”பிபர்ஜாய் சூறாவளியால் ஏற்படும் பாதிப்பை சமாளிக்க முப்படைகளும் தயார்…” – அமைச்சர் ராஜ்நாத் சிங்…!

பிபர்ஜாய் சூறாவளியால் ஏற்படும் பாதிப்பை சமாளிக்க முப்படைகளின் தயார் நிலை குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார். மீட்பு பணிகளுக்கு முப்படைகளின் குழுக்கள் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். பிபர்ஜாய் புயல், நாளை பிற்பகல் குஜராத்தின் மாண்ட்வி – பாகிஸ்தானின் கராச்சி இடையே கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குஜராத் கடலோர பகுதிகளில் வசித்துவந்த சுமார் 50 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் … Read more

வட கொரிய அரசிடம் ரூ.290 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த தென்கொரிய அரசு..!

தென்கொரிய அரசின் செலவில் கட்டப்பட்ட தகவல் தொடர்பு அலுவலகத்தை தகர்த்தமைக்காக வட கொரிய அரசிடம் 290 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தென்கொரியா வழக்கு தொடர்ந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை மேம்படுத்தும் நோக்கில், தென்கொரிய அரசின் செலவில், வட கொரியாவின் கேசோங் நகரில் 48 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 2018 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தகவல் தொடர்பு அலுவலகத்தை இரண்டே ஆண்டுகளில் வடகொரிய அரசு வெடி வைத்து தகர்த்தது. அதற்கு நஷ்ட ஈடாக 290 … Read more

கதவை தட்டிய அர்ணாவ்…. கண்ணீருடன் தவிக்கும் நடிகை திவ்யா கதறல்… முதல்வருக்கு கோரிக்கை…!

டி.வி நடிகர் அர்ணாவ் மிரட்டுவதாக குற்றஞ்சாட்டியுள்ள நடிகை திவ்யா, தனக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பு வேண்டி கண்ணீருடன் முதல் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார் சீரியலில் மட்டும் அல்ல சீரியசாக நிஜத்திலும் அழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள டி.வி நடிகை திவ்யா இவர் தான்..! சின்னத்திரை நடிகர் அர்ணவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்ட திவ்யா திருவேற்காட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சொந்தமாக வீடு வாங்கி வசித்து வந்தார். இடையில் அர்னவ்வுக்கு , திவ்யாவுடன் காதல் கசந்ததால் குடும்பத்தில் விரிசல் உருவானது. … Read more

மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் கெமிக்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து – 4 பேர் உயிரிழப்பு

மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் கெமிக்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து வெடித்து தீப்பிடித்ததில், சாலையில் சென்று கொண்டிருந்த 3 வாகன ஓட்டிகள் உள்பட 4 பேர் பலியாகினர். லோனாவாலா-கந்தாலா இடையேயான சாலையில் லாரி சென்றபோது திடீரென விழ்ந்தது. லாரி வெடித்ததில் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட லாரி டிரைவரும், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் 3 பேரும் பரிதாபமாக பலியாகினர். மேலும் லாரியிலிருந்த 2 பேர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் … Read more

நைஜீரியாவில் திருமணத்திற்குச் சென்று விட்டு படகில் திரும்பியவர்கள் நீரில் மூழ்கினர் – 100 பேர் உயிரிழப்பு?

நைஜீரியாவில் நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்ததில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 100 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நைஜீரியாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அண்டை நாடான நைஜரில் உள்ள குவாரா மாநிலத்தில் நடந்த திருமணத்திற்குச் சென்றவர்கள் படகில் சென்று திரும்பினர். அதிகாலை நேரத்தில் திடீரென ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 100 பேர் வரை இறந்திருக்கக் கூடும் என நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை என்றும் கூறிய அதிகாரிகள், குறிப்பிட்ட … Read more

பிபர்ஜாய் புயல்: 30,000 பேர் வெளியேற்றம்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

