நீட் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் பிரபஞ்சன்

நீட் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் பிரபஞ்சன் 99.99 சதவீதம் மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற தமிழக மாணவன் பிரபஞ்சன் மே மாதம் 7-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 20 லட்சம் பேர் எழுதினர் தமிழ்நாட்டில் இருந்து 1.44 லட்சம் பேர் தேர்வை எழுதி இருந்தனர் நீட் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 78,693 பேர் தேர்ச்சி அடைந்ததாக அறிவிப்பு Source link

ஜி 20 மாநாடு இந்தியாவின் தலைமையில் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது – ஜெய்சங்கர்

இந்தியாவின் தலைமையிலான ஜி 20 கூட்டமைப்பு மிகப்பெரிய வெற்றியை அடைந்திருப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வாரணாசியில் ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உக்ரைன் போர், ஒரு நிழல் போல, ஜி 20 நாடுகளின் மீது, கவிழும் போதும்,அனைத்து நாடுகளும், இந்தியாவின் கொள்கையின் படி, அரசியலை மறந்து, வளர்ச்சியை இலக்காக வைத்து, ஒற்றுமையாக செயல்படுவதாக, ஜெய்சங்கர் தெரிவித்தார். இதனிடையே இந்த மாநாட்டின் தீர்மானத்தில் உக்ரைன் பற்றிய பகுதிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து … Read more

மத்திய பிரதேசத்தில் அரசு அலுவலக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து..!

மத்தியப் பிரதேச மாநிலம் தலைநகரான போபாலில் சத்புர பவன் என்ற 6 மாடி அரசுக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுப்படுத்த போராடின. தீயை அணைக்க ராணுவம் அழைக்கப்பட்டது. மூன்றாவது மாடியிலிருந்து ஆறாவது மாடி வரை முழுவதும் தீயில் கருகின. இதையடுத்து தீயை அணைக்க விமானப்படையின் உதவி கோரப்பட்டது. தொலைபேசி மூலம் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புஅமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரிடம் முதலமைச்சர் சிவராஜ் சவுகான் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து … Read more

தம்பி நம்ம டிரைவிங் எப்படி ? அக்கா நிறைய வண்டி டேமேஜ்… விளம்பர பெண் எம்.எல்.ஏ சம்பவம்..!

கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை தொடங்கி வைப்பதாக கூறி பேருந்தை ஓட்டிய பெண் எம்.எல்.ஏ தவறுதலாக ரிவர்ஸ் கியர் போட்டதால் பேருந்து மோதி பல வாகனங்கள் சேதம் அடைந்தது. பேருந்தை ஓட்டுவதாக கூறி ரிவர்ஸ் கியர் போட்டு சாலையோரம் நின்றிருந்த வாகனங்களை தட்டித்தூக்கிய பெண் எம்.எல்.ஏ ரூபா கலா இவர் தான் கர்நாடக அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணத்தை மாநில முதல் அமைச்சர் சித்தராமையா தொடங்கி வைத்த நிலையில் கோலார் தங்க வயலில் காங்கிரஸ் … Read more

புளோரிடா கடற்கரையில் ஆனந்த குளியலிட்ட கரடிக் குட்டி நீந்தி வந்ததைக் கண்டு வியப்படைந்த மக்கள்…!

அமெரிக்காவில் புளோரிடா கடற்கரையில், ஒரு கரடிக் குட்டி, ஆனந்த குளியலிட்டதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். புளோரிடாவில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை மக்கள் பலர் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் கரடிக் குட்டி ஒன்று, தண்ணீரில் நீந்தி வந்ததை மக்கள் கண்டனர். மக்களை கண்டதும் அச்சமடைந்த கரடி, நீரில் இருந்து வெளியேறி மணல் திட்டுகளை நோக்கி ஓட்டம் பிடித்து அங்குள்ள புதரில் சென்று மறைந்தது. அப்பகுதியில் நிறைய கரடிகள் இருப்பதாகவும், அவ்வப்போது கரடிகள் இது … Read more

அரசிடம் இருந்து உதவி பெற்று தொழில் தொடங்கும் இளைஞர்கள், மேலும் பல இளைஞர்களுக்கு வேலை வழங்கி வருகின்றனர் – பிரதமர் மோடி

