அதிக சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது பிபர்ஜாய்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அதி தீவிர புயலான பிபர்ஜாய், அதிக சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனையொட்டி மீட்பு நடவடிக்கைகளுக்காக முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 4 முதல் 5 மணியளவில் குஜராத்தின் மாண்ட்வி – பாகிஸ்தானின் கராச்சி இடையே பிபர்ஜாய் புயல் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குஜராத் கடலோர பகுதிகளில் வசித்துவந்த சுமார் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்துக்கும் … Read more

பிபர்ஜாய் புயல் எதிரொலி.. அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டதாக பாக்.அரசு அறிவிப்பு

பிபர்ஜாய் புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கையாக பாகிஸ்தானின் சிந்து, கராச்சி ஆகிய மாகாணங்களின் கடலோரப் பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர். கடலோர மாவட்டங்களில் இருந்து சுமார் 66 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். புயலின் உண்மையான பாதிப்பு என்ன என்பது நாளைக்குதான் தெரியும் என்று கூறிய அவர், அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். அனைத்து நிவாரணப்பணிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்தார். புயல் … Read more

ஜம்மு காஷ்மீரில் மர்ம காருக்குள் பதுங்கிய நபர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு.. 2 பேர் சிக்கினர்

ஜம்மு காஷ்மீரில் புட்காம் மாவட்டத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் சந்தேகத்திற்கிடமான செயல்கள் நடப்பதாக சந்தேகம் கொண்டனர். அவர்கள் சரமாரியாக சுட்டதும் காரில் இருந்தவர்கள் இறங்கி தப்பியோடினர். வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் அவர்களை விரட்டிச் சென்றனர். இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காருக்குள் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு,தேடும் பணி நடைபெற்று வருகிறது. Source link

அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழை மற்றும் பெரு வெள்ளத்தால் 21,000 பேர் பாதிப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தினால் 19 கிராமங்கள் மூழ்கியுள்ளதாகவும், பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லக்கிம்பூர் பகுதியில் 20 ஆயிரம் பேரும், தேமாஜியில் ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. திப்ருகார், கோலாகாட் மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. Source link

ரயில் நிலையம் அருகே வெட்டு காயங்களுடன் ஆடை இல்லாமல் ஓடி வந்த பெண்.. மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார்..!

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே வெட்டு காயங்களுடன் உடலில் ஆடை இல்லாமல் ஓடி வந்த பெண்ணை மீட்டு  ரெயில்வே போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்   உடலில் ஆடையின்றி வெட்டுக் காயங்களுடன் ரயில் நிலையம் நோக்கி ஓடிவந்துள்ளார். இதனைக் கண்ட ரயில்வே போலீசார் அவருக்கு ஆடை அணிவித்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை … Read more

டாஸ்மாக் மது குடித்து இருவர் பலியான விவகாரம்: சொத்து தகராறில் மதுவில் சயனைடு கலந்தது அம்பலம்

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் மதுபானம் குடித்ததால் இருவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டிய விவகாரத்தில் சயனைடு கலந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்த நிலையில் உயிரிழந்த பழனிகுருநாதனின் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தத்தங்குடி கிராமத்தில் பழனிகுருநாதன் மற்றும் பூராசாமி ஆகிய இரண்டு பேர் டாஸ்மாக் மதுபானம் அருந்தியதால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், இருவரது உடற்கூறு சோதனையில் சயனைடு கலந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பழனி குருநாதனின் சகோதரர்கள் மனோகர், பாஸ்கர் ஆகியோரிடம் … Read more

‘வார்னர் புரோஸ்’ நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ஹாரி பாட்டரின் மாயாஜால உலகை பிரதிபலிக்கும் பிரமாண்ட ஸ்டூடியோ…!

ஹாரி பாட்டர் திரைப்படங்களில் வரும் மாயாஜால உலகத்தை மெய்பிப்பதைபோல் ஜப்பானில் பிரமாண்ட ஸ்டூடியோவை வார்னர் புரோஸ் (Warner Bros) நிறுவனம் அமைத்துள்ளது. லண்டனில் பத்து ஆண்டுகளுக்கு முன் அந்நிறுவனத்தால்  வடிவமைக்கப்பட்ட ஸ்டூடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்ததை அடுத்து, மேம்படுத்தப்பட்ட ஸ்டூடியோவை டோக்கியோவில் அமைத்துள்ளது. ஆசிய அளவில் ஹாரி பாட்டர் ரசிகர்களை கவரும் விதமான இந்த ஸ்டூடியோ வரும் வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ள நிலையில், ஒரு டிக்கெட்டின் விலை இந்திய மதிப்பில் 3,700 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும், ஆகஸ்ட் மாதம் … Read more

ரயில் தண்டவாளத்தில் டயர்கள் போடப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது… தண்டவாளத்தை கடக்கும் போது அபராதம் விதித்ததால் ஆத்திரம்..!

திருச்சி வாளாடி அருகே ரயில் தண்டவாளத்தின் நடுவில் டயர்கள் போடப்பட்ட விவகாரத்தில் 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரித்து வந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், கார்த்திக் ராஜா, வெங்கடேசன் ஆகிய மூவரை பிடித்து விசாரித்தனர். அப்போது டாஸ்மாக் ஊழியரான வெங்கடேசன், பெரியார் தெருவில் சாலை போட ரயில்வே துறையினர் தடையாக இருந்து வருவதாலும், தண்டவாளத்தை கடந்து செல்லும் போது அடிக்கடி … Read more

பிபர்ஜாய் புயல் கரையை கடக்கும்போது உயிர் இழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் – அமித்ஷா

பிபர்ஜாய் புயல் கரையை கடக்கும்போது உயிர் இழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்று அரசு அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். குஜராத்தின் கட்ச் பகுதிக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே நாளை புயல் கரையை கடக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருடன்  அமித் ஷா காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், புயல் கரையை கடக்கையில் உயிரிழப்புகள் நேரிடக்கூடாதென்றும், அதேநேரத்தில் பொருட்சேதமும் குறைந்த அளவில் இருப்பதை … Read more

இதுவரை எந்த அதிபரும் செய்யாத அளவில் அதிபர் ஜோ பைடன் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு…!

அமெரிக்க வரலாற்றில் இதுவரை எந்த அதிபரும் செய்யாத அளவில் அதிபர் ஜோ பைடன் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு  தன் மீது போலி வழக்குகளை பதிவு செய்துவருவதாக டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க அரசுக்கு சொந்தமான ரகசிய ஆவணங்களை எடுத்துச்சென்ற வழக்கில் மியாமி நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அதிபர் டிரம்ப் தான் குற்றமற்றவன் என வாதாடினார். நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்த டிரம்ப், தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவே தன் மீது போலி வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக … Read more