தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்த பட்ஜெட் – முழு விவரம்….

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்த பட்ஜெட்  முழு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது நிதி நிலை அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இடைக்கால நிதி நிலை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது முதன்முறையாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின்  நிதிநிலை அறிக்கையை இன்று வெள்ளிக்கிழமை (மார்ச்.18) காலை 10 மணிக்கு நிதியமைச்சா் … Read more

இந்தியாவிலேயே முதன்முதலாக வானிலையை கணிக்க ரேடாரை நிறுவுகிறது தமிழகஅரசு! தமிழ்நாடு வெதர்மேன் வரவேற்பு…

சென்னை: இந்தியாவிலேயே முதன்முதலாக வானிலையை கணிக்க தமிழகஅரசு மாநில நிதிகளைக்கொண்டு ரேடார் உள்பட முன்னெச்சரிக்கை கருவிகளை நிறுவ உள்ளது. அதற்காக நிதி ஒதுக்கீடும் செய்து பட்ஜெட்டில் அறிவித்து உள்ளது. தமிழக அரசின் அறிவிப்புக்கு பிரபல வானியல் ஆய்வு நிபுணர் வெதர்மேன் எனப்படும் பிரதீப் ஜான் வரவேற்பு தெரிவித்து உள்ளார். மத்தியஅரசின் வானிலை ஆய்வு மைய குளறுபடி காரணமாக, தமிழ்நாடு வெள்ளம் மற்றும் புயலால் கடுமையான சேதங்களை எதிர்கொள்கிறது. இதற்கு வானிலை ஆய்வு மையத்தில் உள்ள ரேடார் உள்பட … Read more

நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி – எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி உள்பட துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரங்கள்….

சென்னை: தமிழக நிதியமைச்சர் பிடிஆர், சட்டப்பபேரவையில் இன்று 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில்  துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-  சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களுக்கு ரூ.705 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி,  மன அழுத்தம் மற்றும் மனச்சிதைவு ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் … Read more

முதல்வரின் முகவரி -அகரமுதலி-ஐஐடி-என்ஐடியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி….

சென்னை: நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல்வரின் முகவரி திட்டம், அகரமுதலி திட்டம், ஐஐடி-என்ஐடி போன்ற தேசிய கல்வி நிலையங்களில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு படிப்புக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. “முதல்வரின் முகவரி” என்ற புதிய துறையின் மூலம் 10.01 லட்சம் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது தமிழ் மொழி குறித்த ஆய்வுக்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு. தமிழ்வழிக்கல்வியை … Read more

பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் பிடிஆர்… வரலாறு காணாத வேகத்தில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக புகழாரம்…

சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வரும் அமைச்சர் பிடிஆர், பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் பிடிஆர் வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி வருவதாக கூறினார். 2022-2023-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்  சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. . இடைக்கால பட்ஜெட்டை போலவே இதுவும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் பட்ஜெட்டை காலை 10 மணி முதல் தாக்கல் … Read more

இந்தியாவில் 4 ஆம் அலை கொரோனாவுக்கு வாய்ப்பில்லை : மத்திய அரசு

டில்லி மத்திய அரசின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவில் 4ஆம் அலை கொரோனா ஏற்பட வாய்ப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சீனா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  அமைச்சர் இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல், தடுப்பூசி திட்டம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் மார்ச் 27ம் தேதி முதல் சர்வதேச … Read more

ஹிஜாப் தடையால் தேர்வு எழுத மறுத்த மாணவிகள்

சாம்ராஜ்நகர் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டதால் சாம்ராஜ்நகரில் இஸ்லாமிய மாணவிகள் தேர்வு எழுத மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்த கல்வி நிலையங்களுக்கு வரக்கூடாது என அரசு தடை விதித்தது.   இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு ஹிஜாப் தடை உத்தரவு செல்லும் எனத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.  இந்நிலையில் … Read more

மகா லட்சுமி எப்படி தோன்றினார், ?   விஷ்ணு பகவானை எப்படி அடைந்தார்.?

மகா லட்சுமி எப்படி தோன்றினார், ?   விஷ்ணு பகவானை எப்படி அடைந்தார்.? மும்மூர்த்திகளில் ஒருவரான மகா விஷ்ணுவின் துணைவியாக இருக்கும் செல்வத்திற்கான கடவுள் மகா லட்சுமி எப்படி தோன்றினாள். லட்சுமி தேவியை விஷ்ணு மணந்த புராணக் கதை இதோ. இறவா வரத்தின் மீதான ஆவல்: முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும், மனிதர்களைப் போல நரை, திரை, மூப்பு, சாக்காடு ஆகியவை இருக்கின்றன.  இதிலிருந்து தேவர்கள் விடுபட வேண்டும் என நினைத்தார்கள். தேவர்களின் தலைவராகிய இந்திரன் அதிலிருந்து விடுபட வேண்டி பிரம்மனிடம் முறையிட்டனர். ஆனால் அவரோ நானும் திரை … Read more

உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு மீண்டும் தமிழக அரசு அளித்துள்ள உரிமை – ஆடியோ

உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு மீண்டும் தமிழக அரசு அளித்துள்ள உரிமை – ஆடியோ சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50% இடங்களை கிராமப்புற மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.   இது குறித்து ஓவியர் பாரி ஒரு கருத்துப்படம் மற்றும் ஆடியோ செய்தி வெளியிட்டுள்ளார். ஆடியோ செய்தி பின் வருமாறு : https://patrikai.com/wp-content/uploads/2022/03/WhatsApp-Audio-2022-03-17-at-6.08.30-PM.ogg

சுற்றுலா இ-விசாவுக்கு விதித்த தடை நீக்கம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த சுற்றுலா இவிசாவுக்கு தற்போது தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா சார்பில் 156 நாடுகளுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டுகளுக்கான இவிசா தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா ஜப்பான் நாடுகளுக்கு வழங்கப்பட்ட பத்தாண்டுகால சுற்றுலா விசாவுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.