தமாகா பொதுச்செயலாளர் திருவொற்றியூர் எஸ்.சுகுமாரன் ஆதரவாளர்களுடன் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்…

சென்னை: தமாகா பொதுச்செயலாளர் திருவொற்றியூர் எஸ்.சுகுமாரன் தனது ஆதரவாளர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பின்போது தமிழ்நாடு இளைஞர் காங்கிரசுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் திரு எம்.விச்சு லெனின் பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருவொற்றியூர் எஸ்.சுகுமாரன் அவரது ஆதரவாளர்களும் காங்கிரஸ் இயக்கத்தில் இணைத்துக்கொள்கிற … Read more

அமீரக வாழ் சேலம் அரசினர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அமீரக வாழ் சேலம் அரசினர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அமீரகத்தில் உள்ள புஜைரா மதப் ஸ்பிரிங் பார்க்கில் நேற்று (மார்ச் 20ம் தேதி) நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு கல்லூரி நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். கல்லூரி இந்நாள் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு, திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் ஷபிர் அகமதுவும் செயலர் முத்துராமனும் மேற்கொண்டனர்.

10 நாட்களுக்குள் நகைக்கடன் தள்ளுபடி! அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: 10 நாட்களுக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, பயனர்களுக்கு நகைகள் திருப்பி வழங்கப்படும் என  அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விக்குக்கு முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சர்கள் பதில் கூறினர். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி,  கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் பல்வேறு இடங்களில் தள்ளுபடி செய்யப்படவில்லை, எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த … Read more

மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதான நிறைவேறியது!

சென்னை: மேகதாது அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டுவந்த  தனித்தீர்மானம், திமுக, அதிமுக, பாஜக உள்பட  அனைத்துகட்சிகளின்  ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானத்தை முன்மொழிந்தார்.அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய அவர், 1978ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியில் இருந்தபோது மேகதாது குறித்து பேசினார். பின்னர் … Read more

சட்டப்பேரவையில் மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம் தாக்கல் செய்தார் அமைச்சர் துரைமுருகன்…

சென்னை: சட்டப்பேரவையில் மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார். தமிழக சட்டசபையில்  கடந்த 18-ஆம் தேதி 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. 21, 22 மற்றும் 23-ஆம் தேதியும் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்கிறது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் … Read more

ஜெ. மர்ம மரணம்: நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா உறவினர் இளவரசி ஆஜர்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆஜர் ஆகி உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அப்போலோ வழக்கால் சுமார் இரண்டு ஆண்டுகாலம் முடக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, மீண்டும் விசாரணை தொடங்கி உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வரும் விசாரணையில், சில … Read more

1000 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அடிக்கல் நாட்டினார்….

சென்னை:  சென்னை கிண்டியில் 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  அடிக்கல் நாட்டினார். கடந்த திமுக ஆட்சியில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டப்பேரவையுடன் கூடிய நவீன வசதிகளுடன் மிகப்பெரிய தலைமைச்செயலகம் கட்டப்பட்டது. ஆனால், அடுத்து வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, அதை பன்னோக்கு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியாக மாற்றிவிட்டது. தற்போது ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த … Read more

தஞ்சாவூர் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடு!

தஞ்சாவூர்: புகழ்பெற்ற நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடுக்கான அங்கீகார சான்று கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞருமான ப.சஞ்சய்காந்தி தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் மிகவும் பிரசித்தி பெற்றது. 17-ம் நூற்றாண்டு முதல், நாதஸ்வரம் என்ற இசைக்கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாதஸ்வர இசையில் “சுத்த மத்தியமம் ஸ்வரம்” மற்றும் “பிரதி மத்தியமம் ஸ்வரம்” கொண்டு தான் தாய் ராகங்களை பிரித்து வாசிக்கப்படும். இந்த நாதஸ்வர கருவியை கடந்த 1955 ஆம் ஆண்டு … Read more

பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்க்கும் சரத்குமார்

சென்னை பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஏற்புடையது இல்லை எனச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் சமத்துவ மக்கல் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செய்லர்க்ள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது.  இந்த கூட்டத்தில் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்துக்குக் காமராஜர் பெயரைச் சூட்ட வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் … Read more

ஆறுமுக சாமி ஆணையத்தில் இன்று ஓ பன்னீர் செல்வம் ஆஜர்

சென்னை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆஜராக உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.  இந்த புகாரை முன்னாள் துணை முதல்வ்ர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் தெரிவித்தனர்.  இதையொட்டி அப்போதைய முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்தார். இந்த ஆணையத்தின் விசார்னையை எதிர்த்து … Read more