மடைதிறந்த பூரண மதுவிலக்கு… குஜராத் மாநிலம் சூரத் – பாங்காக் ‘முதல்’ ஏர் இந்தியா விமானத்தில் அதிகளவில் மது விற்பனை

குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து பாங்காக் சென்ற முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிகளவு மது விற்பனையானதாகக் கூறப்படுகிறது. டிசம்பர் 20 அன்று சூரத்-பாங்காக் இடையே தனது முதல் பயணத்தை துவங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 175 பேர் பயணம் செய்தனர். 98 சதவீத இருக்கைகளில் பயணிகள் இருந்த நிலையில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் இருந்து பயணம் மேற்கொண்ட இந்த பயணிகள் விமானத்தில் தங்களுக்கு வேண்டிய மது வகைகளை அதிகளவு … Read more

டெல்லி குடியரசுத் தினத்தில் அலங்கார ஊர்திகள் சுழற்சி முறையிலேயே பங்கேற்கின்றன! எடப்பாடிக்கு அமைச்சர் சாமிநாதன் பதிலடி

சென்னை: டெல்லி குடியரசுத் தினத்தில் அலங்கார ஊர்திகள் சுழற்சி முறையிலேயே பங்கேற்கின்றன  என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிக்கு அமைச்சர் சாமிநாதன் பதிலடி கொடுத்துள்ளார். 2025 ஜனவரி 26ந்தேதி அன்று டெல்லியில்,  குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கு திமுக அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு  தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் இது வதந்தி என நிராகரித்ததுடன் வதந்திகளை நம்பவேண்டாம் … Read more

1999 கார்கில் போரின் போது ராணுவத்தை எச்சரித்த மேய்ப்பன் தாஷி நம்கியால் லடாக்கில் காலமானார்

1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது பாகிஸ்தானின் ஊடுருவல் குறித்து இந்திய துருப்புக்களை எச்சரித்த லடாக்கைச் சேர்ந்த மேய்ப்பன் தாஷி நம்க்யால், ஆரிய பள்ளத்தாக்கில் காலமானார். போரில் தனது குறிப்பிடத்தக்க பங்கிற்காக கொண்டாடப்பட்ட நம்க்யால், இந்த ஆண்டின் துவக்கத்தில் ட்ராஸில் நடந்த 25வது கார்கில் விஜய் திவாஸ் நிகழ்ச்சியில் அவரது மகள் செரிங் டோல்கருடன் கலந்து கொண்டார். இந்த நிலையில் லடாக்கின் ஆர்யன் வேலேவில் உள்ள அவரது சொந்த கிராமமான கார்கோனில் கடந்த வெள்ளியன்று தனது … Read more

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சிறப்பு நீதிமன்றம் அனுமதி

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம்,   காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, காவேரி பவேஜா, கார்த்தி சிதம்பரம் வியன்னா (ஆஸ்திரியா) மற்றும் இங்கிலாந்து செல்ல தனது நிறுவனம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், அவரது மகளை சந்திக்கவும் அனுமதி வழங்கினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த … Read more

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகன் கதாநாயகன் ஆகிறார்.

மும்பை பிரபல் பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் கடந்த 90 காலகட்டத்தில் பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்தநடிகர் கோவிந்தாவின் வளைந்து ஆடும், நடன அசைவுகளுக்காகவே ரசிகர்கள் பட்டாளம் அதிகம். கோவிந்தா பல ஹிட் படங்களை கொடுத்து தன்னை முன்னிறுத்தி கொண்டதுடன் ஜோதிகா, ரம்பா, லைலா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான ‘3 ரோசஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு கேமியோ என்ட்ரி கொடுத்து ஆடியிருப்பார். அவருடைய மகன் யஷ்வர்தா அகுஜா நாயகனாக தற்போது … Read more

பிரியங்கா காந்தியை தகுதி நீக்கம் செய்யக் கோரி பாஜக பிரமுகர் மனு தாக்கல்

திருவனந்தபுரம் கேரள உயர்நீதிமன்றத்தில் வயநாடு எம் பி பிரியங்கா காந்தியை தகுதி நீக்கம் செய்யக் கோரி பாஜக பிரமுகர் நவ்யா ஹரிதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். அண்மையில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பா.ஜ.க.வை சேர்ந்த நவ்யா ஹரிதாஸ் என்பவர், வயநாடு எம்.பி. பிரியங்கா காந்திக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். நவ்யா தனது மனுவில், ”பிரியங்கா காந்தி தாக்கல் … Read more

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்கள்

நாகப்பட்டினம் இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கிய சம்பவ்ம கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அக்கரைபேட்டையை சேர்ந்த விஜயகுமார் சொந்தமாக பைபர் படகு வைத்திருந்தார். இவரது படகு மூலம் அக்கரப்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார், ராஜேந்திரன், நாகலிங்கம் ஆகியோர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு இரண்டு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் படகை வழிமறித்தது கத்தி மற்றும் கட்டையால் மீனவர்களை தாக்கி மீனவரின் படகில் இருந்த மீன்கள், மீன்பிடி … Read more

நாட்டுடைமை ஆன கருணாநிதி நூல்கள் : அமைச்சரிடம் அரசாணை பெற்ற ராஜாத்தி அம்மாள்

சென்னை தமிழக அமைச்சர் சாமிநாதன் கருணாநிதி நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட  அரசாணையை ராஜத்தி அம்மாளிடம் வழங்கி உள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 188 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 15.32 கோடி நூலுரிமைத் தொகை தமிழக அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. … Read more

இன்றைய திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்

சென்னை இன்று சென்னையில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன சென்னையில் இன்ரு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் தலைமை செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்ட துணைப் பொதுச்செயலாளர்கள், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தி.மு.க. செயற்குழுவில் கீழ்க்கண்ட 12 தீர்மானங்கள் … Read more

திநகரில் வீடு உள்வாங்கியது ஏன் : மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்

சென்னை தி நகரில் ஒரு வீடு உள்வாங்கியது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் தி.நகர் அருகே மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு மாம்பலம் பகுதியில் உள்ள வீடு ஒன்று, மெட்ரோ ரயில் சுரங்க பணி அதிக அழுத்தம் காரணமாக குறிப்பிட்ட இடத்தில் உள்வாங்கியது. அந்நேரம் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம், “மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் … Read more