சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: சுபமுகூர்த்த நாட்கள்  மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து வழக்கம்,  வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்து உள்ளது. வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களிலும்  சேர்த்து மொத்தம் 1230 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. 25/04/2025 (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம் 26/04/2025 (சனிக்கிழமை) மற்றும் 27/04/2025 (ஞாயிறுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் … Read more

இன்று காஷ்மீரில் அனைத்துக் கட்சி கூட்டம்

டெல்லி இன்று காஷ்மீரில்  அனைத்துக்  கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அர்சு அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் பலியானார்கள்.இந்த சம்பவம்  நாட்டையே அதிர வைத்துள்ளது/. எனவே இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து இருந்தன. இதையொட்டிராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட … Read more

எடப்பாடி பழனிச்சாமி அளித்த விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்

சென்னை எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எம் எல் ஏக்களுக்கு அளித்த விருந்தை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்து விட்டன. இந்த தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இணைந்துள்ளடை சமீபத்தில் சென்னை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா உறுதி செய்தார். இந்த. கூட்டணி அமைந்ததை அடுத்து, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று அ.தி.மு.க. … Read more

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் உஉத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. 2007ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுள்ள … Read more

கீறல் விழுந்த ரிக்கார்ட்… குட் பேட் அக்லி படம் ஹிட்டானதற்கு யார் காரணம்? பிரேம்ஜி அமரன் கூறிய பதில்…

அஜித் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலாகிறது. இதுவரை 250 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதுடன் அஜித் படங்கள் இதுவரை ஏற்படுத்திய வசூல் சாதனையை முறியடித்துள்ளது. அதேவேளையில் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜா இசையமைத்த வின்டேஜ் பாடல்களாலேயே இந்தப் படம் வெற்றிபெற்றதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியிருந்தார். ஏற்கனவே இந்தப் படத்தில் … Read more

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் காயம்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த தமிழர்களின் நிலை மற்றும் அவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் பைசரனில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது, அதன் புல்வெளிக்காகவும், கால்நடையாகவும் அல்லது குதிரைவாலி வழியாகவும் மட்டுமே செல்ல முடியும், அங்கு செவ்வாய்க்கிழமை (22-4-25) காலை சுற்றுலாப் பயணிகள் குழு சென்றிருந்தது. தடைசெய்யப்பட்ட பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதக் குழுவின் நிழல் குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், இந்தத் தாக்குதலை நடத்தி ஏராளமானோரை கொன்று … Read more

பஹல்காம் தீவிரவாத தாக்குதலால் சீர்குலைந்த காஷ்மீர் சுற்றுலா… 12 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் ரத்து…

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலா சீசன் உச்சத்தை எட்டிய நிலையில் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தின் சுற்றுலாத் துறை ஒரேநாளில் சீர்குலைந்துள்ளது. இந்த ஆண்டு சுற்றுலா சீசன் தொடங்கியதில் இருந்து களைகட்டிய சுற்றுலா பயணிகளின் வருகை துலிப் தோட்டம் திறந்த 26 நாட்களில் 8.5 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குளிர்காலத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக வரும் ஆகஸ்ட் மாதம் வரை … Read more

பயங்கரவாதிகளை கண்டுபிடித்து அழிக்கவேண்டும் : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

“பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, மத்திய அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அனைவரின் கருத்தையும் கேட்க வேண்டும், மேலும் பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும்” என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பை வழங்கும்” என்றார். “பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க வியாழக்கிழமை (ஏப்ரல் 24) … Read more

பாகிஸ்தான் தூதர்கள் வெளியேற உத்தரவு… பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டது… அட்டாரி எல்லையும் மூடப்பட்டது…

தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் முடிவுக்கு வந்தது. இந்தக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து … Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு வரும் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பம்!

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு வரும் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது என அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர்கள் 30ந்தேதி வரை  பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், ஏற்கனவே 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இடைநிலை பள்ளி மாணவர்களுக்கும் ஆண்டிறுதி தேர்வுகள் முடிவடைந்துள்ளன. தற்போது நடுநிலை பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்த தேர்வுகள் வரும் 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில்,   தமிழகத்தில் வரும் … Read more