பிபர்ஜாய் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குஜராத்தின் கடலோர பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள பிபர்ஜாய் புயல், நாளை குஜராத்தின் மாண்ட்வி – பாகிஸ்தானின் கராச்சி இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் போது 135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் குஜராத்தின் செளராஷ்ட்ரா – கட்ச் பிராந்தியத்தின் கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை … Read more

ஒற்றை தேங்காயால் மழையை நிறுத்திய திமுக நிர்வாகி..! அது எப்படி திமிங்கலம் உங்களால் மட்டும் முடியுது

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திமுக சார்பில் நடத்தப்பட்ட கபடி போட்டியில் மழை குறுக்கிட்டதால், மழை நிற்க வேண்டி ஒற்றைத் தேங்காயை திமுக நிர்வாகி வீசினார். அதன் பின்னர் மழை பெய்யாததால் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. கண்ணாடியை திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும் என திரைப்படத்தில் வரும் வசனம் போல சிவகங்கையில் மழை நிற்க வேண்டி ஒத்தை தேங்காயை சாமியை கும்பிட்டு, ஸ்டாலின் பேனருக்கு வெளியே வீசி திமுக நிர்வாகி ஒருவர் மழையை நிறுத்தி விட்டதாக கட்சியினர் கூறுகின்றனர். … Read more

கட்டுப்பாட்டை இழந்து கடலில் தலைகுப்புறக் கவிழ்ந்த சிறிய விமானம்- விமானி உயிர் தப்பினார்

இங்கிலாந்தில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. சவுத் வேல்ஸ் பகுதியில் போர்த்காவ்ல் என்ற இடத்தில் இலகு ரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பறந்தது. பாறைகள் நிறைந்த அந்தப் பகுதியைத் தவிர்த்த விமானி கடலின் மேற்பரப்பில் பறக்க முயற்சிக்கும் போது, விமானம் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. விமானம் தலைகுப்புற விழுந்த நிலையில்,உயிர்தப்பிய விமானி நீந்தி கரையை அடைந்தார். தகவலறிந்த காவல் துறையினர் படகு மூலம் விமானத்தை அடையும் நேரத்தில், விமானத்தின் பெரும் … Read more

ஐயய்யோ.. ஐ டெல் போன் பாக்கெட்டில் வெடித்து ஆபீசர் உடல் கருகியது..! இரவு முழுவதும் சார்ஜ் போட்டா டமால் தான்..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த ஆறுமுகநேரியில் முதல்வர் காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளரின் பாக்கெட்டில் இருந்த ஐ டெல் ஸ்மார்ட் போன் வெடித்து சிதறியதில், அவரது சட்டையில் தீப்பிடித்து உடல் கருகிய அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்ததால், நெஞ்சுப்பகுதி கருகிய நிலையில் சிகிச்சை பெற்று வரும் அரசு அதிகாரி இசக்கியப்பன் இவர் தான்..! தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள தலைவன்வடலி கிராமத்தை சேர்ந்தவர் இசக்கியப்பன். முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக … Read more

உள்நாட்டில் விமானக் கட்டணங்கள் 60 சதவீதம் வரை குறைப்பு – மத்திய அரசின் அறிவுறுத்தல்களை அடுத்து நடவடிக்கை

மத்திய அரசின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, உள்நாட்டில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களில் கட்டணங்களை 60 சதவீதம் வரை விமான நிறுவனங்கள் குறைத்துள்ளன. பல்வேறு விமான நிறுவன உயரதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அண்மையில் ஆலோசனை நடத்தினார். விமான கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும், கட்டணங்களை சீராக வைத்திருத்தல் வேண்டுமென அவர் வலியுறுத்தியிருந்தார். உள்நாட்டு விமான கட்டணங்கள்  60 சதவீதம் வரை குறைக்கப்பட்டாலும், சர்வதேச விமான போக்குவரத்துக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை . … Read more