இந்தியாவில் ரூ.3.220 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்

டில்லி ஜப்பான் பிரதமர் இந்தியாவில் ரூ.3.20 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாக ஒப்பந்தம் இட்டுள்ளார். இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, 3.5 டிரில்லியன் ஜப்பான் யென் (2.10 லட்சம் கோடி) முதலீடு செய்வதாக அறிவித்தார். இந்த முதலீடு அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களுக்கு அளிக்கப்பட்டது.  நேற்று ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடா, 2 நாள் பயணமாக  இந்தியா வந்தார். பிரதமருடன் ஜப்பானிய உயர்நிலை அதிகாரிகள் குழுவினரும் வந்துள்ளனர். மத்திய அமைச்சர் … Read more

பாஜகவின் கட்டுக்கதைகளுக்கு எம் எல் ஏக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் : சரத்பவார் வேண்டுகோள்

மும்பை பாஜகவின கட்டுக்கதைகளுக்கு மகாவிகாஸ் அகாடி சட்டமன்ற உறுப்பினர்கள் பதிஒலடி கொடுக்க வேண்டும் என சரத்பவார் கேட்டுக் கொண்டுள்ளார், மகராஷ்டிர மாநிலத்தில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி செலுத்தி வருகிறது.  இந்த கூட்டணியில் சிவசேனா,தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்துள்ளன,   நேற்று இந்த கூட்டணியின் இளம் சட்டசபை உறுப்பினர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அந்த சந்திப்பில்  தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அமைச்சர் அதீதி தட்காரே, ரோகித் பவார், அதுல் … Read more

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேருங்கள்! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள நரிக்குறவர்களையும்  பழங்குடியினர் பட்டியலில் சேருங்கள் என வலியுறுத்தி பிரதமர்  மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். நரிக்குறவர்களையும்  பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வல்லுநர் குழுக்களான லோகூர் குழு 1965-ம் ஆண்டிலும் நாடாளுமன்ற கூட்டுக்குழு 1967-ம் ஆண்டிலும் பரிந்துரைத்தன என்பதை சுட்டிக்காட்டி கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாட்டில் நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கைகளில் … Read more

19/03/2022: தமிழ்நாட்டில் கட்டுக்குள் வந்தது கொரோனா – இன்று 58 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இன்று 58 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள தவலின்படி,  “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட  58 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 33 பேர் ஆண்கள், 25 பேர் பெண்கள்.  இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் … Read more

கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கைவிட வேண்டாம்! மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்…

டெல்லி: கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கைவிட வேண்டாம் என மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. சீனா உள்பட சில வெளிநாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருவதைத் தொடர்ந்து, மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவித்து உள்ளது. இந்தியாவில், கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,06,080-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 516352-ஆக உள்ளது. தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. தொற்று பரவல் குறைந்து வருவதால் மக்களிடையே முகக்கவசம் அணிவது மட்டுமின்றி, கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை … Read more

இலங்கையில் பேப்பர் தட்டுப்பாட்டால் தேர்வுகள் ஒத்திவைப்பு

கொழும்பு: இலங்கையில் பேப்பர் தட்டுப்பாட்டால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 1948 சுதந்திரத்துக்கு பிறகு முதல் முதலாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது பேப்பர் தட்டுப்பாட்டால் இலங்கையில் காலவரையறையின்றி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன இலங்கை தேயிலை, ஆடை, சுற்றுலா வருமானங்களை தான் பிரதானமாக நம்பியுள்ளது. கொரோனா காலத்தில் வருமானம் முடங்கியது. கடன் அதிகரித்தது. இந்நிலையில் இலங்கையில் உள்ள பள்ளிகளில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் இறுதித்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வை பல லட்சம் மாணவ-மாணவிகள் … Read more

மருத்துவர் சுப்பையா மீது புகார் கொடுத்தவருக்கு தொடர் மிரட்டல்… காவல்துறை பாதுகாப்பு கேட்டு மனு

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மருத்துவர் சுப்பையா நங்கநல்லூரில் உள்ள மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவராகவும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவு தலைமை மருத்துவராகவும் இருந்தவர் டாக்டர் சுப்பையா. 2020 ம் ஆண்டு ஜூலை மாதம் நங்கநல்லூரில் தனது பக்கத்துவீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது மட்டுமல்லாமல் கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில் முக கவசம் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளையும் மூதாட்டி வீட்டு வாசல் … Read more

பெற்றோரை பாதுகாக்காத மகன் சொத்துரிமை கோர உரிமையில்லை! மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி

மும்பை: பெற்றோரை பாதுக்காக்காத மகன் சொத்துரிமை கோர உரிமையில்லை என  மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏற்கனவே பல நீதிமன்றங்கள் வயதான பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளின் சொத்துக்களை பறிமுதல் செய்துள்ள நிலையில், தற்போது மும்பை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. மும்பையில், மனச்சோர்வால் கணவன் படுக்கையில் உள்ள நிலையில், அவரை சட்டப்படியான காப்பாளராக அறிவிக்கக் கோரி மனைவி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், தாங்கங் மும்பையில் அடுக்குமாடிக் … Read more

மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் விலை வேறுபாடுகள் நீக்கம்! தமிழக அரசு

சென்னை:  மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் விலை உயர்வு மற்றும் வேறுபாடுகளை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில். மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் மீன்பிடிப்பிற்கான செலவினத்தை குறைத்திடும் நோக்கத்தில் மீனவர்களுக்கு வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு விசைப்படகிற்கு ஆண்டு ஒன்றுக்கு 18000 லிட்டர் வீதமும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்குப் படகு … Read more

காலாவதியான உணவுபொருட்கள் விற்பனை செய்தால் புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களில் காலாவதியான குளிர்பானங்கள் உணவு பொருள்கள் விற்பனை செய்தால், அதுகுறித்து புகார் அளிக்க உணவு பாதுகாப்பு துறை  வாட்ஸ்ஆப் எண் அறிவித்து உள்ளது. இதுகுறித்து உணவுபாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள  அறிக்கையில்,  பொதுமக்கள் கோடை காலங்களில் அதிக அளவில் பயன்படுத்தும் குளிர்பானங்களின் தரம் குறித்தும், காலாவதியான குளிர்பானங்கள் அதிக அளவில் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் வரப்பெற்று உள்ளது. மேலும் தரமற்ற, காலாவதியான குளிர்பானங்களை உட்கொள்வதால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், … Read more