இட்லி – சாம்பார் விற்பனையால் கோவா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது… கோவா எம்.எல்.ஏ. கூறியது உண்மையா ?

கோவா மாநிலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் அதிலும் குறிப்பாக வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைவதற்கு அங்கு இட்லி – சாம்பார் விற்கப்படுவது தான் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. கோவாவின் கலங்குட்டு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வும் பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான மைக்கேல் லோபா செய்தியாளர் சந்திப்பில் இதைக் கூறினார். “கோவா கடற்கரை பகுதியில் சொந்தமாக இடம் வைத்திருக்கும் அம்மாநிலத்தவர்கள் தங்கள் நிலத்தை வெளிமாநிலத்தவருக்கு வாடகை அல்லது லீசுக்கு விடுகின்றனர். அந்த இடங்களில் வியாபாரம் … Read more

2026 முதல் மாநிலங்களுக்கான வரி பங்கீட்டை குறைக்க மத்திய மோடி அரசு முயற்சி ?

பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் மத்திய வரி வருவாயில் மாநிலங்களின் பங்கை 41% இலிருந்து 40% ஆகக் குறைக்க இலக்கு வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது . இந்த முன்மொழிவு நிதி ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்படும், மேலும் அங்கீகரிக்கப்பட்டால், மத்திய-மாநில பதட்டங்கள் தீவிரமடையக்கூடும். இந்த மாற்றத்திற்கான காரணங்களாக மத்திய அரசு அதிகரித்த செலவினத் தேவைகளைக் குறிப்பிடுகிறது.” மாநிலங்கள் பெறும் மத்திய வரி வருவாயைக் குறைக்க மோடி அரசு முயல்வதாக மூன்று தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி … Read more

“தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” 72வது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் நாளை தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட விரும்பவில்லை என்றும் தமிழ்நாடு தற்போது எதிர்கொண்டுள்ள மொழிப் போரையும், தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையையும் கழகத் தோழர்கள் வலிமையோடு எதிர்க்க உறுதி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : “தமிழ்நாடு உயிர் பிரச்சினையான மொழிப்போரையும் – தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளது” “தொகுதி மறுசீரமைப்பு என்பது, நமது … Read more

இன்று அதிகாலை  நேபாளத்தில் நில நடுக்கம்

காத்மண்டு இன்று அதிகாலை 2.36 மணி அளவில் நேபாளத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது/ இன்று அதிகாலையில் நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை  2.36 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.79 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 85.75 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இதுவரை இந்த … Read more

மதுநாதக சுவாமி திருக்கோயில்,.இலத்தூர்,  திருநெல்வேலி

மதுநாதக சுவாமி திருக்கோயில்,.இலத்தூர்,  திருநெல்வேலி இவ்வூர் வழியே ஆதியில் ஓடிய நதி அனுமன் நதியாகும். ராமன், லட்சுமணன் ஆகியோர் வானரசேனைகளோடு இலங்கை செல்லும் வழியில் தாகம் ஏற்படவே அனுமன் தனது கதையினால் ராமநாமம் சொல்லி ஒரு பாறையில் அடித்தார். அந்த பாறை வழியாக ஆகாய கங்கை பெருகி வந்தது. அதுவே அனுமன் நதியானது. தற்போது இந்த கோயிலின் எதிரே கோடையிலும் வற்றாத திருக்குளம் இருக்கிறது. கோயிலும், குளமும் ஒருங்கே அமைந்த கோயில்கள் வரிசையில் இலத்தூரும் இருப்பது குறிப்பிடத் … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது… போலீசாரின் தடையை மீறி திருக்கழுக்குன்றம் மெயின்ரோட்டில் மறியல்…

திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் இதில் கலந்துகொண்டு திருக்கழுக்குன்றம் சாலையில் மறியலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமாரை பிப். 25ம் தேதி இரவு அதேபகுதியைச் சேர்ந்த வினோத், அப்பு உள்ளிட்டோர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. கஞ்சா மற்றும் குடிபோதையில் இருந்த நபர்கள் கடுமையான ஆயுதங்களால் தாக்கியதாக … Read more

45 நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் வருவாய்… உ.பி. பொருளாதாரத்தை பூஸ்ட் செய்துள்ள மகாகும்பமேளா

உ.பி. மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வந்த மகாகும்பமேளா நிகழ்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. ஜனவரி 13 முதல் 45 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடி பாவங்களை போக்க 65.21 கோடி பேர் வந்திருந்தனர். இந்தியா மட்டுமன்றி ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து குவிந்தனர். இதற்காக 14 மேம்பாலங்கள், 6 சுரங்கப்பாலங்கள், சாலை அகலப்பணி, புதிய சாலைகள் என … Read more

விலங்குகள் மற்றும் பறவைகளை வீடுகளில் வளர்க்க கட்டணம் : மதுரை மக்கள் அதிர்ச்சி

மதுரை மதுரை மக்கள் வீடுகளில் விலங்குகள் மற்றும் பறவைகள் வளர்க்க கட்டணாம் விதிக்கப்படும் எனும்  தீர்மானத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய மதுரை மாநகராட்சி மாவமன்ற கூட்டத்தில் ஒருசில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே வீடுகளில் பறவைகள் மற்றும் செல்லப்பிரானிகள் வளர்ப்பதற்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.  இன்றைய கூட்டத்தில் கட்டணம் குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- அதன்படி மாடு வளர்க்க ரூ.500 கட்டணமும், குதிரை வளர்க்க ரூ.750 கட்டணமும், ஆடு வளர்க்க 150 ரூபாயும் பன்றி வளர்க்க 500 ரூபாயும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.  … Read more

சென்னை மாநகரட்சிக்கு ரூ. 1500 கோடி  கடன்

சென்னை சென்னை மாநகராட்சிக்கு ரூ. 1500 கோடி கடன் உள்ளதாக  மேயர் பிரியா கூறி உள்ளார். இன்றி பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர், ஜெ.குமரகுருபரன், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தொடரில் சென்னை மாநகராட்சியின் மொத்த கடன் எவ்வளவு, வட்டி எவ்வளவு என பாஜக உறுப்பினர் உமா … Read more

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்து போலீசை தாக்கிய காவலாளி கைது

சென்னை சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்து போலீசார் மீது தாக்குதல் நடத்திய காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் அளித்த புகாரின்பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில்இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்தத மனுவை கடந்த 17-ந்தேதி விசாரித்த நீதிபதி, கற்பழிப்பு வழக்கை ரத்து … Read more