தமிழகத்தில் ஒரே நாளில் 1,252 பேருக்கு கொரோனா தொற்று.. 6 பேர் பலி <!– தமிழகத்தில் ஒரே நாளில் 1,252 பேருக்கு கொரோனா தொற்று.. 6 ப… –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, ஆயிரத்து 252 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 285 பேருக்கும், கோவையில் மேலும் 214 பேருக்கும், செங்கல்பட்டில் 105 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 4 ஆயிரத்து 768 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 6 பேர் உயிரிழந்த நிலையில், 23 ஆயிரத்து 772 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.   Source link

விரைவில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலைநாள் திட்டம் அமல் – பெல்ஜியம் அரசு <!– விரைவில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலைநாள் திட்டம் அமல… –>

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலைநாள் என்ற திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக பெல்ஜியம் அரசு அறிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் சோதனை அடிப்படையில் 4 நாள் வேலைத் திட்டத்தை ஸ்காட்லாந்து கொண்டு வந்தது. அதேபோல், ஸ்பெயின், ஐஸ்லாந்து, ஜப்பானும் இத்திட்டத்தை அறிவித்திருந்தன. இந்நிலையில், 4 நாட்கள் வேலை திட்டத்திற்கு மெல்ஜியம் அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் இத்திட்டம் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது குறித்து தெரிவித்த அந்நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் … Read more

முன் பகை காரணமாக ஹோட்டல் உரிமையாளர் மீது ரவுடி கும்பல் சரமாரி தாக்குதல்.. <!– முன் பகை காரணமாக ஹோட்டல் உரிமையாளர் மீது ரவுடி கும்பல் சர… –>

தெலங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் முன் பகை காரணமாக சிறிய ஹோட்டல் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் பட்டப்பகலில் தாக்குதல் நடத்தி ரவுடி கும்பல் ஒன்று  அட்டகாசத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. நிஜமாபாத்தின் ஆட்டோ நகரில் உள்ள ரஜாக் என்ற அந்த ஹோட்டல் மீது ரவுடி கும்பல் பெரிய கற்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதனை தடுக்க வந்த டீ மாஸ்டரையும் , ஹோட்டல் உரிமையாளரையும் கட்டைகளால் சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளரும் அவரது நண்பர்களும் … Read more

விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை, பயிரை சேதப்படுத்தாமல் வரப்பு வழியே நடந்து சென்ற அதிசயம்.. <!– விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை, பயிரை சேதப்படுத… –>

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை, பயிரை சேதப்படுத்தாமல் வரப்பு வழியே நடந்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.வெல்லிமலைபட்டினம் விராலியூர் பகுதியில் அதிகளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்ணீர் குடிக்க காட்டுக்குள் இருந்து வந்த ஒற்றை யானை ஊருக்குள் புகுந்த நிலையில், விளை நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சின்ன வெங்காயத்தை சேதப்படுத்தாமல் வரப்பு வழியே காட்டுப் பகுதிக்கு சென்றது.இதனை அங்கிருந்த நபர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.  Source link

வெளிநாடுகளுக்கு கடத்த துணிப்பைகளில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான குரங்குகள் மீட்பு.. <!– வெளிநாடுகளுக்கு கடத்த துணிப்பைகளில் கட்டி தொங்கவிடப்பட்டி… –>

தாய்லாந்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக துணிப்பைகளில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த குரங்குகளை மக்கள் விடுவித்தனர். சராபுரி (Saraburi) மாகாணத்தில் உள்ள ஆளில்லாத வீட்டில் இருந்து குரங்குகளின் சத்தம் வருவதை கவனித்த கிராம மக்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு, நூற்றுக்கணக்கான குரங்குகள் தனித்தனி துணிப்பைகளில் வைத்து கட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், அதிகாரிகள் வருவது வரை தாமதிக்காமல் குரங்குகளை அவிழ்த்து விட்டனர். பெட்டியில் வைத்து அடைக்கப்பட்டிருந்த 29 குரங்குகளை வனத்துறையினர் மீட்டு உயிரியல் காப்பகத்தில் சேர்த்தனர். … Read more

