குளிர்கால ஒலிம்பிக்கில் மொழி பிரச்சனையை கடக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சீனா <!– குளிர்கால ஒலிம்பிக்கில் மொழி பிரச்சனையை கடக்க தொழில்நுட்ப… –>

சீனாவில் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், செயற்கை நுண்ணறிவு செயலி உதவியுடன் சீன வணிகர்களுடன் உரையாடி வருகின்றனர். மாண்டரின் மொழி தெரியாத சர்வதேச விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் , பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். தங்களுக்கு வேண்டியதை ஸ்மார்ட் போனில் குரல் மூலம் பதிவு செய்ய, அதை அந்த பிரத்யேக செயலி மாண்டரினுக்கு மொழி பெயர்ப்பு செய்து வணிகர்களுக்கு குரல் வடிவில் தெரிவிக்கிறது. அதே போல வணிகர்கள் … Read more

கடலில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்களை காப்பாற்றிய காவலரை நேரில் அழைத்து பாராட்டி கவுரவித்த கூடுதல் டி.ஜி.பி <!– கடலில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்களை காப்பாற்றிய காவலரை… –>

புதுச்சேரியில், கடலில் குளித்துக் கொண்டிருந்த போது ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்களை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர் சவுந்தரராஜனை, கூடுதல் டி.ஜி.பி., நேரில் அழைத்து பாராட்டி கவுரவித்தார். கிருஷ்ணகிரியை சேர்ந்த விஷ்ணு, சபரிஷ் ஆகிய இளைஞர்கள், நேற்று புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த கடலோர காவல் படை காவலர் சவுந்தரராஜன் சீருடையுடன் கடலில் இறங்கி இருவரையும் … Read more

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிரபல நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை <!– தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிரபல நகைக்கடைகளில… –>

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரபல நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகவும் எழுந்த புகாரின் பேரில் கடலூர் லாரன்ஸ் சாலையில் உள்ள வள்ளி விலாஸ் மற்றும் சிவ வள்ளி விலாஸ் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதேபோல், சிதம்பரத்தில் உள்ள வள்ளி விலாஸ், விருத்தாச்சலத்தில் உள்ள ஜெயின் ஜுவல்லரி , புதுச்சேரியில் உள்ள ராம் தங்க … Read more

ரஷ்யா – உக்ரைன் இடையே போர் மூளும் சூழல் உருவாகி உள்ளதால், வீரர்களுக்காக பதுங்கு குழிகளை தோண்டும் உக்ரைன் இளைஞர்கள் <!– ரஷ்யா – உக்ரைன் இடையே போர் மூளும் சூழல் உருவாகி உள்ளதால்,… –>

ரஷ்யாவுடன் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைன் இளைஞர்கள் அந்நாட்டு வீரர்களுக்காக பதுங்கு குழிகளை தோண்டி வருகின்றனர். அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மரியுபொல் (Mariupol) பகுதி இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இணைந்து, ரஷ்ய படைகளை தங்கள் நாட்டு வீரர்கள் எதிர்கொள்ள ஏதுவாக பதுங்கு குழிகளை தோண்டும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இது குறித்து தெரிவித்த மைகைலோ என்ற சிறுவன், ரஷ்யா தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் உள்ளதால் இரவில் உறக்கமின்றி தவித்ததாகவும், தங்கள் வீரர்களுக்கு உதவ முடிவு … Read more

ராஜஸ்தானில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் – சிபிஐ விசாரணை கோரி போராட்டம் நடத்திய பா.ஜ.கவினரை விரட்டியடித்த போலீசார் <!– ராஜஸ்தானில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த … –>

ராஜஸ்தான் மாநிலத்தில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரி போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினரை போலீசார் தண்ணீரை பீய்ச்சி விரட்டியடித்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அங்கு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள் கசித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து, இரண்டாம் நிலை தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி எதிர்க்கட்சியான பா.ஜ.க.வினர் ஜெய்ப்பூரில் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை சுற்றி போலீசார் பேரிகார்டுகள் அமைத்து கண்காணித்தனர். சிலர் … Read more

சூடுப்பிடிக்கும் தேர்தல் களம்..! தீவிர வாக்குச் சேகரிப்பில் வேட்பாளர்கள்..! <!– சூடுப்பிடிக்கும் தேர்தல் களம்..! தீவிர வாக்குச் சேகரிப்ப… –>

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், மக்களிடையே தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய வண்ணாரபேட்டை பகுதி 48 மற்றும் 53வது வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது துணி தைத்தும், கறி வெட்டியும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் மக்களிடையே வாக்கு சேகரித்தார்.  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை பகுதியின் 37வது வார்டு பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு … Read more

படைகளை விலக்குகிறது ரஷ்யா… தணியுமா போர் பதற்றம்?…. <!– படைகளை விலக்குகிறது ரஷ்யா… தணியுமா போர் பதற்றம்?…. –>

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், உக்ரைன் எல்லையில் ஒரு சில இடங்களில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா அந்நாட்டின் எல்லையில் வீரர்கள், ஆயுதங்களை குவித்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா, நேட்டோ அமைப்பின் உறுப்பினர் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை போர் விமானங்கள், கப்பல்கள், படைகளை அனுப்பி வருகின்றன. இதனைத் தொடர்ந்து உக்ரைன் எல்லையையொட்டிய பெலாரஸ் உள்ளிட்ட பகுதிகளில் … Read more

”ஒரு கோப்பை தேநீர் விலைக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது” – சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா பேச்சு <!– ”ஒரு கோப்பை தேநீர் விலைக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகி… –>

ஒரு கோப்பை தேநீரின் விலைக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியதால் உலகளவில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் தங்களது தடுப்பூசியால் பாதுகாக்கப்பட்டதாக சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார். புனேவில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியை ஏழை நாடுகளும், UNICEF மற்றும் பிற தொண்டு நிறுவனங்களும் பயன்படுத்தப்படுவதாகவும் குறைந்த விலை, அதிக உற்பத்தி மூலம் இந்தியாவின் தடுப்பூசி தேவையை 90 சதவீதம் பூர்த்தி செய்ய முடிந்ததாகவும் … Read more

தமிழகத்தில் 75 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பு- தமிழக அரசு <!– தமிழகத்தில் 75 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பு… –>

தமிழகம் முழுவதும் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 10, 12ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஜனவரி 31ம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. Source link

டாக்டர் தம்பதியை கட்டிப்போட்டு கொள்ளை; நகை, பணத்தோடு காரையும் அபேஸ் செய்த கும்பல் <!– டாக்டர் தம்பதியை கட்டிப்போட்டு கொள்ளை; நகை, பணத்தோடு காரை… –>

ஒட்டன்சத்திரம் – தாராபுரம் சாலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் மருத்துவமனை வைத்து நடத்தி வருபவர் சக்திவேல். இவரது மனைவி ராணி. கணவன், மனைவி என இருவரும் மருத்துவர்கள் ஆவர். சக்திவேலுடன் அவரது தந்தை சென்னியப்பன், தாய் தேவநாயகம் ஆகியோரும் வசித்து வருகின்றனர். நேற்றிரவு மருத்துவமனையில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சக்திவேல் – ராணி தம்பதி வழக்கம்போல், உறங்க சென்றனர். சக்திவேலின் தந்தை வாசலுக்கு முன் வளாகத்தில் கட்டிலில் படுத்துறங்கியுள்ளார். நள்ளிரவில், கையுறை, மாஸ்க் … Read more