வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அன்னதான திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு அரசு ஏற்கனவே அன்னதானம் வழங்கி வருவதால் திருவிழாக் காலங்களில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதி கிடையாது என்று கூறியுள்ளது. வைகாசி புஷ்ப பல்லக்கு மற்றும் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு வடபழனி கோவிலில் அன்னதானம் வழங்க அனுமதிக்கக் கோரி சங்கர் என்பவர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2024 மே மாதம் அறநிலையத் துறையிடம் … Read more