மேகாலயாவில் அனுமதியின்றி வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட வெடிபொருள் பறிமுதல் <!– மேகாலயாவில் அனுமதியின்றி வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட … –>

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட 305 கிலோ ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 24 அலுமினிய எலக்ட்ரானிக் டெட்டனேட்டர் பாக்கெட்டுகளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். மேகாலயாவின் ரி-போய் மாவட்டத்தின் வழியாக வெடிமருந்து கடத்திச் செல்லப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பைர்னிஹாட் போலீஸ் அவுட்போஸ்ட் அருகே படைப்பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தச் சாலையில் வந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் 305 கிலோ ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 24 அலுமினிய எலக்ட்ரானிக் டெட்டனேட்டர் … Read more

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு… அரசு ஒதுக்கீட்டின் கீழ் 7254 இடங்கள் நிரம்பின <!– தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல்கட்ட கல… –>

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கு நடைபெற்ற முதல்கட்ட கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 7 ஆயிரத்து 254 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளில் 5 ஆயிரத்து 800 இடங்களும், பல் மருத்துவக்கல்லூரியில் ஆயிரத்து 457இடங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட கலந்தாய்வில் மொத்தம் 7ஆயிரத்து 254 இடங்கள் நிரப்பப் பட்டுள்ளதாகவும் பல் மருத்துவப் படிப்புக்கு மட்டும் 3 இடங்கள் காலியாக … Read more

மியான்மரில் ஏரியில் போர் விமானம் விழுந்து விமானி உயிரிழப்பு <!– மியான்மரில் ஏரியில் போர் விமானம் விழுந்து விமானி உயிரிழப்பு –>

மியான்மரில் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்தார். சாகாயிங் என்ற இடத்தில் போர் விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. அப்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த போர் விமானம் அதே பகுதியில் உள்ள ஏரியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி உயிரிழந்ததாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது. நொறுங்கி விழுந்த விமானத்தின் பாகங்கள் அனைத்தும் மீட்கப்பட்டதாக மியான்மர் ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  Source link

பஞ்சாப் நடிகரும் சமூக ஆர்வலருமான தீப் சித்து கார் விபத்தில் உயிரிழப்பு.! <!– பஞ்சாப் நடிகரும் சமூக ஆர்வலருமான தீப் சித்து கார் விபத்தி… –>

பஞ்சாப் நடிகரும் சமூக ஆர்வலருமான தீப் சித்து கார் விபத்தில் உயிர் இழந்தார். ஹரியானா மாநிலம் சோனாபட் அருகே அவர் சென்றுக் கொண்டிருந்த கார் லாரி மீது பலமாக மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செங்கோட்டையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது தீப் சித்து, விவசாயிகள் செங்கோட்டையில் கொடி ஏற்றிய போது நிகழ்ந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக அவர் முழு மூச்சுடன் போராட்டங்களில் கலந்துக் … Read more

பிற மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்த ஏற்பாடு – முதலமைச்சர் அறிவிப்பு <!– பிற மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்த ஏற்பாடு – மு… –>

சென்னையைப் போலவே தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், 800 அரங்குகள் கொண்ட 45 வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேடையில் பேசிய அவர், உயரிய எழுத்தாளர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் வீடு கட்டித்தரப்படும் என்றார். தனக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒன்றரை லட்சம் புத்தகங்களை வெளிநாடுகளில் உள்ள நூலகங்களுக்கு வழங்கியதாகத் தெரிவித்த முதலமைச்சர், தான் எழுதியுள்ள “உங்களின் ஒருவன்” என்ற … Read more

Wi-Fiஐ துண்டித்ததால் ஆத்திரம்.. பெற்றோர் மற்றும் சகோதரனை சுட்டுக் கொன்ற 15 வயது சிறுவன்.. <!– Wi-Fiஐ துண்டித்ததால் ஆத்திரம்.. பெற்றோர் மற்றும் சகோதரனை … –>

ஸ்பெயினில், 15 வயது சிறுவன் வீட்டில் Wi-Fiஐ துண்டித்த ஆத்திரத்தில் தனது பெற்றோரையும், சகோதரனையும் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்சே நகரில் வசித்து வந்த அந்த சிறுவன் பள்ளியில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததால் பெற்றோர்கள் அவனை கண்டித்ததோடு, வீட்டில் வைஃபை இணைப்பையும் துண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த சிறுவன் வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து மூவரையும் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. 3 நாட்களாகியும் எந்த தகவலும் வராததால் சந்தேகமடைந்த சிறுவனின் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் … Read more

இவருக்கு மனசுல தெலுங்கு நடிகர் பாலையான்னு நெனப்பு… ரெயிலில் சிக்கி பஸ்பமானது பைக்.! <!– இவருக்கு மனசுல தெலுங்கு நடிகர் பாலையான்னு நெனப்பு… ரெயி… –>

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பாணியில், ரெயில் வரும் போது தண்டவாளத்தை கடக்க முயன்று பைக்கை ரெயிலுக்கு பலி கொடுத்த சம்பவம் மும்பையில் அரங்கேறி உள்ளது. இது எப்படிங்க முடியும் ? என்று சராசரி பார்வையாளனும் கேட்கும் வகையிலான கிராபிக்ஸ் ஆக் ஷன் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு கிச்சி கிச்சி மூட்டுவது தெலுங்கு சினிமாவின் ஆக்சன் அவதாரமாக கொண்டாடப்படும் நடிகர் பாலையா என்கிற பாலகிருஷ்ணாவின் வழக்கம். அப்படிப்பட்ட பாலையாவுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு நிஜத்தில் ஒரு விபரீத … Read more

"பீப்" பாடல் தொடர்பாக நடிகர் சிம்பு மீது பதியப்பட்ட வழக்கு ரத்து <!– &quot;பீப்&quot; பாடல் தொடர்பாக நடிகர் சிம்பு மீது பதியப்பட்ட வழக்க… –>

“பீப்” பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. நடிகர் சிம்பு கடந்த 2015ம் ஆண்டு இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. அப்பாடலில் பெண்களை ஆபாசமாக சித்தரித்திருப்பதாக சிம்பு, அனிருத்துக்கு எதிராக காவல்துறையில் புகார்கள் அளிக்கப்பட்டன. கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த … Read more

ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழப்பு <!– ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்… –>

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள பெட்ரோபோலிஸ் நகரில் ஆறு மணி நேரத்திற்குள்ளாக 25.9 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதோடு , ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 23 பேர் சடலங்களாக மீட்கப்பட்டிருக்கும் நிலையில், … Read more

 ஜார்க்கண்டில் பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரியால் நிகழ்ந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள்.! <!–  ஜார்க்கண்டில் பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்த ச… –>

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராம்கர் மாவட்டத்தில் நிகழ்ந்த கோர விபத்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சரக்கு லாரி ஒன்று வேகமாக வந்த போது பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் சென்றுக்கொண்டிருந்த பல்வேறு வாகனங்களை மோதித் தள்ளிய அந்த லாரி ஒரு காரை நசுக்கி தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்           Source link