தவறான பிரசாரம்: பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான்! யோகி ஆதித்யநாத் விளக்கம்!

பிரயாக்ராஜ்: திரிவேணி சங்கமத்தில் உள்ள ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  சட்டப்பேரவையில் கூறியுள்ளார். கும்பமேளா நீர் மாசுப்பட்டு உள்ளதாக கூறி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு சட்டப்பேரவையில் பதில் அளித்த யோகி ஆதித்யநாத்,  மகா கும்பமேளாவில் தண்ணீர் மாசுபட்டதாக வெளியான செய்திகளை   நிராகரித்து உள்ளதுடன்,  இது தவறான பிரசாரம், என்று கூறியதுடன் திரிவேணி சங்கம்   நீர் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் பாதுகாப்பானது என்று பக்தர்களுக்கு உறுதியளித்தார். பிரயாகராவில் மகா கும்பமேளா … Read more

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்,  பூமிநாதர் ஆலயம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்,  பூமிநாதர் ஆலயம் அந்தகன் என்னும் அசுரன் தேவலோகம் சென்று இந்திராதிதேவர்களை தொல்லைப்படுத்தி வந்தான். தேவர்கள் யாவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். மகாதேவனான சிவபெருமானின் உதவியை நாடினர். சிவபெருமானும் தேவர்களுக்கு உதவிட முன்வந்தார். கோபக்கனல் கொண்டு உக்கிரத்துடன் எழுந்தார். அந்தகாசுரனை சூலத்தால் கொன்று அழித்தார். அப்போது சிவபெருமானின் நெற்றியிலிருந்து, பூமியில் விழுந்த வியர்வைத் துளியில் இருந்து பூதம் ஒன்று தோன்றியது. அது தன் பசியைத் தணித்துக் கொள்ள யுத்த பூமியில் வீழ்ந்து கிடந்த உடல்களைத் … Read more

வரும் 25 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 25 ஆம் தேதி கூடுகிறது.   வருகிற 25-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் மதியம் 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். அடுத்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி மீண்டும் தமிழக சட்டசபை கூடி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த நாளான மார்ச்-15-ந் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் … Read more

கோலத்தின் மூலம் மும்மொழி கொள்கை எதிர்ப்பு

சென்னை பெண்கள் கோலத்தின் மூலம் மும்மொழ் கொள்கைக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். . தமிழகத்துக்கு  மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆயினும் மத்திய அர்சு அந்த நிதியை விடுவிக்கவில்லை. சமீபத்தில் புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். பல அரசியல் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் கடுமையாக எதிர்ப்பை … Read more

இன்று  செகந்திராபாத் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் ரத்து

சென்னை இன்று செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சிறப்பு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று தெற்கு ரயில்வே ,- “இணைத்தல் ரேக் தாமதமாக இயக்கப்பட்டதால், பின்வரும் ரயில் சேவையை ரத்து செய்யப்படுகிறது: *செகந்திராபாத்தில் இருந்து இரவு 9.10 மணிக்கு ராமநாதபுரம் செல்லும் சிறப்பு மின்சார ரெயில் (வண்டி எண்: 07695) இன்று (பிப்ரவரி 19) ரத்து செய்யப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளது.

வருகை பதிவு குறைந்தால் தேர்வு எழுத  முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம்  மாணவர்களின் வருகை பதிவு குறைவாக இருந்தால் தேர்வெழுத முடியாது என உத்தரவிட்டுள்ளது கல்லூரி மாணவர் ஒருவர் வருகைப் பதிவு குறைவால் பல்கலைக்கழக தேர்வு எழுத அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் , ”வருகை பதிவு குறைவாக உள்ள மாணவர்களை தேர்வெழுத அனுமதிப்பது, முறையாக வருகை பதிவு இருக்கும் மாணவர்களை கேலிக்குள்ளாக்கிவிடும்  ஏற்கனவே கல்வி … Read more

முஸ்லிம்களுக்கு ரம்ஜான் காலத்தில் சலுகை : தெலுங்கானாவை தொடரும் ஆந்திரா

அமராவதி தெலுங்கானா அரசை தொடந்து ஆந்திர அரசு முஸ்லிம்களுக்கு ரம்ஜான் காலத்தில் பணி நேர சலுகை அளித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலங்கானாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு ரமஜான் மாதத்தை முன்னிட்டு மாநிலத்தில் அரசுப் பணியில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஊழியர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே தங்கள் பணியை முடித்துக் கொண்டு செல்லலாம் என அறிவித்தது. அதாவது ரம்ஜான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் மார்ச் 2 முதல் மார்ச் 30 வரையிலான நாட்களில் ஆசிரியர்கள், … Read more

பாரதிதாசன் கவிதையை பதிவிட்டு இந்தியை எதிர்க்கும் முதல்வர்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாரதிதாசன் கவிதையை பதிவிட்டு இந்தி எதிர்ப்பை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையின் கீழ் மும்மொழியை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் இந்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி அவரின் பேச்சுக்கு, தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். நேற்று மும்மொழிக் கொள்கை மற்றும் தமிழகத்துக்கான … Read more

குளிப்பதற்கு தகுதியற்ற திரிவேணிசங்கம நீர் : தேசிய பசுமை தீர்ப்பாயம்

பிரயாக்  ராஜ் திரிவேணி சங்கம நீர் குளிக்க தகுதியற்றது என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கிய உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளாவில், நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.   55 கோடி பேர் இதுவரை புனித நீராடியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இங்கு மேலும் பலர் புனித நீராட வருவார்கள் என்று எதிர்பார்ப்பதால், … Read more

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் மகனுடன் சேர்ந்து விளையாட ஓய்வு முடிவை திரும்ப பெற்றார்

காபூல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது நபி தனது மகனுடன் விளையாட விரும்புவதால் ஓய்வு முடிவை  திரும்ப பெற்றுள்ளார். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான முகமது நபி, எதிர் வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடி வரும் முகமது நபி தனது ஓய்வு முடிவை … Read more