இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்.! <!– இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போ… –>

இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற பத்திற்கும் மேற்பட்ட படகுகளையும், 50க்கும் மேற்பட்ட மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கைது நடவடிக்கைகளை கண்டித்தும், மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பெற மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். மேலும் வரும் 21ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாகவும் … Read more

கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு 12 வயது முதல் 18 வயதுடைய சிறுவர் சிறுமியர்க்கு செலுத்தலாம் – அமைச்சர் மான்சுக் மாண்டவியா <!– கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு 12 வயது … –>

கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு 12 வயது முதல் 18 வயதுடைய சிறுவர் சிறுமியர்க்கு செலுத்தலாம் என்று மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்குழு பரிந்துரை அளித்துள்ளது. இதற்கான ஆவணங்களை விரைவில் தடுப்பூசி தயாரிக்கும் ஹைதரபாத்தை சேர்ந்த மருந்து நிறுவனம் அரசுக்கு அளிக்க உள்ளது.இதைத் தொடர்ந்து 2 டோஸ் தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்படும்.மத்திய அரசு 5 கோடி டோஸ்களை வாங்குவதற்கு ஆர்டர் போட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பூசியின் விலை 145 ரூபாய் மற்றும் வரிகள் … Read more

பள்ளிக்கு வந்த சிறுமியரிடம் ஹிஜாப்பை எடுத்துவிட்டு உள்ளே வரும்படி கூறிய ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர் <!– பள்ளிக்கு வந்த சிறுமியரிடம் ஹிஜாப்பை எடுத்துவிட்டு உள்ளே … –>

கர்நாடகத்தின் மாண்டியாவில் ஒரு பள்ளியில் ஹிஜாப்புடன் வந்த சிறுமியரை உள்ளே அனுமதிக்கும்படி பெற்றோரும், ஹிஜாப்பை எடுத்துவிட்டு வரும்படி ஆசிரியரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கர்நாடகத்தில் பத்தாம் வகுப்பு வரையுள்ள பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாண்டியாவில் உள்ள ஒரு பள்ளிக்கு ஹிஜாப் அணிந்த சிறுமியரைப் பெற்றோர் அழைத்து வந்தனர். வாயிலில் நின்ற ஆசிரியர் ஹிஜாப்பை அகற்றிவிட்டு உள்ளே வரும்படி மாணவியரைக் கேட்டுக்கொண்டார்.   அதை ஏற்க மறுத்த பெற்றோர் முதலில் உள்ளே அனுமதிக்கும்படியும், வகுப்புக்குச் சென்றபின் ஹிஜாப்பை அகற்றிக்கொள்ளலாம் … Read more

திமுக நிர்வாகியை கத்தியுடன் ஓட ஓட விரட்டிச் சென்ற அதிமுக நிர்வாகி கைது <!– திமுக நிர்வாகியை கத்தியுடன் ஓட ஓட விரட்டிச் சென்ற அதிமுக … –>

மதுரை, திருப்பரங்குன்றத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கையில் கத்தியுடன் திமுக நிர்வாகியை ஓட ஓட விரட்டிச் சென்ற அதிமுக பிரமுகரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்தனர். திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து வரும் சரத்குமார் என்ற இளைஞருக்கும், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியில் இருக்கும் அய்யனார் என்ற இளைஞருக்கும் இடையே சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்வது குறித்து கடந்த இரண்டு நாட்களாக பிரச்சனை நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் சென்ற அதிமுக … Read more

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர்ப்பதற்றம் காரணமாக இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி <!– ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர்ப்பதற்றம் காரணமாக இன்று இந்த… –>

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர்ப்பதற்றம் காரணமாக இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. வாரத்தின் முதல் நாளான இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியது முதலே பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்திருந்தன. இந்நிலையில் இன்றைய வணிக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,747 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 56,406 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 532 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 16,843 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 1,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி <!– தமிழகத்தில் ஒரே நாளில் 1,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, ஆயிரத்து 634 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 341 பேருக்கும், கோவையில் மேலும் 305 பேருக்கும், செங்கல்பட்டில் 116 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 7 ஆயிரத்து 365 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 17 பேர் உயிரிழந்த நிலையில், 35 ஆயிரத்து 951 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.   Source link

ஏர் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக துருக்கி ஏர்லைன்சின் முன்னாள் தலைவர் நியமனம் <!– ஏர் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக துருக்கி ஏர்… –>

ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநராகத் துருக்கி ஏர்லைன்சின் முன்னாள் தலைவர் இல்கர் ஐசி நியமிக்கப்பட்டுள்ளார். அரசிடம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமம் விலைக்கு வாங்கியது. இதையடுத்து ஏர் இந்தியா நிர்வாகத்தை ஜனவரி 27ஆம் நாள் டாட்டா குழுமம் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் இன்று ஏர் இந்தியா இயக்குநரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் டாட்டா சன்ஸ் தலைவர் சந்திரசேகரனும் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தின் முடிவில் ஏர் இந்தியாவின் … Read more

மதுக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ஆட்சியர்கள் பரிசீலிக்க விதிகளில் திருத்தம் <!– மதுக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ஆட்சியர்கள் பர… –>

டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை ஆட்சியர்கள் பரிசீலிக்கும் வகையில் மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மதுக்கடைக்கு எதிரான கிராம சபையின் தீர்மானம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இரு வேறு உத்தரவை பிறப்பித்திருந்தது. இதையடுத்து, மூன்று நீதிபதிகள் அமர்வில் ஏற்கனவே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கிராம சபை தீர்மானம் பற்றிய விதிகளில் திருத்தம் செய்வது பற்றி நிலைப்பாட்டை தெரிவிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு … Read more

கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வந்த அரியவகை 2 சிறுத்தை பூனைகள் மீட்பு <!– கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வந்த அரியவகை 2 சிறுத்தை பூனைக… –>

பாகிஸ்தானில் கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வந்த இரண்டு சிறுத்தை பூனைகள் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன. பார்ப்பதற்கு சிறுத்தை குட்டி போல் இருக்கும் இந்த அரியவகை காட்டுப்பூனைகளை வீட்டில் வளர்ப்தற்கும், அவற்றின் ரோமங்களுக்காகவும் வேட்டையாடப்பட்டு வருகின்றன. கராச்சி நகரில் 85,000 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த சிறுத்தை பூனை ஜோடியை, வனத்துறையினர் மீட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி பின் மர்கலா மலைப்பகுதியில் விட்டனர். Source link

விவசாய இடுபொருட்களைக் குறைந்த விலையில் அரசு வழங்கி வருகிறது – பிரதமர் நரேந்திர மோடி <!– விவசாய இடுபொருட்களைக் குறைந்த விலையில் அரசு வழங்கி வருகிற… –>

விவசாயத்துக்குத் தேவையான இடுபொருட்களை உலகச் சந்தையைவிடக் குறைந்த விலையில் அரசு வழங்கி வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜலந்தரில் தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், கோவிலில் வழிபாடு நடத்தத் தாம் விரும்பிய நிலையில், அதற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய இயலாது என மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தெரிவித்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார். பஞ்சாபில் 23 இலட்சம் விவசாயிகளுக்கு உழவர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இயற்கை வேளாண்மையைச் சிறப்பாகச் செயல்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.   … Read more