செயற்கைக்கோள் மூலம் இணையதள சேவை வழங்க உள்ள ஜியோ <!– செயற்கைக்கோள் மூலம் இணையதள சேவை வழங்க உள்ள ஜியோ –>

நாடு முழுவதும் செயற்கைக்கோள் மூலம் நேரடியாக இணையதள சேவை வழங்க உள்ளதாக ரிலையன்சின் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. லக்சம்பர்கை சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமாக எஸ்.இ.எஸ். உடன் இணைந்து ஜியோ நிறுவனம் இந்த சேவையை வழங்க உள்ளது. இதற்காக, ஜியோ விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் என்ற பெயரில் புதிதாக நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்.இ.எஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் இணைப்புகளை ஜியோ நிறுவனம் பயன்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியா மற்றும் சுற்றியுள்ள நாடுகளின் இணையதள நிறுவனங்களுக்கும், … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.! <!– தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, முன்னாள் … –>

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியான சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த போது தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.  Source link

ஜெர்மனி அதிபராக பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் தேர்வு; பதவியேற்பு விழாவில் ரஷ்யா – உக்ரைன் விவகாரம் குறித்து பேச்சு <!– ஜெர்மனி அதிபராக பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் தேர… –>

ஜெர்மனியின் அதிபராக பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபரை தேர்வு செய்யும் சிறப்பு கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர்கள் மற்றும் 16 மாகாணங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாக்களித்தனர். இதில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் 2 வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதிபராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் உரையாற்றிய பிரான்க் ஸ்டீன்மையர், உக்ரைன் – ரஷ்யா மோதல் விவகாரம் குறித்து பேசினார். … Read more

பாஜக ஆட்சியில் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்லாமிய பெண்கள் உணர்கின்றனர் – பிரதமர் மோடி பேச்சு <!– பாஜக ஆட்சியில் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்லாமிய பெண்கள் உணர… –>

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் பாதுகாப்புடன் இருப்பதாக இஸ்லாமியப் பெண்கள் உணர்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கான்பூர் தேகட் என்னுமிடத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், உத்தரப்பிரதேசத்தில் முன்பிருந்த ரவுடிக் கும்பல்கள் உயிருக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். மீண்டும் அவர்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடாமல் இருக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பாஜக ஆட்சியில் பாதுகாப்பு என உணர்வதால் இஸ்லாமியப் பெண்கள் அதிகம்பேர் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வதாகக் குறிப்பிட்டார். 2017ஆம் ஆண்டுக்கு முன் … Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல்.! <!– தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என தகவ… –>

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும். 15,16ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு … Read more

வானில் வட்டமிட்டபோது திடீரென கொத்தாக கீழே விழுந்து செத்து மடிந்த பறவைகள்..! <!– வானில் வட்டமிட்டபோது திடீரென கொத்தாக கீழே விழுந்து செத்து… –>

மெக்சிகோவில் கூட்டமாக வானில் வட்டமிட்ட பறவைகள் கொத்தாக தீடீரென கீழே விழுந்து செத்து மடிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. வடக்கு மெக்சிகோவின் சிவாவ்வா (Chihuahua) நகரில் அல்வரோ ஆப்ரெகான் (Alvaro Obregon) என்ற இடத்தில் இறந்த பறவைகள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. வடக்கு கனடாவில் இருந்து குளிர்காலத்துக்காக மஞ்சள் தலை கொண்ட இந்த பறவைகள் இடம்பெயர வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவை சுவாசித்தோ அல்லது உயர் மின் அழுத்த கம்பியில் … Read more

புல்வாமா தாக்குதல் வீரர்களின் தைரியமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் உந்து சக்தியாக உள்ளது – பிரதமர் மோடி <!– புல்வாமா தாக்குதல் வீரர்களின் தைரியமும், தியாகமும் ஒவ்வொர… –>

புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, வீரர்களின் தைரியமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் உந்து சக்தியாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி பாதுகாப்பு படையினரின் வாகனங்களை குறிவைத்து ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதனை நினைவுகூர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களின் தைரியமும், தியாகமும் இந்தியாவை வளமானதாக மாற்ற ஒவ்வொரு இந்தியருக்கும் … Read more

தஞ்சாவூரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் விதிகளை மீறி கட்டிடங்கள்.. நீதிமன்ற உத்தரவின் பேரில் கட்டிடங்கள் இடித்து தரைமட்டம்.! <!– தஞ்சாவூரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் விதிகளை மீறி… –>

தஞ்சாவூரில் மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா கட்டிடத்திற்குள் குத்தகை விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகள் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றப்பட்டன. 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பழமையான இந்த கட்டிடம் கலை, கலாச்சாரம், நாடகம் போன்றவற்றின் வளர்ச்சிக்காக கட்டப்பட்டது. இந்நிலையில் இதனை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்த ஆர்.கே.ஆர்.பிரதர்ஸ், அதற்குள் விதிகளை மீறி மதுபான பார், செல்போன் விற்பனை கடை, உணவகம், பேக்கரி உள்ளிட்டவற்றை கட்டிவிட்டு, உள்வாடகைக்கு விட்டு அதிக லாபம் ஈட்டி வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் … Read more

இந்தியாவில் புதிதாக 34,113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.! <!– இந்தியாவில் புதிதாக 34,113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.! –>

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்றும் குறைந்து 34 ஆயிரத்து 113 ஆக பதிவாகி உள்ளது. ஒரே நாளில்  கொரோனா பாதித்த 346 பேர் உயிரிழந்திருப்பதுடன் 91 ஆயிரத்து 930 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம்  3 புள்ளி 19 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 4 லட்சத்து 78 ஆயிரத்து 882 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.  Source link

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி 2 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்தையா மாரடைப்பால் காலமானார்.! <!– விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி 2 வது வார்… –>

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி 2 வது  வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்தையா மாரடைப்பால் காலமானார்.  தி.மு.க. வேட்பாளர் உயிரிழப்பு விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் உயிரிழப்பு வேட்பாளர் முத்தையா இன்று காலை மாரடைப்பால் காலமானார் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் இறந்ததால் அந்த வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு)) Source link