சிலியில் எரிவாயுக் கிடங்கில் பயங்கர தீ விபத்து.! <!– சிலியில் எரிவாயுக் கிடங்கில் பயங்கர தீ விபத்து.! –>

சிலியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த எரிவாயு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். La Cisterna மாவட்டத்தில் உள்ள எரிவாயு கிடங்கில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த தும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கொளுந்து விட்டெரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள இரண்டு சாலைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் … Read more

எல்.ஐ.சியின் 31.62 லட்சம் பங்குகளை விற்க நடவடிக்கையை தொடங்கியது அரசு.! <!– எல்.ஐ.சியின் 31.62 லட்சம் பங்குகளை விற்க நடவடிக்கையை தொடங… –>

அரசு காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சியின் 31 கோடியே 62 லட்சம் பங்குகளை விற்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சந்தைக்கான பரிந்துரைகள் செபியிடம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து மார்ச்மாதம் முதல் எல்,ஐ.சியின் பங்குகள் சந்தைக்குவரும் என்று கூறப்படுகிறது.எல்.ஐ.சி பங்குகளின் விற்பனை மூலம் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம்  கோடி ரூபாய் திரட்ட முடியும் என்று மத்தியஅரசு  பட்ஜெட்டில்  அறிவித்துள்ளது. Source link

திருவண்ணாமலையில் 12-ம் வகுப்பிற்குரிய வினாத்தாள்கள் வெளியானதாக காவல்நிலையத்தில் புகார்.! <!– திருவண்ணாமலையில் 12-ம் வகுப்பிற்குரிய வினாத்தாள்கள் வெளிய… –>

திருவண்ணாமலை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பிற்குரிய வினாத்தாள்கள் வெளியானதாக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. வந்தவாசியில் 12 ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியானதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியிலுள்ள குறிப்பிட்ட பள்ளியொன்றின் மீது சந்தேகமிருப்பதாக கல்வி அலுவலர் சார்பாக பொன்னூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். Source link

நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு தர முடியாத காங்கிரஸ் ஆட்சியை விரட்டி பாஜகவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம்.! <!– நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு தர முடியாத காங்கிரஸ் ஆட்ச… –>

நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு தர முடியாத காங்கிரஸ் ஆட்சியை விரட்டி பாஜகவுக்கு வாக்களிக்குமாறு பஞ்சாபில் வாக்காளர்களிடம் மத்தியஅமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் செய்தார். பல்வேறு ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்த அவர் அமிர்தசரஸ் நகரில் பொற்கோவிலுக்கும் சென்று வழிபாடு செய்தார். அமிர்தசரஸ் வடக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்த அமித்ஷா பஞ்சாப்பை போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று உறுதியளித்தார். பஞ்சாப் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படக்கூடிய மாநில அரசை தேர்ந்தெடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். … Read more

அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பல மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன-எடப்பாடி பழனிசாமி <!– அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பல மருத்துவக் கல்லூரிக… –>

அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் கொண்டுவரப்பட்டதாகவும், உயர்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் இருந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் பேசிய அவர், அதிமுக ஆட்சி காலத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார். Source link

பிரதமருக்கே பாதுகாப்பு அளிக்க இயலாதவர் பஞ்சாப் முதலமைச்சர்.. எவ்வாறு மாநில மக்களை பாதுகாப்பார்? அமித்ஷா கேள்வி <!– பிரதமருக்கே பாதுகாப்பு அளிக்க இயலாதவர் பஞ்சாப் முதலமைச்சர… –>

நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு வழங்க இயலாத பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித்சிங் சன்னி, எவ்வாறு மாநில மக்களை பாதுகாப்பார்? என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். பஞ்சாபில் பிரதமர் வருகையின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு விமர்சித்தார். அம்மாநிலத்தின் லூதியானாவில் பாஜக சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய அமித்ஷா, மக்கள் ஏற்கனவே ஆட்சியளிக்க வாய்ப்பளித்தும், காங்கிரஸ் கட்சி நன்மைகள் ஏதும் செய்யவிலை என்றார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மாவட்ட வாரியாக குழு அமைத்து போதைப் … Read more

மாநிலத்தின் சுயாட்சியை காக்க திமுக என்றும் துணை நிற்கும்- மம்தாவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு <!– மாநிலத்தின் சுயாட்சியை காக்க திமுக என்றும் துணை நிற்கும்-… –>

மேற்கு வங்க மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரை ஆளுநர் முடக்கியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவருடன் மம்தா பானர்ஜி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர், பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் சட்ட வரம்புகளை மீறி செயல்படுவதாக மம்தா கவலை தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மாநிலத்தின் சுயாட்சியை காக்க திமுக என்றும் துணை நிற்கும் என்றும், டெல்லி அல்லாத இடத்தில் விரைவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்களின் … Read more

சிசிடிவி கேமராவில் பதிவான வெண்மை நிற மர்ம உருவம்.. "பேய்" என கிளப்பப்பட்ட வதந்தி – பீதியாகிக் கிடக்கும் மக்கள் <!– சிசிடிவி கேமராவில் பதிவான வெண்மை நிற மர்ம உருவம்.. &quot;பேய்&quot;… –>

புதுச்சேரியில் நள்ளிரவில் சிசிடிவி கேமராவில் வெள்ளை உருவம் ஒன்று அங்கு இங்கு உலவுவது போன்று பதிவாகி உள்ளது. இதனை பார்த்த சிலர் இரவு நேரத்தில் பேய் உலவுவதாக தெரிவித்தனர். வில்லியனூர் அடுத்த பெரம்பை கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இங்கு உள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியில் திருட்டு சம்பவங்களை குறைக்க சிசிடிவியை பொருத்தி உள்ளனர். நேற்று அப்பகுதியில் பதிவாகி இருந்த கேமரா பதிவுகளை பார்த்தபோது கடந்த 4 ம் தேதி வெள்ளிக்கிழமை 1 மணியளவில் … Read more

ஆட்டோவும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து-3 பேர் பலி <!– ஆட்டோவும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து-3 பே… –>

கோயம்புத்தூரில் அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்த நிலையில், ஆட்டோ ஓட்டுனர் படுகாயம் அடைந்தார். சௌரிபாளையம் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த ஆட்டோ, எதிரில் இருந்து வேகமாக வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. பேருந்து மீது மோதிய வேகத்தில் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுனர் … Read more

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் வரும் மே மாதம் நடைபெற வாய்ப்பு <!– 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் வரும் மே மாதம் நடைபெற வாய்ப்பு –>

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் வரும் மே மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 5ஜி அலைக்கற்றைக்கான ஏல பரிந்துரையை மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் விரைவில் வழங்க உள்ளது. இந்நிலையில், மார்ச் மாதத்தில் ட்ராய் பரிந்துரை அளிக்கும்பட்சத்தில், 2 மாதத்தில் ஏலம் நடைபெறும் என தொலைத்தொடர்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிக பதிவிறக்க வேகத்தை 5ஜி கொண்டிருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அத்துறை குறிப்பிட்டுள்ளது. 5ஜி அலைக்கற்றை … Read more