கொடைக்கானல் சாலையில் சரக்கு போட்ட ஓட்டுநரால் சறுக்கிய ஸ்கார்பியோ…. 50 அடி பள்ளத்தில் பாய்ந்தது…!

கொடைக்கானல் சாலையில் மது போதையில் ஸ்கார்பியோ காரை ஓட்டிச்சென்ற குடிகார மெக்கானிக் ஒருவர், அதிவேகத்தால் காருடன் 50 அடி பள்ளத்திற்குள் பாய்ந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. போதையில் வாகனம் ஓட்டிய தப்புக்கு , தண்டனையாக 3 மணி நேரம் ஸ்டியரிங்கிற்குள் கால் சிக்கி உயிருக்கு போராடிய சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி… குளிருக்கு இதமாக ஒரு பெக் சாப்பிடுவோம் என்று ஆரம்பித்து மூக்குமுட்ட குடித்து விட்டு கொடைக்கானல் சாலையில் ஸ்கார்பியோவுடன் 50 அடி பள்ளத்திற்குள் பாய்ந்த … Read more

டெல்லியில் அமல்படுத்தப்பட்ட அவசர சட்டம்.. விரைவில் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் – முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் அமல்படுத்தப்பட்ட அவசர சட்டம் இப்போதே தடுத்து நிறுத்தப்படாவிட்டால் விரைவில் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் தொடர்பாக துணைநிலை ஆளுநருக்கும் டெல்லி அரசுக்கும் மோதல் நீடித்து வந்த நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அரசுக்கு சாதகமாக இருந்தது. இதனையடுத்து மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்து அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டது. மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லியில்  ஆம் ஆத்மி கட்சி சார்பில் … Read more

2000 ரூபாய் நோட்டுக்கு 15 சதவீதம் கமிஷன் தருவதாக ரூ 1.27 கோடி அபேஸ்…. மொத்தமா போச்சி… தவிக்கும் வியாபாரி…!

2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை 500 ரூபாய் நோட்டுக்களாக மாற்றித்தந்தால் 15 சதவீதம் கமிஷன் தருவதாக ஆசை காண்பித்து, கோவை நகை வியாபாரியிடம் 1 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுக்களை பறித்துக் கொண்டு ஓடிய பெண் ரியல் எஸ்டேட் புரோக்கர் உள்ளிட்ட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர் கட்டு கட்டுக்களாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள இந்த 500 ரூபாய் நோட்டுக்களை காரில் வந்து அள்ளிச்சென்ற அபேஸ் கும்பல் இவர்கள் தான்..! … Read more

சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி….!

ஆந்திராவில் நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்பக்கம் அதிவேகமாக வந்து மோதிய கார் சுக்குநூறாக நொறுங்கியதில், ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விஜயவாடாவைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தினர் 8 பேர், ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, காரில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து நேரிட்டது. காரை ஓட்டி வந்தவர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், நல்லஜார்லா என்ற இடத்தின் அருகே நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த லாரியின் … Read more

மனிதர்கள் பயணிக்கக் கூடிய முதல் மின்சார பறக்கும் தட்டு அறிமுகம்… மணிக்கு 50 கி.மீ வேகத்தில் 200 மீ உயரம் வரை பறக்கும்…!

சீனாவின் ஷென்செனில் மனிதர்கள் பயணம் செய்யக்கூடிய வகையிலான முதல் மின்சார பறக்கும் தட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டோனட் வடிவிலான பறக்கும் தட்டு நிலத்திலும், நீரிலும் செங்குத்தாக புறப்பட்டு தரையிறங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார பறக்கும் தட்டு, மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில், சுமார் 200 மீட்டர் உயரம் வரை பறக்கக்கூடியது. 12 புரொப்பலர் பிளேடுகள் அமைப்புடன் கூடிய இவ்வாகனம் 15 நிமிடங்கள் வரை செயல்படும். தற்போது சுற்றுலா, விளம்பர நிகழ்ச்சிகளுக்காக பயன்படும் இவ்வாகனம், பயணிகள் பயன்பாட்டுக்கு … Read more

ம.பி.யில் நர்மதை ஆற்றில் பூஜைகள் செய்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி

மத்திய பிரதேசத்தில் நர்மதை ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியாங்கா காந்தி தொடங்கினார். மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜபல்பூர் மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து நர்மதைக் கரையில் பிரியங்கா வழிபாடு செய்தார். இதைத்தொடர்ந்து கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பின்றி உள்ளதாக கூறினார். மக்களை … Read more

ரஷ்ய படைகளுக்கு எதிரான எதிர் தாக்குதலை தீவிரப்படுத்தும் உக்ரைன்

ரஷ்ய படைகளுக்கு எதிரான எதிர்தாக்குதலில், டொனட்ஸ்க் பிராந்தியத்தை சேர்ந்த நான்காவது ஊர் ஒன்றை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 3 ஊர்களை விடுவித்திருப்பதாக கூறி இருந்த நிலையில், தற்போது ஸ்டோரோஷீவ் என்ற ஊரையும் மீட்டுள்ளதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன. அந்த பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இருதரப்புக்கும் இடையே 25 இடங்களில் கடும் சண்டை நடந்ததாகவும் அதில் தங்களுக்கு முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் உக்ரைன் கூறியுள்ளது. ரஷ்யா தனது கிழக்கு பகுதியில் வான் பாதுகாப்பை அதிநவீனப்படுத்தியுள்ளதாக … Read more

பிபர்ஜோய் புயல் : அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி முக்கிய உத்தரவு

அதி தீவிர பிபோர்ஜோய் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக டெல்லியில் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார். அதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்றனர். குஜராத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும், தயார் நிலை குறித்தும் பிரதமர் அவர்களிடம் கேட்டறிந்தார். புயலால் மின்சாரம், தொலைதொடர்பு, குடிநீர் போன்ற அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சீரமைக்கும் … Read more

பெண்கள் மற்றும் சிறுவர்களை தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்திய பாகிஸ்தானின் சதித்திட்டத்தை வெற்றிகரமாக முறியடித்த இந்திய ராணுவம்..!

பெண்கள் மற்றும் சிறுவர்களை தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தி, நமது மண்ணில் தீவிரவாதத்தை பரப்ப நினைத்த, பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. தீட்டிய சதித்திட்டத்தை, இந்திய ராணுவத்தினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். மத்திய பாஜக அரசின் தொடர் நடவடிக்கைகளால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதம் குறைந்து வரும் நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர், அந்நாட்டு உளவுத்துறையினர் தங்கள் சதித்திட்டத்தை நிறைவேற்ற புதியவழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். இந்தியாவின் நடப்பு மற்றும் ரகசிய தகவல்களை பரிமாறவும், போதைப்பொருள் கடத்தவும், சில சமயங்களில் ஆயுதங்களைக் கடத்தவும்.பெண்கள், யுவதிகள், … Read more

கேரளாவில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் பலி

கேரள மாநிலம் கண்ணூரில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் உயிரிழந்தார். நௌஷாத்னு – சீஃபா தம்பதி பஹ்ரைனில் வேலை செய்து வரும் நிலையில், அவர்களது மகன் நிஹால் முழப்பிலங்காட்டில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நிஹால் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திடீரென காணாமல் போனதால் உறவினர்கள் அவனை  தேடியுள்ளனர். வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள புதர் பகுதியில் சிறுவனின் உடல் இருப்பதாக கிடைத்த … Read more