ஆதி – நிக்கி கல்ராணி விவாகரத்து என்னும் வதந்தி

சென்னை’ காதல் திருமணம் செய்த நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி ஆகியோர் விவாகரத்து செய்தி வெறும் வதந்தி என ஆதி அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகுக்கு சாமி டைரக்டு செய்த ‘மிருகம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஆதி. பிரபல தெலுங்கு டைரக்டர் ரவிராஜா பினிசெட்டியின் மகன் ஆவார். ‘ஈரம், அரவான், மரகத நாணயம், கிளாப்’ ஆகிய படங்களில் ஆதி நடித்து இருக்கிறார். ‘டார்லிங்’  என்ற பேய் படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு … Read more

மயிலாடுதுறை ஆட்சியர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்… 3 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் சர்ச்சை கருத்தை தொடர்ந்து நடவடிக்கை…

3 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு- கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. கடந்த 24ம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற சிறுமி 16 வயது சிறுவனால் வன்கொடுமை செய்யப்பட்டு தலை மற்றும் கண் சிதைக்கப்பட்டுள்ளது. சிறுமி கத்தியதால் கல்லை எடுத்து தலையிலும் முகத்திலும் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் … Read more

ரமலான் நோன்பு ஞாயிறு (மார்ச் 2) முதல் துவங்குவதாக தலைமை ஹாஜி அறிவிப்பு

இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் மார்ச் 2 முதல் துவங்குவதாக தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் இன்று பிறை தெரியாததை அடுத்து மார்ச் 2 முதல் நோன்பு மேற்கொள்ளப்படும். ரமலான் மாதம் என்பது இஸ்லாமிய காலண்டரில் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடும் ஒன்பதாவது மாதமாகும். இது உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் புனித மாதமாக கருதும் மாதமாகும். இந்த மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் மிக கடுமையான நோன்பு கடைபபிடிப்பது வழக்கம். புனித ரமலான் … Read more

சீமான் வீட்டு சுவரில் ஒட்டப்பட்ட அழைப்பாணை… ‘கிழிக்கச் சொன்னது நான் தான்’ சீமான் மனைவி பேட்டி…

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு சுவற்றில் ஒட்டப்பட்ட சம்மனை கிழிக்கச் சொன்னது நான் தான் என சீமானின் மனைவி கயல்விழி கூறியுள்ளார். பாலியல் புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. இதன் கடைசி அழைப்பாணையை வழங்க காவல்துறையினர் சீமான் வீட்டுக்கு நேற்று சென்ற நிலையில் அந்த சம்மனை சுவற்றில் ஒட்டிவிட்டு சென்றனர். இந்த சம்மன் ஒட்டப்பட்ட உடன் கிழிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் கிடைத்தது. இதை விசாரிக்க அங்கு … Read more

குடும்பத் தகராறு இருந்ததை ஆதாரமாகக் கொண்டு மனைவியை கணவன் தான் எரித்து கொலை செய்தார் என்பதை ஏற்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

மனைவியை கணவன் தான் எரித்து கொலை செய்தார் என்பதற்கான தகுந்த சாட்சி இல்லாத நிலையில் குடும்பத் தகராறு இருந்ததை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவர் கொலை செய்தார் என்று கூறமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மகளிர் விரைவு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வேந்தராஜா என்பவர் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த வேந்தராஜா தனது மகளின் சாவுக்கு மனைவி … Read more

சீமான் வீட்டு வாசலில் சம்மன் ஓட்ட போர்டு… கையில் கொடுக்க வேண்டிய அவசியமில்லையா ?

சீமான் வீட்டு வாசலில் நேற்று ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தது தொடர்பாக விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளரை உள்ளே அனுமதிக்க மறுத்ததோடு அவருடன் வாக்குவாதம் செய்து மல்லுக்கு நின்ற காவலாளி அமல்ராஜை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். காவல்துறையினர் என்று தெரிந்தும் அவர்களை உள்ளே நுழையவிடாமல் மரியாதைக் குறைவாக நடத்தியதோடு இடுப்பில் துப்பாக்கி வைத்துக் கொண்டு திமிறிய அந்த காவலாளியை காவல்துறையினர் சுற்றிவளைத்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். இந்த நிலையில், தனது வீட்டுக்கு காவல்துறையினர் சம்மன் கொடுக்க வருவது … Read more

தேசிய வானிலை ஆய்வாளர்கள் நூற்றுக்கணக்கானோரை பணிநீக்கம் செய்து டிரம்ப் அரசு உத்தரவு…

அமெரிக்க தேசிய வானிலை ஆய்வாளர்கள் நூற்றுக்கணக்கானோரை பணிநீக்கம் செய்து DOGE உத்தரவிட்டுள்ளது. சிக்கன நடவடிக்கை காரணமாக அமெரிக்க அரசு பணியாளர்கள் சிலரை பணிநீக்கம் செய்ய DOGE துறையின் தலைவர் எலன் மஸ்க் அதிபர் டிரம்புக்கு பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து பல்வேறு அரசுத் துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறாத ப்ரொபெஷனரி பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோரை பணிநீக்கம் செய்ய அதிபர் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார். இந்த நிலையில் தற்போது தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக (National Oceanic and … Read more

முத்த விஞ்ஞானி அமுதா சென்னை வானிலை ஆய்வு மைய தலைவராக நியமனம்

சென்னை மூத்த விஞ்ஞானி அமுதா சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்றுடன் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். எனவே சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமுதா நாளை பொறுப்பேற்க உள்ளார் என கூறப்படுகிறது. கடந்த 34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் … Read more

இட்லி – சாம்பார் விற்பனையால் கோவா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது… கோவா எம்.எல்.ஏ. கூறியது உண்மையா ?

கோவா மாநிலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் அதிலும் குறிப்பாக வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைவதற்கு அங்கு இட்லி – சாம்பார் விற்கப்படுவது தான் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. கோவாவின் கலங்குட்டு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வும் பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான மைக்கேல் லோபா செய்தியாளர் சந்திப்பில் இதைக் கூறினார். “கோவா கடற்கரை பகுதியில் சொந்தமாக இடம் வைத்திருக்கும் அம்மாநிலத்தவர்கள் தங்கள் நிலத்தை வெளிமாநிலத்தவருக்கு வாடகை அல்லது லீசுக்கு விடுகின்றனர். அந்த இடங்களில் வியாபாரம் … Read more

2026 முதல் மாநிலங்களுக்கான வரி பங்கீட்டை குறைக்க மத்திய மோடி அரசு முயற்சி ?

பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் மத்திய வரி வருவாயில் மாநிலங்களின் பங்கை 41% இலிருந்து 40% ஆகக் குறைக்க இலக்கு வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது . இந்த முன்மொழிவு நிதி ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்படும், மேலும் அங்கீகரிக்கப்பட்டால், மத்திய-மாநில பதட்டங்கள் தீவிரமடையக்கூடும். இந்த மாற்றத்திற்கான காரணங்களாக மத்திய அரசு அதிகரித்த செலவினத் தேவைகளைக் குறிப்பிடுகிறது.” மாநிலங்கள் பெறும் மத்திய வரி வருவாயைக் குறைக்க மோடி அரசு முயல்வதாக மூன்று தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி … Read more