தண்ணீர் கேனில் தலையை விட்டு சிக்கிய சிறுத்தை..! இரை தேடி ஊருக்குள் வந்த பரிதாபம் <!– தண்ணீர் கேனில் தலையை விட்டு சிக்கிய சிறுத்தை..! இரை தேடி … –>

காட்டுக்குள் இருந்து ஊருக்குள் புகுந்த சிறுத்தை குட்டி ஒன்று வீட்டிற்கு வெளியே கிடந்த பிளாஸ்டிக் தண்ணீர் கேனில் தலையை நுழைத்து சிக்கிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது. தெரு நாய்களை வேட்டையாட ஊருக்குள் வந்த சிறுத்தை கேனில் சிக்கி நொந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிகின்றது இந்த செய்தி தொகுப்பு.. நள்ளிரவில் காட்டுக்குள் இருந்து ஊருக்குள் இறைதேடி வந்த சிறுத்தை ஒன்று, தலையில் சிக்கிய தண்ணீர் கேனுடன் சாலைக்கு வந்துள்ளது. கேனுக்குள் சிக்கிக் கொண்ட சிறுத்தையை, … Read more

காவல் நிலையங்களை குறி வைத்து அல் ஷபாப் போராளிகள் நிகழ்த்திய தாக்குதலில் 5 பேர் பலி <!– காவல் நிலையங்களை குறி வைத்து அல் ஷபாப் போராளிகள் நிகழ்த்த… –>

சோமாலியாவில், இன்னும் 10 நாட்களில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காவல் நிலையங்களை குறி வைத்து அல் ஷபாப் போராளிகள் நிகழ்த்திய தாக்குதலில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். அல் குவைதா அமைப்பினருடன நெருங்கிய் தொடர்பில் உள்ள அல் ஷபாப் போராளிகள், நள்ளிரவு ஒரு மணியளவில், தலைநகர் மொகதிசுவின் 5 வெவ்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் சோதனைச்சாவடிகள் மீது தாக்குதல் நிகழ்த்தினர். ஏராளமான ராணுவ வாகனங்கள் மற்று ஆயுதங்களை அவர்கள் … Read more

வீழ்ச்சியடைந்து வரும் கொரோனா பரவல்.. கட்டுப்பாடுகளை மறு ஆய்வு செய்ய மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் <!– வீழ்ச்சியடைந்து வரும் கொரோனா பரவல்.. கட்டுப்பாடுகளை மறு ஆ… –>

நாட்டில் கொரோனா பரவல் வீழ்ச்சியடைந்து வருவதால் கூடுதல் கொரோனா கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்யவோ, திருத்தவோ, நீக்கவோ செய்யலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய நலவாழ்வுத்துறைச் செயலர் ராஜேஷ் பூசண் கடிதம் எழுதியுள்ளார். அதில் கொரோனா தொற்றுப் பரவல், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆகியவற்றை நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. சோதனை, தொடர்பு கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி, கொரோனா தடுப்புச் சூழலுக்கு ஏற்ற செயல்பாடுகள் … Read more

ஆந்திராவிலிருந்து தஞ்சை வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் <!– ஆந்திராவிலிருந்து தஞ்சை வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற … –>

ஆந்திராவிலிருந்து தஞ்சை வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 14 பேரை கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. மாவட்ட எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய போலீசார், திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி வந்த லாரி ஒன்றை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அதில் சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள 250 கிலோ கஞ்சா … Read more

மின் கம்பியில் தொங்கிக்கொண்டிருந்த ஸ்லாத் கரடி.. பத்திரமாக மீட்ட மின்சார ஊழியர்.. <!– மின் கம்பியில் தொங்கிக்கொண்டிருந்த ஸ்லாத் கரடி.. பத்திரம… –>

