நேற்று பவதாரிணி நினைவு தினம் : இளையராஜாவின் உருக்கமான பதிவு

சென்னை பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தனது மகள் பவதாரிணியின் நினைவு தினத்தில்  ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையில் வெளியான பாரதி படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடல் அவர் மகல் பவதாரிணிக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது. மேலும் அழகி படத்தில் அவர் பாடிய ‘ஒளியிலே தெரிவது தேவதையா’ பாடல் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.பவதாரிணி  சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். பவதாரிணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜனவரி … Read more

இன்று ஜனாதிபதி 93 ஆயுத படை  வீரர்களுக்கு வீரதீர விருதுகள் வழங்குகிறார்

டெல்லி இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு 93 ஆயுதப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் வழங்க உள்ளார். இன்று டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதை (கடமை பாதை) பகுதியில் இன்று நடைபெற உள்ள நாட்டின் 76-வது குடியரசு தின கொண்டாட்டங்கள் நிகழ்ச்சியில் ராணுவ அணிவகுப்புகளும் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறுகின்றன.. அப்போது விமானங்களின் வான் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இதனால், பல்வேறு பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகன … Read more

திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரா! சீமானை மீண்டும் சீண்டிய வருண்குமார் ஐபிஎஸ்….

திருச்சி: கொஞ்ச நஞ்சம் பேச்சா…  திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரா! சீமானை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ்  ஒருமை யில் சீண்டி இருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதை தமிழ்நாடு அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், பல்வேறு வழக்குகளை சீமான்மீது பதிவு செய்துள்ள தமிழ்நாடு காவல்துறை, அவரை,  ஈரோடு இடைத்தேர்தல் முடிந்ததும்,  கைது செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சி சீமான் விவகாரத்தில், … Read more

நாளை குடியரசு தினம்: தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார்…

சென்னை:  நாட்டின் 76வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், நாடு முழுவதும் பலத்த  பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும், சுமார்   1 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்தை ஒட்டி மக்கள் கூடும் பகுதிகளான, விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், பிரபலமானகோவில்கள் என பல பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே போலீசார்,   மோப்பநாய் உதவியுடன் ரயில்வே போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

கொடுமையிலும் கொடுமை: இறந்த தாயின் உடலை 15 கி.மீ சைக்கிளில் எடுத்துச் சென்ற மகன்! இது நெல்லை அவலம்….

திருநெல்வேலி: இறந்த தாயின் உடலை  அவரது, ஏழை மகன்  சைக்கிளில் கட்டி, சுமார்  15 கி.மீ  தூரம்முள்ள சொந்த ஊருக்கு தள்ளிச்சென்ற சோகம் அரங்கேறி உள்ளது. இந்த கொடுமையான சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற சோக சம்பவங்கள் இதுவரை வட மாநிலங்களில்தான் நடைபெற்று வந்தன. தற்போது முதன்முறையாக தமிழ்நாட்டிலும், அதுவும் நெல்லை சீமையில் அரங்கேறி இருப்பது, தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வடக்கு மீனவன்குளம் பகுதியைச் சேர்ந்த, சிவகாமியம்மாள் … Read more

தை அமாவாசை: சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்களுக்கு 5 நாள் அனுமதி…

விருதுநகர்: தை அமாவாசையையொட்டி, சதுரகிரி  சுந்தரமகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடு களுடன்   5 நாள் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தை அமாவாசை ஜனவரி 28ந்தேதி அன்று வருகிறது. ஜனவரி 28ம் தேதி இரவு 08.10 மணிக்கு துவங்கி, ஜனவரி 29ம் தேதி இரவு 07.21 வரை அமாவாசை திதி உள்ளது.  2025ம் வருடத்தில்   உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை இது என்பதால் இது மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. வருடத்தில் வரும் … Read more

3 லட்ச ரூபாய் வாடகை பாக்கி… நடிகர் கஞ்சா கருப்புவுக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் மதுரவாயல் காவல்நிலையத்தில் பஞ்சாயத்து…

களவாணி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகர் கஞ்சா கருப்பு ரூ. 3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளதால் வீட்டை காலி செய்யக்கோரி அவரது வீட்டின் உரிமையாளருக்கும் அவருக்கும் இடையே பஞ்சாயத்து எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கறுப்பு ராஜா என்ற இயற்பெயர் கொண்டவர் நகைச்சுவை நடிகர் கஞ்சா கறுப்பு. 2003ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் கஞ்சா விற்பவராக நடித்ததைத் தொடர்ந்து ‘கஞ்சா கறுப்பு’ என்று அழைக்கப்படுகிறார். 2021ம் ஆண்டு முதல் சென்னை … Read more

தமிழக காவல்துறையைச் சேர்ந்த 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு!

டெல்லி: குடியரசு தினத்தையொட்டி காவல் துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் விருது  அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தவிருது பட்டியலில்  தமிழகத்தைச் சேர்ந்த 21 காவலர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. வீர, தீர செயலுக்கான விருது ஜஜி துரைக்குமார் மற்றும் ராதிகாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது ஆண்டுதோறும்  குடியரசு தலைவரால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி,  இந்தாண்டு நாடு முழுவதும் 746 விருதுகள், 95 பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் தமிழகத்தில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய … Read more

மம்தா குல்கர்னி துறவறம் : மகா மண்டலேஷ்வர் பதவி வழங்கியிருப்பது சனாதன தர்மத்துக்கு எதிரானது… துறவிகள் கண்டனம்…

மம்தா குல்கர்னிக்கு மாயி மம்தாணந்த் கிரி என்று பெயர்சூட்டி மகா மண்டலேஷ்வர் பதவி வழங்கியிருப்பது சனாதன தர்மத்துக்கு எதிரானது என துறவிகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி நேற்று துறவறம் பூண்டார். 1991ம் ஆண்டு தமிழில் வெளியான நண்பர்கள் என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த மம்தா குல்கர்னி அதன் பின் பாலிவுட் படங்களில் நடித்து … Read more

சென்னை மெட்ரோ ரயில் ஒரு நாள் மற்றும் 30 நாள் பயண அட்டைகள் பிப் 1 முதல் நிறுத்தம்…

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வழங்கப்பட்டு வந்த ஒரு நாள் பாஸ் மற்றும் 30 நாள் பயண அட்டைகள் நிறுத்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் பணி நிமித்தமாக அதிக இடங்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த பாஸ்கள் மிகவும் வசதியாக இருந்தது. இந்த நிலையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த இரண்டு பயண அட்டைகளும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மெட்ரோ ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விம்கோ நகர் – ஏர்போர்ட் … Read more