இந்திய தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்களை அடையாளம் கண்டிருப்பதாக என்ஐஏ அறிவிப்பு!

லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் தாக்குதல் நடத்தி, இந்திய தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்களை அடையாளம் கண்டிருப்பதாக தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய 45 பேரின் புகைப்படங்கள் லண்டனில் உள்ள அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளன. அவர்களைப் பற்றிய தகவல்களைத் தருமாறு இந்தியா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியத் தூதரகம் மீதான தாக்குதல், தேசியக் கொடி அவமதிப்பு தொடர்பான 2 மணி நேர வீடியோ காட்சியையும் அதிகாரிகள் … Read more

பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மத மாற்ற தடை சட்டத்தை திரும்பப்பெற கர்நாடக அரசு முடிவு..!

கர்நாடகாவில், முந்தைய பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை திரும்பப்பெற முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவார் தொடர்பான பாடங்களை வரலாற்று பாட புத்தகங்களிலிருந்து அகற்றுவதுடன், பள்ளி பாடத்திட்டத்தில் முந்தைய பாஜக அரசு கொண்டுவந்த அனைத்து மாற்றங்களையும் திரும்பப்பெறவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. தினமும் காலை, பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் இறைவணக்க கூட்டத்தில் இந்திய அரசியல் சாசன முகவுரையை வாசிப்பதை கட்டாயமாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. Source link

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர்..!

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் செவிலியர்களுடன் இணைந்து ரிப்பன் வெட்டி முதலமைச்சர் திறந்து வைத்தார் ரூ.240 கோடியில் 1,000 படுக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் மருத்துவமனை அமைப்பு தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது Source link

“நாடாளுமன்ற வளாகத்தில் வைத்தே பாலியல் தொந்தரவு” – ஆஸ்திரேலிய பெண் எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு

நாடாளுமன்ற வளாகத்தில் வைத்தே தனக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய நாட்டு பெண் எம்.பி. நாடாளுமன்றத்தில் கண்கலங்க தெரிவித்தார். சுயேட்சை எம்.பி-யான லிடியா தோர்ப், லிபரல் கட்சி எம்.பி. டேவிட் வான் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நேற்று நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இன்று மீண்டும் உரையாற்றிய லிடியா தோர்ப், சக்திவாய்ந்த பொறுப்பு வகிக்கும் சிலர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், ஆபாசமாக வர்ணித்ததாகவும் கண்கலங்க தெரிவித்தார். அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப் போவதில்லை எனத் … Read more

தாயை இழந்து காசநோயுடன் பரிதவித்த குழந்தைகளுக்கு நேசக்கரம் வளர்த்து.. படிக்கவச்சி.. திருமணம்..! மதுரைக்காரய்ங்க அன்பு அள்ளுதுல்ல..!

காதல் கணவர் இறந்து விட… உறவுகளைத் தேடி டெல்லியிலிருந்து மதுரை வந்த பெண் காச நோயால் உயிரிழந்ததால் மொழி தெரியாமல் காசநோயோடு தவித்த 2 குழந்தைகளை பராமரித்து , படிக்க வைத்து ஆளாக்கிய மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் ஊழியர்கள், தற்போது சீர்வரிசையுடன் திருமணமும் செய்து வைத்துள்ளனர். தாயை இழந்து தவித்த 2 குழந்தைகளை அரவணைத்து வளர்த்து ஆளாக்கி பெண் குழந்தைக்கு திருமணமும் செய்து வைத்த அரசு மருத்துவர் காந்திமதிநாதன் இவர் தான்..! காதல் … Read more

இஸ்ரேல் ராணுவ வீரரை சுட்டுக்கொன்ற பாலஸ்தீன இளைஞரின் வீட்டை வெடிவைத்து தகர்த்த இஸ்ரேல் பாதுகாப்பு படை..!

இஸ்ரேல் ராணுவ வீரரை சுட்டுக்கொன்ற பாலஸ்தீன இளைஞரின் வீட்டை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெடிவைத்து தகர்த்தனர். ஒசாமா தவீல் என்ற பாலஸ்தீன இளைஞர் கடந்தாண்டு இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரை சுட்டுக்கொன்றார். பிப்ரவரி மாதம் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், நப்ளஸ் நகரில் தாயாருடன் அவர் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அதிகாலை வந்த இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அவரது வீட்டை மட்டும் வெடிவைத்து தகர்த்தனர். வீடுகளை இடிப்பதன் மூலம் உறவினர்களும் தண்டிக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டிவரும் … Read more

இந்திய மல்யுத்த தலைவர் பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகார்.. 4 பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்..!

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் வழக்கில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 4 பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை டெல்லி போலீசார் தாக்கல் செய்தனர். அதில், பாலியல் புகார் தொடர்பாக பிரிஜ் பூஷணுக்கு எதிராக 25 பேர் வாக்குமூலம் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிஜ் பூஷண் மீது சிறுமி ஒருவர் அளித்த பாலியல் புகாருக்கு ஆதாரங்கள் … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு..!

ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் மோதும் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. Source link

பெரு தலைநகர் லிமா அருகே சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான மம்மி கண்டுபிடிப்பு..!

பெரு தலைநகர் லிமா அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சான் மார்கோஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட இந்த மம்மி, கிமு 1500 மற்றும் 1000-க்கு இடையே லிமா பள்ளத்தாக்குகளில் உருவான மஞ்சாய் கலாச்சாரத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. மம்மியின் தலைமுடி மற்றும் மண்டை ஓட்டின் எச்சங்கள் பருத்தி மூட்டையில் சுற்றப்பட்டிருந்ததை முதலில் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள், பின்னர் எஞ்சிய பாகங்களை கண்டறிந்தனர். சோளம், கோகோ … Read more

செந்தில்பாலாஜி இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றம்..!

செந்தில்பாலாஜி இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றம் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதல் பொறுப்பாக மின்துறை ஒதுக்கப்படுகிறது என தகவல் மதுவிலக்கு, ஆயத்தீர்வு துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படுவதாக தகவல் ஆளுநரின் ஒப்புதலுக்காக அரசின் கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் வகித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றி ஒதுக்கீடு மருத்துவ சிகிச்சை பெற்று வரும் செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிப்பார் எனவும் தகவல் Source … Read more