கொலம்பியாவில் மின் கம்பத்தில் ஏறி மின் கம்பியை பிடித்து தொங்கிக்கொண்டிருந்த தேனுண்ணும் கரடி வகையைச் சேர்ந்த ஸ்லாத் (Sloth) கரடியை மின்சார ஊழியர் ஒருவர் பத்திரமாக மீட்டார். ஆன்டியோக்குவியா (Antioquia) மாகாணத்தின் டராசா (Taraza) நகரில் மின் கம்பியில் தொங்கிய கரடி குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த ஊழியர், மின் கம்பத்தில் ஏறி கரடியை பிடிக்க முயற்சி செய்தார். அவரை பார்த்து அந்த கரடி முதலில் சிறிது அஞ்சிய நிலையில், நீண்ட துடைப்பத்தின் உதவியுடன் … Read more

மூதாட்டி மரச்சட்டத்தால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ; ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது <!– மூதாட்டி மரச்சட்டத்தால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ; ஜ… –>

சென்னை அம்பத்தூர் பகுதியில் மூதாட்டி ஒருவர் மரச்சட்டத்தால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான். அயப்பாக்கம் அருகே கடந்த 14ஆம் தேதி இரவில் நிர்மலா என்ற மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த நிலையில், நள்ளிரவில் மரச்சட்டத்தால் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். சிசிடிவி கேமராவில் பதிவான நபரை தேடி வந்த போலீசார், செவ்வாய்கிழமை நள்ளிரவில் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித் திரிந்த ஒரு நபரைப் பிடித்து விசாரித்தனர். ஜார்கண்டைச் சேர்ந்த … Read more

முதலமைச்சர் மற்றும் காவல்துறையை பற்றி அவதூறாக பேசியதாக சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு <!– முதலமைச்சர் மற்றும் காவல்துறையை பற்றி அவதூறாக பேசியதாக சி… –>

விழுப்புரத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 14-ம் தேதியன்று பழைய பேருந்து நிலையம் அருகே பிரசாரக் கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், முதலமைச்சர் மற்றும் காவல்துறையை பற்றி அவதூறாகவும், ஆவேசமாகவும் பேசியதாக விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசாரிடம் கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி புகாரளித்தார். அதன் அடிப்படையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது, உள்நோக்கத்துடன் அவமதிப்பு ஏற்படுத்தும் … Read more

அல்ஜீரியாவில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் உதவித்தொகை அறிவிப்பு.. <!– அல்ஜீரியாவில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 7,500 ரூபாய… –>

ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் அப்டெல்மத்ஜித் (Abdelmadjid) அறிவித்துள்ளார். வேலையில்லாதவர்கள் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ அவர்களுக்கு உதவித்தொகையும், மருத்துவ காப்பீடும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Source link

சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவேயின் அலுவலகங்களில் இரு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை <!– சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவேயின் அலுவலகங்களில் இரு … –>

வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டையடுத்துச் சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவேயின் டெல்லி, குருகிராம், பெங்களூரில் அலுவலகங்களில் இரு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். நேற்று ஒரே நேரத்தில் மூன்று இடங்களிலும் வருமான வரி அதிகாரிகள் ஆய்வைத் தொடங்கினர். இரண்டாம் நாளாக இன்றும் ஆய்வு நீடித்து வருகிறது. இது குறித்து ஹுவேய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நிறுவன அதிகாரிகளைச் சந்திக்க வருமான வரி அதிகாரிகள் வருவது குறித்துத் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. சட்டத்துக்கும் விதிமுறைகளுக்கும் … Read more

"பொது ஊழியர் நேர்மையாகவும் கடமை உணர்வுடனும் பணியாற்ற வேண்டும்" – உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து <!– &quot;பொது ஊழியர் நேர்மையாகவும் கடமை உணர்வுடனும் பணியாற்ற வேண்… –>

பொது ஊழியர் என்பவர் நேர்மையாகவும் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்றும் பதிவுத் துறையில் ஏற்கனவே ஊழல்கள் அதிகம் உள்ளதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பட்டுக்கோட்டையில் உதவி சார்பதிவாளராக பணியாற்றும் சந்திரசேகரன் என்பவர் வரும் ஜூன் மாதம் ஓய்வுபெறவுள்ள நிலையில், மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நியமனத்தை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. பொது ஊழியரான ஒருவர் தனக்கான பதவியையோ, பணி இடத்தையோ … Read more