உக்ரைன் – இந்தியா விமானங்கள் கட்டுப்பாடு நீக்கம் <!– உக்ரைன் – இந்தியா விமானங்கள் கட்டுப்பாடு நீக்கம் –>

இந்தியா – உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை, இருக்கைகள் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இருந்த கட்டுப்பாடுகளை விமானப் போக்குவரத்து அமைச்சகம் நீக்கியுள்ளது. கொரோனா சூழலில் நாடுகளிடையே ஒரு நாளில் இயக்கும் விமானங்கள் எண்ணிக்கை, இருக்கைகள் எண்ணிக்கை ஆகியன குறித்துத் தற்காலிக உடன்பாடுகள் செய்துகொள்ளப்பட்டன. உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் படையெடுக்கக் கூடும் எனக் கருதப்படுவதால், அங்குள்ள இந்தியர்கள் நாடு திரும்புவதற்காக வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக உக்ரைன் – இந்தியா இடையே விமானங்கள் … Read more

வாக்குச்சாவடி மையங்கள் நேரலை மூலம் கண்காணிக்கப்படும் – சென்னை மாநகராட்சி ஆணையர் <!– வாக்குச்சாவடி மையங்கள் நேரலை மூலம் கண்காணிக்கப்படும் – செ… –>

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு சென்னையிலுள்ள வாக்குச்சாவடி மையங்கள் நேரலை முறை மூலம் கண்காணிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபடும் வகையில் கூடுதலாக 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை துவக்கி வைத்து பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிகளை மீறி போஸ்டர், ஸ்டிக்கர் ஒட்டும் வேட்பாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 5ஆயிரம் ரூபாய் வரை அவர்களது தேர்தல் செலவில் சேர்க்கப்படும் என்றார். பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்க, … Read more

உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை விலக்கியதாக ரஷ்யா ஏமாற்றுகிறது – அமெரிக்கா <!– உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை விலக்கியதாக ரஷ்யா ஏமாற்ற… –>

உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டதாக ரஷ்யா ஏமாற்றுவதாகவும், எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கக் கூடும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் பேசிய அமெரிக்க அதிபர் மாளிகைச் செய்தித் துறைச் செயலர் ஜென் சாகி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க இன்னும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். டான்பாஸ் புதைகுழி பற்றிய அறிக்கை போன்றவை உக்ரைனுக்குள் ஊடுருவுவதற்கான சாக்குப் போக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டதாக ரஷ்யா கூறுவதை … Read more

உ.பியில் திருமண நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்த 13 பெண்கள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு <!– உ.பியில் திருமண நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்த 13 பெண்கள் க… –>

உத்தரபிரதேசம் மாநிலம் குஷி நகரில் திருமணத்திற்கான கொண்டாட்டத்தின் போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் விழுந்து 13 பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெபுவா நவுராங்கியா பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது கிணற்று ஸ்லாப்பின் மீது ஒரே நேரத்தில் பலர் அமர்ந்திருந்ததால் பாரம் தாங்காமல் பலகை உடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், 13 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். … Read more

வினாத்தாள் கசிவு- 4 பேர் மீது வழக்கு <!– வினாத்தாள் கசிவு- 4 பேர் மீது வழக்கு –>

திருவண்ணாமலையில் பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், தனியார் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போளூரிலுள்ள ஆக்சிலியம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், அலுவலக பணியாளராக பணியாற்றி வரும் ஜெனிபர் என்பவர் பத்தாம் வகுப்புகான கணிதத் தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே செல்போன் மூலம் படம் பிடித்து கணித ஆசிரியர் பிரசாந்திற்கு கொடுத்த நிலையில், அதனை ஆசிரியர் பிரசாந்த் மாணவர்களுக்கு பகிர்ந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை … Read more

உ.பி.,ரயில் நிலையத்தில் உடைமைக்குள் 426 ஆமைகளை மறைத்து எடுத்துச் சென்ற நபர் கைது <!– உ.பி.,ரயில் நிலையத்தில் உடைமைக்குள் 426 ஆமைகளை மறைத்து எட… –>

உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் ரயில் நிலையத்தில் உடைமைக்குள் ஆமைகளை மறைத்து எடுத்து வந்த ஒருவனை ரயில்வே போலீசார் கைது செய்தனர். ரயில் நிலையத்தில் போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் தனது பைக்குள் 426 ஆமைகளை வைத்திருந்தான். இது தொடர்பாக அவனிடம் போலீசார் விசாரித்தபோது, மேற்குவங்கத்தில் அவற்றை விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்வதாக கூறியுள்ளான். இதையடுத்து அவனைக் கைது செய்த போலீசார், ஆமைகளை பறிமுதல் செய்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். Source link

ஈரோடு அம்மாபேட்டை பேரூராட்சி 2வது வார்டு திமுக வேட்பாளர் மரணம் <!– ஈரோடு அம்மாபேட்டை பேரூராட்சி 2வது வார்டு திமுக வேட்பாளர் … –>

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சி 2வது  வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அழகேசன் மாரடைப்பால் உயிரிழந்தார். சுந்தராம்பாளையத்தை சேர்ந்த அழகேசன்  தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் டீ கடையில் டீ குடித்து விட்டு வீட்டிற்கு சென்றபோது மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அழகேசனை அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அழகேசன் வரும் வழியிலேயே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதேபோல், அத்தாணி … Read more

இந்தியாவில் புதிதாக 30,757 பேருக்கு கொரோனா தொற்று உறுதி <!– இந்தியாவில் புதிதாக 30,757 பேருக்கு கொரோனா தொற்று உறுதி –>

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று, சற்று அதிகரித்து 30 ஆயிரத்து 757 ஆக பதிவாகி உள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 541 பேர் உயிரிழந்திருப்பதுடன், 67 ஆயிரத்து 538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம்  2 புள்ளி 61 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 3 லட்சத்து 32 ஆயிரத்து 918 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.  Source link

ராஜபாளையம் அருகே யானை தந்தம் கடத்தல் கும்பல் கைது.. இரண்டு தந்தங்கள் பறிமுதல்.! <!– ராஜபாளையம் அருகே யானை தந்தம் கடத்தல் கும்பல் கைது.. இரண்ட… –>

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே யானை தந்தம் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடமிருந்து சுமார் 10 லட்சம் மதிப்பிலான இரண்டு தந்தங்களை பறிமுதல் செய்தனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், புல்பத்தி காட்டுப்பகுதியில் 2 யானை தந்தங்கள் வனத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், யானையை கொன்று வேட்டையாடிய கும்பலை தேடி வருகின்றனர். வனகுற்றங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து … Read more

பிரேசில் நாட்டில் தொடர் கனமழை.! வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்வு <!– பிரேசில் நாட்டில் தொடர் கனமழை.! வெள்ளம் மற்றும் நிலச்சரிவ… –>

பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது. மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபோலிஸ் நகரில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏராளமான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. மொரோ டா ஆஃபிசினாவில் 80 வீடுகள் வரை நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 300-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை … Read more