக்கப்பட உள்ளது கன்னியாகுமரியில் இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய மூன்று கடல்களும் கலக்கின்றன.   இங்குள்ள பாறையில் விவேகானந்தர் தியானம் செய்து ஞானம் பெற்றுள்ளார்.  அந்த பாறையில் த் அற்போது விவேகானந்தர் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.   விவேகானந்தர் மண்டபத்துக்கு அருகே உள்ள மற்றொரு பாறையில் தமிழக அரசால் அப்போதைய முதல்வர் மு கருணாநிதியின் விருப்பப்படி திருவள்ளுவர் … Read more

தேர்தலில் தோல்வி அடைந்த புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்ட் முதல்வராக தேர்வு

டேராடூன் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த புஷ்கர் சிங் தாமி மீண்டும் உத்தரகாண்ட் முத்வல்ரவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த 5 மாநிலச் சட்டசபைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது.   இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட பிரேன் சிங் இன்று முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.    உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் பாஜக … Read more