நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதரி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை <!– நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதரி வீட்டில் அமலாக்க… –>

பணம் மோசடி வழக்கு தொடர்பாக மும்பையில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதாரி ஹசீனா பார்கர் வீட்டில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சட்டவிரோத சொத்து விற்பனை மற்றும் ஹவாலா பண பரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது. தாவூத்துக்கு எதிராக அண்மையில் என்ஐஏ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், மொத்தம் 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும், வழக்கில் தொடர்புடைய மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் ஒருவரும் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.   … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 1,325 பேருக்கு கொரோனா தொற்று; 14 பேர் பலி..! <!– தமிழகத்தில் ஒரே நாளில் 1,325 பேருக்கு கொரோனா தொற்று; 14 ப… –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, ஆயிரத்து 325 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 303 பேருக்கும், கோவையில் மேலும் 231 பேருக்கும், செங்கல்பட்டில் 113 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 5 ஆயிரத்து 894 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 14 பேர் உயிரிழந்த நிலையில், 31 ஆயிரத்து 368 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். Source link

பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம், நிதியுதவி அளித்துவருவதால் தீவிரவாதிகள் அதன் ஆதரவுடன் சதித்திட்டங்களை அரங்கேற்றி வருகிறது – ஐநா.சபையில் இந்தியா <!– பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம், நிதியுதவி அளித்துவ… –>

பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம் நிதியுதவி அளித்துவருவதால் தீவிரவாதிகள் அதன் ஆதரவுடன் சதித்திட்டங்களை அரங்கேற்றி வருவதாக இந்தியா ஐநா.சபையில் முறையிட்டது. தெற்காசிய நாடுகள் தொடர்பான மாநாட்டில் உரை நிகழ்த்திய ஐநாவுக்கான நிரந்தர இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹார், தீவிரவாதத்தின் மையப்பகுதியாக பாகிஸ்தான் விளங்குவதாகக் குறிப்பிட்டார். புல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை இந்தியா இழந்ததை சுட்டிக் காட்டிய அவர், அவர்களைக் கொன்ற தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தனர் என்பது உலகத்திற்கே தெரியும் என்று கூறினார். மும்பைத் தாக்குதல் போன்ற சம்பவங்களையும் சுட்டிக்காட்டிய … Read more

48 ஆண்டுகளில் 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது..! <!– 48 ஆண்டுகளில் 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது..! –>

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 48 ஆண்டுகளில் 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒடிசாவின் கேந்திரபாரா(Kendrapara) மாவட்டத்தை சேர்ந்த அவர், முதன் முதலில் 1982 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணை மணந்துள்ளார். பிறகு 2002 ஆம் ஆண்டில் அந்த பெண்ணுக்கு தெரியாமல் 2-ஆவதாக வேறோரு பெண்ணை மணந்துள்ளார். இந்த இரு மனைவிகள் மூலம் 5 குழந்தைகளை பெற்றுள்ளார். 2002 முதல் 2020 வரை திருமண இணையம் … Read more

புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் விதித்த கட்டுப்பாட்டை திரும்ப பெற முடியாது – உயர்நீதிமன்றம் கருத்து <!– புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் விதித்த கட்டுப்… –>

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்த உத்தரவை திரும்பப் பெற அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்த வழக்கில், இரவில் சரணாலயப் பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதித்த ஆட்சியரின் உத்தரவை அமல்படுத்த உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. இவ்வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையில், வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக  அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, … Read more

மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தால், 5 ஆண்டுகளுக்கு விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை ; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா <!– மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தால், 5 ஆண்டுகளுக்கு விவசாயிகள் … –>

உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், 5 ஆண்டுகளுக்கு விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துத்துள்ளார். திபியபுரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், வருகிற மார்ச் 10 ஆம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் போது பாஜக வெற்றி வெற்றி பெற்றால், 18 ஆம் தேதி ஹோலி பண்டிகையின் போது இலவச எரிவாயு சிலிண்டர்கள் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். 7 கட்டங்களாக … Read more

திமுக பிரமுகரைத் தாக்கியதாக அதிமுக வேட்பாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் <!– திமுக பிரமுகரைத் தாக்கியதாக அதிமுக வேட்பாளர் கைது செய்யப்… –>

சேலத்தில் திமுக பிரமுகரைத் தாக்கியதாக அதிமுக வேட்பாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி 58வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாண்டியன் என்பவருக்கும் அதே வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் உறவினரான சின்னு என்பவருக்கும் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்வது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பாண்டியன் தன்னைத் தாக்கியதாக சின்னு கொடுத்த புகாரின் பேரில் பாண்டியனை போலீசார் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த … Read more

கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பிறகு அவசர நிலை பிரகடனம்..! <!– கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பிறகு அவசர நிலை பிரகடனம்..! –>

லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தை அடுத்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு கனடாவில் நாடு முழுவதும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற கனடா அரசின் உத்தரவை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கனடா – அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலம் முடக்கப்பட்டது. இந்தநிலையில் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசர நிலையை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதன் மூலம் போராட்டக்காரர்களை … Read more

ரூ.22,842 கோடி மோசடி – கப்பல் கட்டும் நிறுவன இயக்குநர்களை பிடிக்க சிபிஐ தீவிரம் <!– ரூ.22,842 கோடி மோசடி – கப்பல் கட்டும் நிறுவன இயக்குநர்களை… –>

22,842 கோடி ரூபாய் மோசடி வழக்கில் குஜராத் கப்பல் கட்டும் நிறுவன இயக்குநர்களை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து சிபிஐ தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. சூரத்தில் கப்பல் கட்டுமான தளங்களைக் கொண்டு இயங்கி வரும் ஏ.பி.ஜி. நிறுவனத்தின் மீது கடந்த 2019ஆம் ஆண்டு சில வங்கிகள் கடன் மோசடி புகார்களை அளித்தன. அந்தப் புகார்கள் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 28 வங்கிகளில் கடன் பெற்று ஏ.பி.ஜி நிறுவனத்தின் இயக்குநர்கள் ரிஷி அகர்வால், … Read more

மாற்று இடத்தில் குடியமர்த்துவது ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது – ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து <!– மாற்று இடத்தில் குடியமர்த்துவது ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது… –>

ஆக்கிரமிப்பாளர்களை மாற்று இடத்தில் குடியமர்த்துவது கூட மறைமுகமாக ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாற்று இடத்தில் குடியமர்த்தும் அரசின் நடவடிக்கையை ஏற்று, ஆக்கிரமிப்பு நிலத்தை காலி செய்ய குடியிருப்புவாசிகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்த … Read more