கடந்த மாதம் சென்னை மெட்ரோவில் 86.65  லட்சம் பேர் பயணம்

சென்னை சென்னைமெட்ரோ ரயில்களில் சென்ற மாதம் 86.65 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ”சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகள் … Read more

சென்னை மாநகராட்சி மண்டலங்களை 15ல் இருந்து 20 ஆக அதிகரிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மறுசீரமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதால், பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலங்களின் எண்ணிக்கையை 15ல் இருந்து 20 ஆக அதிகரிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாநில அரசு நகரின் அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சியை மேம்படுத்தவும் முதலீட்டை அதிகரிக்கவும், மண்டலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது என்று மாலைமலர் அறிக்கை கூறுகிறது. தற்போது, ​​மாநகராட்சியில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு வி கா நகர், அம்பத்தூர், அண்ணா நகர், … Read more

அபாய கட்டத்தை தாண்டிய போப் ஆண்டவர்

வாடிகன் போப் ஆண்டவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தற்போது அபாய கட்டத்தை தாண்டி உள்ளார். கடந்த மாதம் 14-ந் தேதி கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே நாள்பட்ட நுரையீரல் நோயால் அவதிப்படும் போப் பிரான்சிசுக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதால் அவரது உடல்நிலை மோசமடைந்து கவலைக்கிடமானது. தொடர் சிகிச்சையின் … Read more

வார் ரூமாக மாறிய ப்ரெஸ் மீட்… அதிபர் Vs அதிபர்… டிரம்ப் முன் கெத்து காட்டிய ஜெலன்ஸ்கி

ரஷ்யா உடனான போரை உடனே நிறுத்தவேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதை அடுத்து இருவருக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று சந்தித்தார். 2022 முதல் நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதும் உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பிய ராணுவ உதவிகளுக்கு பதிலாக உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த சந்திப்பு … Read more

இட்லி தயாரிக்க பிளாஸ்டிக்  தாள் பயன்பாடு : கர்நாடகாவில் தடை

பெங்களூரு கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு இட்லி தயாரிக்க பிளாஸ்டிக் தாள் பயன்படுத்துவதை  தடை செய்து உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி ஆட்சி செய்யும் கர்நாடகாவில் மாநிலம் முழுவதும் 251 இடங்களில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியபோது, ஏராளமான ஓட்டல்களில் இட்லியை வேக வைப்பதற்கு துணிகளுக்கு பதில், பிளாஸ்டிக் பேப்பர்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே உடனடியாக கர்நாடகாவில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் இட்லி தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து … Read more

சீமானிடம் ஒரு மணி நேரம் காவல்துறை விசாரணை

சென்னை சீமானிடம் காவல்துறையினர் ஒரு மணி நேர்ம விசாரணை நடத்தி உள்ளனர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, தனது வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு வந்தார். அப்போது வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். அவரிடம் வழக்கு தொடர்பாக … Read more

மும்பை 57 மாடி கட்டிடத்தில் திடீர் தீவிபத்து

மும்பை மும்பை நகரின் பைகுல்லா ப்குதியில் உள்ள 57 மாடி கட்டிடத்தில் தீடிர் என தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் பைகுல்லா பகுதியில் 57 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. ஏராளமனோர் இந்த குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வருகின்றனர். இன்று இந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 42-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டு தீயினால் அங்கு புகை சூழ்ந்தது. எனவே அங்கு வசித்து வந்தவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர், தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் … Read more

வங்கிகளுக்கு மார்ச் மாதம் 14 நாட்கள் விடுமுறை

மும்பை வரும் மார்ச் மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ரிசர்வ் வங்கி  வெளியிட்டுள்ள வங்கிகளுக்கான மார்ச் மாத விடுமுறை பட்டியலின்படி பொது விடுமுறை, பிராந்திய நிகழ்வுகளுக்கான விடுமுறை மற்றும் 2, 4-வது சனிக்கிழமை விடுமுறை, வழக்கமான ஞாயிறு விடுமுறை என வங்கிகளுக்கு மொத்தம் 14 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் வருமாறு:- மார்ச் 2 (ஞாயிறு) – வார விடுமுறை மார்ச் 7 (வெள்ளி) – சாப்சர் … Read more

ஆதி – நிக்கி கல்ராணி விவாகரத்து என்னும் வதந்தி

சென்னை’ காதல் திருமணம் செய்த நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி ஆகியோர் விவாகரத்து செய்தி வெறும் வதந்தி என ஆதி அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகுக்கு சாமி டைரக்டு செய்த ‘மிருகம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஆதி. பிரபல தெலுங்கு டைரக்டர் ரவிராஜா பினிசெட்டியின் மகன் ஆவார். ‘ஈரம், அரவான், மரகத நாணயம், கிளாப்’ ஆகிய படங்களில் ஆதி நடித்து இருக்கிறார். ‘டார்லிங்’  என்ற பேய் படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு … Read more

மயிலாடுதுறை ஆட்சியர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்… 3 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் சர்ச்சை கருத்தை தொடர்ந்து நடவடிக்கை…

3 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு- கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. கடந்த 24ம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற சிறுமி 16 வயது சிறுவனால் வன்கொடுமை செய்யப்பட்டு தலை மற்றும் கண் சிதைக்கப்பட்டுள்ளது. சிறுமி கத்தியதால் கல்லை எடுத்து தலையிலும் முகத்திலும் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் … Read more