தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது – தமிழக அரசு <!– தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது – தமி… –>

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நியூட்ரினோ துகள் மற்ற துகள்களுடன் இணைந்து, தனித்து செயல்பட்டால் எவ்விதமான வேதியியல் மாற்றத்தைத் தரும் என்பதை ஆய்வு செய்வதே நியூட்ரினோ திட்டமாகும். தேனி மாவட்டம் போடி அருகே மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில், மேற்கு தொடர்ச்சி … Read more

வனத்துறையின் 1080 ஏக்கர் நிலத்தில் நகர்ப்புறப் பூங்கா அமைக்கும் நாகர்ஜுனா <!– வனத்துறையின் 1080 ஏக்கர் நிலத்தில் நகர்ப்புறப் பூங்கா அமை… –>

தெலங்கானாவின் மேட்சல் மாவட்டத்தில் வனத்துறையின் ஆயிரத்து எண்பது ஏக்கர் நிலத்தைத் தத்தெடுத்துள்ள நடிகர் நாகர்ஜுனா, அதில் தனது தந்தை நாகேஸ்வர ராவ் பெயரில் நகர்ப்புறப் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். பசுமை இந்தியா திட்டத்தில் வனத்துறை நிலங்களில் மரங்களை வளர்த்துப் பூங்காக்களை உருவாக்கத் தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கிச்சேர்லா என்னுமிடத்தில் 1080 ஏக்கர் நிலத்தில் நாகேஸ்வர ராவ் பெயரில் நகர்ப்புறப் பூங்கா அமைக்க நாகர்ஜுனா அடிக்கல் நாட்டினார். இங்கு ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. … Read more

திருமணம் முடிந்து 17 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு கருவுற்றிருந்த பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் காலாவதியான மாத்திரைகள் கொடுக்கப்பட்டதால் பரபரப்பு <!– திருமணம் முடிந்து 17 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு கரு… –>

ராணிப்பேட்டையில் 17 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு கருவுற்றிருந்த கர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் காலாவதியான மாத்திரைகள் கொடுக்கப்பட்ட அலட்சிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சோளிங்கர் அடுத்த ரெண்டாடி பகுதியைச் சேர்ந்த அம்பிகா, 17ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு கருவுற்று 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். கடந்த 14-ந் தேதி திடீரென காய்ச்சல் வந்து அம்பிகாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தாம் வழக்கமாக பரிசோதனைக்கு செல்லும் கொடைக்கல் மருத்துவமனைக்கே சென்ற அம்பிகாவுக்கு பாரசிட்டமல், அமாக்சிலின், சி.பி.எம். உள்ளிட்ட மாத்திரைகள் … Read more

லயோலா கல்லூரியில் ஹிஜாபுக்கு தடை.. மாணவிகள் போராட்டம்.. <!– லயோலா கல்லூரியில் ஹிஜாபுக்கு தடை.. மாணவிகள் போராட்டம்.. –>

விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரிக்குள் அனுமதிக்க  நிர்வாகம் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த இரு மாணவிகள், தங்கள் வகுப்புகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரியில் பாரபட்சமில்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீறுடை என்ற விதி அமலில் இருக்கும் நிலையில் ஹிஜாப்பை அகற்றி விட்டு சீறுடையுடன்வந்தால் மட்டுமே வகுப்புகளுக்குள் செல்லவேண்டும் என்று கூறிய நிர்வாகம் கல்லூரிக்குள் மாணவிகள் ஹிஜாப்புடன் நுழைய … Read more

வீடு வீடாக நோட்டமிட்டு பெட்ரோல் திருடிய மர்ம நபர்கள்.. சிசிடிவி காட்சிகளைப் பார்த்து போலீசாரை வரவழைத்த வீட்டு உரிமையாளர்.. தப்பி ஓடிய திருடர்கள்.. <!– வீடு வீடாக நோட்டமிட்டு பெட்ரோல் திருடிய மர்ம நபர்கள்.. ச… –>

மயிலாடுதுறையில் மர்ம நபர்கள் வீட்டை நோட்டமிடுவதை சிசிடிவி கேமராவில் கவனித்த வீட்டு உரிமையாளர், போலீசாருக்குத் தகவல் அளித்து வரவழைத்ததும், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். பெசன்ட் நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்ததால் அப்பகுதி மக்கள் 18 இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொறுத்தினர். நள்ளிரவில் வீட்டிற்கு வெளியே சத்தம் வருவதை கவனித்த குடியிருப்புவாசி ஒருவர், சிசிடிவி கேமரா காட்சிகளை தனது செல்போனில் பார்த்த போது 3 இளைஞர்கள் ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து பெட்ரோலைத் … Read more

ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கி ஒருவர் உயிரிழந்ததால் லிட்டில் பே கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரைகள் மூடல் <!– ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கி ஒருவர் உயிரிழந்ததால் லிட்டில்… –>

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள லிட்டில் பே கடலில் நீச்சலில் ஈடுபட்டிருந்த ஒருவர், சுறா தாக்கி நேற்று உயிரிழந்ததையடுத்து அந்த கடற்கரை உட்பட சுற்றுப்பகுதியில் அமைந்துள்ள கடற்கரைகளும் மூடப்பட்டுள்ளன. அந்நாட்டில் கடலில் சுறா தாக்கி ஒருவர் உயிரிழந்திருப்பது 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான்  நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் லிட்டில் பே கடலில் உயிரிழப்பை ஏற்படுத்திய அந்த ஆக்ரோஷ சுறாவை ஆழ்கடல் நோக்கி திசை திருப்ப அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  சுறாவின் வருகை டிரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  … Read more

கோட்டயம் பிரதீப் மறைவுக்கு கேரள முதலமைச்சர், நடிகர், நடிகைகள் அஞ்சலி <!– கோட்டயம் பிரதீப் மறைவுக்கு கேரள முதலமைச்சர், நடிகர், நடிக… –>

பிரபல மலையாள நடிகரான கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61. தட்டதின் மறயத்து என்ற மலையாளப் படத்தின் மூலம் பிரபலமடைந்த அவர் தமிழிலிலும் விண்ணைத் தாண்டி வருவாயா ,ராஜா ராணி, மற்றும் நண்பேண்டா உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். உடல்நலம் சரியில்லாத நிலையில் கோட்டயம்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மாரடைப்பால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி சடங்கில் மலையாள திரைப்பட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி … Read more

பாஜ.க தேர்தல் பிரச்சாரத்தில் குவா.. குவா..! வேட்பாளருக்கு பெண் குழந்தை <!– பாஜ.க தேர்தல் பிரச்சாரத்தில் குவா.. குவா..! வேட்பாளருக்கு… –>

தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் நகராட்சி தேர்தலில் பாரதியா ஜனதா கட்சி சார்பில் களமிறங்கிய  நிறைமாத கர்ப்பிணியான வேட்பாளருக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண் குழந்தை பிறந்தது.   தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு குமந்தாபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரேவதி பாலீஸ்வரன். நிறைமாத கர்ப்பிணியான இவர் வேட்புமனு தாக்கல் செய்தது முதலே கடையநல்லூர் நகராட்சி 1 வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் … Read more

பிரேசில் நாட்டில் தொடர் கனமழையால் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு <!– பிரேசில் நாட்டில் தொடர் கனமழையால் 50க்கும் மேற்பட்ட இடங்க… –>

பிரேசில் நாட்டில், மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபோலிஸ் நகரில் 90 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. பெட்ரோபோலிஸ் நகரில் ஒரு மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை 6 மணி நேரத்திலும், இரண்டே மணி நேரத்தில் 24 சென்டிமீட்டர் அளவுக்கும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவுகளில் சிக்கி உயிரிழந்த 104 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. காணமல் போன 35 பேரைத் … Read more

ஐதராபாத்தில் மணி ஹெய்ஸ்ட் பாணியில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட கும்பல் கைது <!– ஐதராபாத்தில் மணி ஹெய்ஸ்ட் பாணியில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட க… –>

நெட்பிளிக்சில் வெளியான மணி ஹெய்ஸ்ட் வெப்தொடரால் ஈர்க்கப்பட்டு ஆட்கடத்தலில் ஈடுட்ட கும்பலை ஐதராபாத் காவல்துறையினர் கைது செய்தனர். வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி வெளியான அந்த தொடரால் கவரப்பட்ட ஐதராபாத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஒரு பெண் உட்பட 4 பேருடன் இணைந்து ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஐதராபாத்தில் பூ வியாபாரம் செய்து வரும் பிரசாந்த் என்பவரை காணவில்லை என அவரது தாய் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த சமயத்தில் பிரசாந்தின் சகோதரரை தொடர்பு கொண்டு கடத்தல் … Read more