கிரிப்டோ கரன்சியில் 1 லட்சம் முதலீட்டுக்கு மாதம் ரூ.15,000 தருவதாக ஆசைவார்த்தை… 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த கும்பல்

கிரிப்டோ கரன்சியில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 15,000 ரூபாய் தருவதாக ஆசைவார்த்தைக் கூறி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ள சம்பவம் கும்பகோணத்தில் அரங்கேறியுள்ளது. முல்லை நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் ஸ்ரீசாய் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனத்தில், திருவாரூரைச் சேர்ந்த அமானுல்லா 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், தனக்குத் தெரிந்த பலரையும் அந்நிறுவனத்தில் பணம் முதலீடு செய்ய வைத்துள்ளார். நான்கைந்து மாதங்கள் வரை … Read more

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகையே மாற்றவல்லது – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்!

artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகையே மாற்றவல்லது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். லண்டனில் தொழில்நுட்ப வாரம் கருத்தரங்கில் உரை நிகழ்த்திய ரிஷி சுனக், சுகாதாரம் உணவு போன்ற பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு உலகை மாற்றும் என்று தெரிவித்துள்ளார். எந்த ஒரு நாட்டையும் உலகிற்கு தலைமை தாங்கச் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி குறித்து வியப்பு அதிகரிப்பதாக கூறிய இங்கிலாந்து பிரதமர், அமெரிக்கா சீனாவை அடுத்து இங்கிலாந்து … Read more

தமிழக அரசின் வருவாயை ஒரு லட்சம் கோடியாக ஈட்டுவது தொடர்பாக, நாளை வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் – அண்ணாமலை

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை எல்லாம் மூடிவிட்டு, தமிழக அரசின் வருவாயை ஒரு லட்சம் கோடியாக ஈட்டுவதற்கு நாளை பாஜக சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அக்கட்சியின மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஓசூரில் நடைபெற்ற ஒன்பது ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, கள் இறக்க அனுமதிப்பதன் மூலம், தென்னை, பனை மர வளர்ப்பு அதிகமாகி, நிலத்தடி நீராதாரமும் பெருகும் என்றார். Source link

விலைவாசி உயர்வைத் தடுக்க கோதுமை கையிருப்பு வைப்பதற்கு வரம்பு நிர்ணயித்துள்ளது மத்திய அரசு

விலைவாசி உயர்வைத் தடுக்க கோதுமை கையிருப்பு வைப்பதற்கு மத்திய அரசு வரம்பு நிர்ணயித்துள்ளது. கடந்த ஒருமாதத்தில் கோதுமை விலை 8 சதவீதம் உயர்ந்துள்ளது. கோடிக்கணக்கான மக்களின் பிரதான உணவாக உள்ள கோதுமையை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்க மத்திய அரசுஅரசாணை பிறப்பித்துள்ளது. மொத்தக் கொள்முதல் வியாபாரிகள் 3 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை கையிருப்பில் வைக்கலாம் என்றும் சில்லரை வியாபாரிகள் 10 மெட்ரிக் டன் வைத்திருக்கலாம் என்றும் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. கோதுமை ஏற்றுமதிக்கு உள்ள … Read more

தமிழ்நாட்டிற்கான வரிப் பகிர்வாக ரூ.4,825 கோடியை விடுவித்தது மத்திய அரசு…!

நடப்பு நிதியாண்டுக்கான மூன்றாவது தவணை வரிப்பகிர்வாக தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரத்து 825 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. மத்திய அரசு வசூலிக்கும் மொத்த வரி வருவாயில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவை நிதியாண்டிற்கு 14 தவணைகளாக மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, 3ஆவது தவணை வரிப்பகிர்வாக 28 மாநிலங்களுக்கு மொத்தம் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 280 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு 21 ஆயிரம் கோடி ரூபாயும், … Read more

உக்ரைன் – ரஷ்யா பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண பிரிக்ஸ் முயற்சி..!

உக்ரைன்-ரஷ்யா இடையேயான பிரச்சினைக்கு அமைதி தீர்வு காணும் முயற்சியில் பிரிக்ஸ் ஈடுபட்டிருப்பதாக  அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் தென்னாப்பிரிக்கா தெரிவித்துள்ளது.  பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் வகிக்கும் அந்த அமைப்புக்கு, சுழற்சி அடிப்படையில் விரைவில் தென்னாப்பிரிக்க தலைமை வகிக்கவுள்ளது. இந்நிலையில், பிரிக்ஸுக்கான தென்னாப்பிரிக்க பிரதிநிதி அனில் சுக்லால் அளித்த பேட்டியில், உக்ரைன் பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண்பதில் பிரிக்ஸ் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். விரைவில் தென்னாப்பிரிக்க அதிபர் ராம்போசா உள்ளிட்ட … Read more

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு..!

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். மின்விசையை அவர் இயக்கியதும் அணையின் வலது கரை மேல்மட்ட மதகுகள் வழியே காவிரி பெருக்கெடுத்து பாய்ந்து சென்றது. அணையிலிருந்து வெளியேறிய நீரை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர்களை தூவி வரவேற்றனர். மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. தேவைக்கேற்ப நீர் திறப்பு அளவு மாற்றியமைக்கப்படும் என அதிகாரிகள் … Read more

123 மாடி கட்டிடத்தில் ஏற முயன்ற பிரிட்டன் இளைஞர்… கயிறு இல்லாமல் வெறும் கைகளால் ஏறியதால் தடுத்து நிறுத்திய தீயணைப்பு படையினர்…!

தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள உலகின் 6வது மிகப்பெரிய கட்டிடமான 123 மாடி கோபுரத்தில் கயிறு இல்லாமல் ஏற முயன்ற பிரிட்டன் இளைஞரை பாதியில் தீயணைப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். Lotte World Tower கட்டிடத்தின் மீது 24 வயதான George King-Thompson ஏறினார். கயிற்றின் உதவி இல்லாமல் வெறும் கைகளால் அவர் ஏறியதால், 73வது தளத்தில் தடுத்து நிறுத்தி பராமரிப்பு பாதை வழியாக வெளியே அழைத்து வந்தனர். பின்னர் போலீசாரிடம் அவரை தீயணைப்பு படையினர் ஒப்படைத்தனர். … Read more

மும்பை தாராவியில் 7 மாடி குடியிருப்பு வளாகத்தில் பயங்கர தீ விபத்து..!

மும்பையின் தாராவி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில்  தீ விபத்து ஏற்பட்டது. இதில் குழந்தைகள் உட்பட 32 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் சில பெரிய கட்டடங்களும் உள்ளன. அவ்வாறுஉள்ள பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப் பிடித்தது. தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு அனைவரையும் பத்திரமாக மீட்டனர். 32 பேருக்கு மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் Source link

மணிப்பூரில் இணைய சேவைகள் மீதான தடை வருகிற 15ஆம் தேதி பிற்பகல் வரை நீட்டிப்பு!

மணிப்பூரில் கடந்த 24 மணிநேரமாக வன்முறை சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை என்ற நிலையில் அமைதியை மீட்பதற்கான அனைத்து வகை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மணிப்பூரில் இருவேறு இனக்குழுவினர் இடையே மோதல் வெடித்துபெரும் வன்முறையாக வளர்ந்த சூழலில் ராணுவத்தின் உதவியோடு கவவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சுமார் 50 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி 350 அரசு காப்பகங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். சமூக விரோதிகள் சமூக ஊடகங்கள் மூலமாக வதந்திகளையும் போலி வீடியோக்களையும் பரப்புவதைத் தடுக்க 15ம் தேதி … Read more