அரசிடம் இருந்து உதவி பெற்று தொழில் தொடங்கும் இளைஞர்கள், மேலும் பல இளைஞர்களுக்கு வேலை வழங்கி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்திய அரசு நடத்தி வரும் வேலைவாய்ப்பு திருவிழாவின் ஒரு பகுதியாக 70 ஆயிரத்து 126 பேருக்கு பணி நியமன ஆணைகளை நாடு முழுவதும் 43 இடங்களில் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை டெல்லியில் இருந்து காணொளி மூலமாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட … Read more

ஓயாமல் சத்தம் போட்ட தாயை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்த பெண்.. போலீஸ் நிலையம் தூக்கிச்சென்றார்..!

ஓயாமல் சத்தம் போட்டு மிரட்டிக் கொண்டிருந்த தாயை கொலை செய்த இளம் பெண், தாயின் சடலத்தை டிராவல் பேக்கில் அடைத்து போலீஸ் நிலையம் தூக்கிச்சென்ற சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது… பெங்களூரு மைக்கோ லேஅவுட் காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் பெண் ஒருவர் டிராவல் பேக்குடன் வந்தார். காவல் நிலையத்தில் இருந்த போலீசாரோ, ஏதோ புகார் அளிக்க தான் அந்தப் பெண் வந்திருக்கிறார் என நினைத்து என்ன பிரச்சனை என அப்ப என்னிடம் கேட்டபோது அந்தப் பெண் … Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்… நெஞ்சு பகுதியில் தீக்காயம் அடைந்தவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!

திருச்செந்தூர் அருகே முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அதிகாரி ஒருவர், தன் மேல்சட்டை பையில் வைத்திருந்த ஸ்மார்ட் ஃபோன் வெடித்து சிதறியதில், அவருக்கு நெஞ்சு பகுதியில் தீ காயம் ஏற்பட்டது. தலைவன்வடலி பகுதியை சேர்ந்த இசக்கியப்பன், நெல்லை மாவட்டத்தில் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை காண இன்று காலை ஆறுமுகநேரி கணேசபுரம் சென்ற அவர் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மேல்சட்டை பையில் வைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட் ஃபோன் பயங்கர சத்தத்துடன் … Read more

தனியார் நிறுவன பேருந்தின் மீது அதிவேகமாக மோதிய இருசக்கர வாகனம்…. 2 இளைஞர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி…!

காஞ்சிபுரம் கம்மாள தெரு சந்திப்பில் தனியார் நிறுவன பேருந்தின் மீது இருசக்கர வாகனம் அதிவேகமாக மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் நிகழ்விடத்திலேயே பலியானார். உணவகம் ஒன்றில் பணியாற்றி வரும் காஞ்சிபுரம் காமாட்சி நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞரும், சின்ன காஞ்சிபுரம் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த அவரது நண்பரான மற்றொரு தினேஷும் இரவு வெளியே சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கம்மாள தெரு சந்திப்பில் திரும்பிய தனியார் … Read more

சீன எல்லைக்கு அருகே 2 புள்ளி 6 பில்லியன் டாலர் மதிப்பில் நீர்மின் திட்ட பணிகளை தொடங்கும் இந்தியா….

சீன எல்லைக்கு அருகே 2 புள்ளி 6 பில்லியன் டாலர் மதிப்பில் சுபன்சிரி நீர்மின் திட்ட பணிகளை இந்தியா தொடங்கவுள்ளது. அசாம் மற்றும் அருணாச்சலப்பிரதேசம் வழியாக செல்லும் பிரம்மபுத்திராவின் கிளை நதியில் கட்டப்பட்டுள்ள சுபன்சிரி நீர்மின் திட்ட பணிகளின் சோதனை ஓட்டம் வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. இதன் முதல் அலகில் வரும் டிசம்பர் இறுதிக்குள் மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கும் என்று திட்டத்தின் நிதி இயக்குனர் கோயல் தெரிவித்துள்ளார். 2003-ல் தொடங்கப்பட்ட இந்த  2 ஜிகாவாட் … Read more