கொரோனா பாதிப்புகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.. கடும் குளிரில் ரோட்டில் சிகிச்சை பெறும் அவலம்.. <!– கொரோனா பாதிப்புகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.. கடு… –>

ஹாங் காங்கில் கொரோனா பாதிப்புகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், ஏராளமான கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வெளியே கடும் குளிரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மாத தொடக்கத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் 100 க்குள் இருந்த நிலையில், 2 வாரங்களில் அந்த எண்ணிக்கை 40 மடங்கு அதிகரித்து, இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு 4,285 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தடுப்பூசி செலுத்த தயங்குவதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. Source link

வகுப்பறைக்கு செல்போன் கொண்டு சென்றதை கண்டித்த ஆசிரியர்.. கத்தியால் குத்திய மாணவன்.. <!– வகுப்பறைக்கு செல்போன் கொண்டு சென்றதை கண்டித்த ஆசிரியர்.. … –>

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வகுப்பறைக்கு செல்போன் கொண்டு சென்றதை கண்டித்த ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் கைது செய்யப்பட்டான். அமராவதிப் புதூரில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ஜாய்சன் என்பவன் இயந்திரவியல் முதலாமாண்டு படித்து வந்தான். ஜாய்சன் வகுப்பறைக்குள் செல்போன் பயன்படுத்துவதைப் பார்த்த ஓவிய ஆசிரியர் ராஜ ஆனந்த் என்பவர் செல்போனைப் பிடுங்கி பயிற்சி மைய முதல்வரிடம் கொடுத்துள்ளார். ஜாய்சனின் பெற்றோரை வரவழைத்த முதல்வர், அவனது பல செயல்பாடுகள் மற்ற மாணவர்களையும் கெடுக்கும் வகையில் உள்ளதாகக் … Read more

4 வயதுக்கும் கீழான குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி மோட்டார் வாகன விதிகளில் திருத்தம்.. புதிய விதிகள் அறிவிப்பு <!– 4 வயதுக்கும் கீழான குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி மோட்டா… –>

இரு சக்கர வாகனத்தில் நான்கு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளைக் கொண்டு செல்லும்போது மணிக்கு நாற்பது கிலோமீட்டருக்கும் குறைவான வேகத்தில் தான் செல்ல வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. மத்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சகம், நான்கு வயதுக்கும் கீழான குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி மோட்டார் வாகன விதிகளில் திருத்தத்தைச் சேர்த்துள்ளது. அதன்படி இரு சக்கர வாகனத்தில் நான்கு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளைக் கொண்டு செல்லும்போது பாதுகாப்புக் கச்சையும், தலைக்கவசமும் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் … Read more

அமெரிக்க அரசால் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை விடுவிக்க வலியுறுத்தி ஆப்கான் மக்கள் பேரணி.. <!– அமெரிக்க அரசால் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை விடுவிக்க வல… –>

அமெரிக்க அரசால் முடக்கப்பட்டுள்ள 67,500 கோடி ரூபாய் சொத்துக்களை விடுவிக்க வலியுறுத்தி ஆப்கான் மக்கள் பேரணி சென்றனர். ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதும் அந்நாட்டு மத்திய வங்கிக்கு சொந்தமாக வெளிநாடுகளில் இருந்த 67,500 கோடி சொத்துக்களை அமெரிக்க அரசு முடக்கியது. அதில் இருந்து 26,250 கோடி ரூபாயை நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். இதனை கண்டித்து தலைநகர் காபூலில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் முன் மக்கள் பேரணி … Read more

ஜம்மு காஷ்மீரின் இரு வேறு இடங்களில் இன்று நிலநடுக்கம்.! <!– ஜம்மு காஷ்மீரின் இரு வேறு இடங்களில் இன்று நிலநடுக்கம்.! –>

ஜம்மு காஷ்மீரின் இரு வேறு இடங்களில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. காஷ்மீரின் வடமேற்கே உள்ள குல்மார்க் பகுதியில் இன்று காலை 11.08 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0ஆக  பதிவாகியுள்ள நிலையில், நிலநடுக்கம் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.  Source link

ஈரோடு அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு திமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்.. <!– ஈரோடு அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு திமுக வேட்பாளர் மார… –>

ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐயப்பன் மாரடைப்பால் உயிரிழந்தார். அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பெருமாபாளையத்தை சேர்ந்த ஐயப்பன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், வீட்டில் இரவில் துங்கிக்கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது குடும்பத்தார் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற நிலையில், வழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வேட்பாளர் உயிரிழந்ததால் அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டில் தேர்தல் ரத்தாகும் என … Read more

ஒருவர் கூட பசியால் வாடக் கூடாது என்பதற்காக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகப் பிரதமர் பேச்சு <!– ஒருவர் கூட பசியால் வாடக் கூடாது என்பதற்காக அரசு அனைத்து ம… –>

ஒருவர் கூடப் பசியால் வாடக் கூடாது என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கொரோனா சூழலில் நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவச உணவுதானியங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். பாஜக காலூன்றும் இடங்களில் எல்லாம் காங்கிரஸ் துடைத்தெறியப்படுவதாகத் கூறினார். காங்கிரஸ் அசல் என்றால் ஆம்ஆத்மி அதன் நகல் என்று சாடிய பிரதமர், பஞ்சாபில் காங்கிரசும் டெல்லியில் ஆம் ஆத்மியும் ஊழலில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். … Read more

விருதுநகரில் சுயேச்சை பெண் வேட்பாளரின் இரு சக்கர வாகனத்துக்குத் தீ வைப்பு.! <!– விருதுநகரில் சுயேச்சை பெண் வேட்பாளரின் இரு சக்கர வாகனத்து… –>

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் போட்டியிடும் சுயேட்சை பெண் வேட்பாளரின் இரு சக்கர வாகனத்தை நள்ளிரிவில் சில மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இதில் TVS XL வாகனம் முழுவதும் தீயில் கருகி சேதமடைந்தது. தேர்தல் போட்டி காரணமாக வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.       Source link

தென்கொரியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு, மரணங்கள்.! <!– தென்கொரியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… –>

தென்கொரியாவில் கொரோனா பாதிப்பும், அதனால் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அமெரிக்கர்கள் அந்நாட்டிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தென் கொரியாவில், புதிதாக 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், நோய்த்தொற்றுக்கு 61 பேர் உயிரிழந்தனர். ஒமைக்ரான் பரவல் தொடக்கத்தின் போது காணப்பட்ட பாதிப்பை விட இது 12 மடங்கு அதிகமாகும். எனவே, வரும் வாரங்களில் பாதிப்புகளும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடுமென்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில், தென்கொரியாவுக்கு பயணம் செய்வதை … Read more

டெல்லியில் பக்தர்களுடன் சேர்ந்து பக்திக் கீர்த்தனைகளைப் பாடிய பிரதமர் மோடி.! <!– டெல்லியில் பக்தர்களுடன் சேர்ந்து பக்திக் கீர்த்தனைகளைப் ப… –>

குரு ரவிதாஸ் பிறந்த நாளையொட்டி டெல்லி கரோல்பாக்கில் உள்ள கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, பக்தர்களுடன் சேர்ந்து கீர்த்தனைகளைப் பாடி வழிபட்டார். டெல்லி கரோல்பாக்கில் உள்ள குரு ரவிதாஸ் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போது அங்குப் பக்திக் கீர்த்தனைகளைப் பாடிய குழுவினருடன் பிரதமரும் அமர்ந்து பாடல்களைப் பாடினார்.  Source link