சென்னையைச் சேர்ந்த எனக்கு சிஎஸ்கே வில் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பு  : தினேஷ் கார்த்திக்

சென்னை தாம் சென்னையைச் சேர்ந்தவர் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும்  என கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2022 போட்டிகளுக்கான மெகா ஏலம் வரும் 12 மற்றும் 13-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது . இந்த ஏலத்தில் மூத்த வீரர்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள், கிளாசிக் பவுலர்கள், மாஸான ஆல் ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள், இளம் வீரர்கள் என பலர் இந்த ஏலத்தில் தங்கள் பெயரைப் … Read more

விழுப்புரம் விசிக எம்.பி. ரவிக்குமாருக்கு கொரோனா

சென்னை: விழுப்புரம் விசிக எம்.பி. ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுத்தாளர் இரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது

அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு – காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி நியமனம்

சென்னை: அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக நீதி கொள்கையை பாதுகாக்க இக்கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக அக்கட்சியின் மூத்த … Read more

ஸ்பா, மசாஜ் சென்டர்களில் சிசிடிவி – நடவடிக்கை எடுக்க ஆணை

சென்னை: ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கு ஒன்றில் கிளப்களில் நுழைவு, வெளியேறும் பகுதிகள் மற்றும் ஸ்பா, மசாஜ் சென்டர்களில் குறிப்பிட்ட காலத்தில் சிசிடிவிகளை அமைக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கிளப்களில் சூதாட்டம் நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஸ்பா, மசாஜ் சென்டர்களில் சிசிடிவிகளைப் பொருத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள … Read more

பிப்ரவரி 14 முதல் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நேரடி விசாரணை

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மீண்டும் நேரடி விசாரணை தொடங்க உள்ளது. ஓமிக்ரான் மாறுபாடு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை உயரத் தொடங்கிய பின்னர் உச்ச நீதிமன்றம் வழக்குகளை ஆன்லைன் மூலமாகவே விசாரித்து வருகிறது. கொரோனா நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதால், உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) கடந்த சனிக்கிழமை இந்தியத் தலைமை நீதிபதி என்வி ரமணாவைக் கேட்டுக் கொண்டது. … Read more

பி எம் கேர்ஸ் நிதி : வசூல் ரூ.10,990 கோடி – செலவு  ரூ.3,976 கோடி

டில்லி கொரோனா நிவாரணத்துக்காக அமைக்கப்பட்ட பி எம் கேர்ஸ் நிதியில் ரூ.10,990 கோடி வசூலாகி அதில் ரூ.3,976 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நிவாரணத்துக்காகப் பிரதமர் மோடி பி எம் கேர்ஸ் என்னும் நிதி அமைப்பைக் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 27 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.  இதற்குத் தொழிலதிபர்கள்,. பொதுமக்கள்,. தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் எனப் பலரும் நன்கொடை அளித்தனர்.  . இந்த நிதியில் கடந்த 2021 ஆம் வருடம் மார்ச் 31 வரை … Read more

எரிபொருட்கள் விலை உயர்வு: சமையல் சிலிண்டர் விலையை அரசே நிர்ணயம் செய்கிறது! மத்தியஅரசு தகவல்..

டெல்லி: சமையல் சிலிண்டர் விலையை அரசே நிர்ணயம் செய்கிறது என மாநிலங்களவையில்  மத்தியஅரசு தகவல் தெரிவித்து உள்ளது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடைபெற்ற மாநிலங்களை விவாதத்தின்போது சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது. சமையல் சிலிண்டர் விலை நிர்ணயம் சர்வதேச சந்தை மாற்றத்தால் மக்கள் பாதிக்காத வகையில், அரசே நிர்ணயம் செய்து வருவதாக தெரிவித்துள்ளது.  கடந்த  2018ம் ஆண்டு முதல் 2022 … Read more

நீட் விலக்கு தொடர்பாக நாளை சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்! நேரடி ஒளிபரப்பு…

சென்னை:  நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில், நாளை (8ந்தேதி) சட்டமன்றபேரவை சிறப்பு கூட்டம் நாளை  நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை தமிழக மக்கள் காணும் வகையில், நேரலை (நேரடி ஒளிபரப்பு) செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகஅரசு  சட்டமன்றத்தில் நிறைவேற்றி  ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் 8 மாதங்களுக்கு பிறகு திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை … Read more

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக முதல் பெண் துணைவேந்தராக முன்னாள் மாணவி சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முதல் பெண் துணைவேந்தராக முன்னாள் மாணவி சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம் செய்யப்பட்டு உள்ளது. . டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துனை வேந்தராக இருந்த ஜகதீஷ் குமார், கடந்த வாரம் யுஜிசி தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தாராக சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் (Santishree Dhulipudi Pandit) நியமிக்கப்பட்டுள்ளார். சாந்திஸ்ரீ பண்டிட் இதற்கு முன்னதாக, மகாராஷ்டிராவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் … Read more

தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் கொரோனா 3வது அலையில் உயிரிழப்பு குறைவு! ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் 3-ம் அலையில் உயிரிழப்பு குறைந்துள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா மூன்றாவது அலை தற்போது குறையத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தமிழகஅரசும் தளர்வுகளை வழங்கியதுடன், கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் வழக்கம்போல செயல்பட அனுமதி வழங்கியது. இதனால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை … Read more