ஹிஜாப் குறித்துச் சமூக ஆர்வலர் தாக்கல் செய்த மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி <!– ஹிஜாப் குறித்துச் சமூக ஆர்வலர் தாக்கல் செய்த மனு கர்நாடக … –>

கல்வி நிலையங்களுக்கு மாணவியர் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்கக் கோரிய மனுக்களில் ஒன்றைத் தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றம், மற்ற மனுக்களையும் திரும்பப் பெற்றுப் புதிதாக மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகத்தில் கல்வி நிலையங்களுக்குள் ஹிஜாப் அணிந்து செல்லத் தடை விதித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மாணவியர், சமூக ஆர்வலர் எனப் பலரும் வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கில் ஹிஜாப்போ, வேறெந்த மதச் சார்புள்ள உடையோ அணிந்து செல்ல இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த … Read more

யார் யாருக்கு கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்? <!– யார் யாருக்கு கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்? –>

யார் யாருக்கு கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. சளி, காய்ச்சல், தொண்டை வலி மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் கொண்ட நபர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள், கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்கள், வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் இந்தியா வருபவர்களில் 2 சதவீதம் பேர் ரான்டம் முறையில் பரிசோதிக்கப்படுபவர். வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகள் … Read more

மெக்சிகோவில் அன்மையில் அடுத்தடுத்து 5 செய்தியாளர்கள் சுட்டுக் கொலை; நாடாளுமன்றக் கூட்டத்தொடரை குறுக்கிட்டு பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் <!– மெக்சிகோவில் அன்மையில் அடுத்தடுத்து 5 செய்தியாளர்கள் சுட்… –>

மெக்சிகோவில் அன்மையில் 5 செய்தியாளர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரை குறுக்கிட்ட பத்திரிக்கையாளர்கள், உயிரிழந்த தங்கள் சகாக்களுக்கு நீதி வழங்குமாறு கோஷம் எழுப்பினர். கடந்த ஒன்றரை மாதத்தில் குற்றங்கள் அங்கு தொடர்பான செய்திகளை சேகரிக்கும் செய்தியாளர்கள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து நாடு தழுவிய போராட்டங்களை பத்திரிக்கையாளர்கள் நடத்தினர். நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள், கூட்டத்தொடரை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Source link

காங்கிரஸ் அரசு எப்போதும் விவசாயிகளை ஏமாற்றியதற்கு வரலாறே சாட்சி – பிரதமர் பேச்சு <!– காங்கிரஸ் அரசு எப்போதும் விவசாயிகளை ஏமாற்றியதற்கு வரலாறே … –>

விளைபொருள் விலை நிர்ணயத்துக்கான சுவாமிநாதன் குழுப் பரிந்துரைகளை காங்கிரஸ் ஆட்சியில் கிடப்பில் போட்டதாகவும், பாஜக அரசு செயல்படுத்தியதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பஞ்சாபின் அபோகரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாட்டுப் பற்றுள்ள, மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறையுள்ள அரசு பஞ்சாபுக்குத் தேவை எனத் தெரிவித்தார். காங்கிரஸ் எப்போதும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்பதற்கு வரலாறே சாட்சியாகும் எனக் குறிப்பிட்டார். உத்தரப்பிரதேசம், பீகாரில் இருந்து பஞ்சாபுக்கு வருவோர் குறித்து சரண்ஜித் சிங் பேசிய கருத்துக்குப் பதிலளித்த பிரதமர், குரு … Read more

7 ஆண்டுகள் பொங்கலுக்கு தரமான பரிசு தொகுப்பு வழக்கப்பட்டதாக ஓபிஎஸ் பேச்சு <!– 7 ஆண்டுகள் பொங்கலுக்கு தரமான பரிசு தொகுப்பு வழக்கப்பட்டதா… –>

அதிமுக ஆட்சியின் போது 7 ஆண்டுகள் பொங்கலுக்கு தரமான பரிசு தொகுப்பு வழக்கப்பட்டதாகவும், தற்போது திமுகவால் வழங்கப்படும் அரிசியை கொடுத்தால் மாடு கூட முறைத்து பார்ப்பதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சிகளில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார்.  Source link