காணாமல் போன சிறுமியை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் 3 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர் <!– காணாமல் போன சிறுமியை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் 3 மணி… –>

பண்ருட்டி அருகே காணாமல் போன 7 வயது சிறுமியை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் 3 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற சிறுமி சில நாட்களாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலை திடீரென சிறுமி மாயமான நிலையில், அது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பண்ருட்டி நகர பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் … Read more

பீட்சாவை போல் காட்சியளிக்கும் வியாழன் கோள்.. பீட்சா தினத்தை முன்னிட்டு நாசா வெளியிட்டுள்ள வீடியோ..! <!– பீட்சாவை போல் காட்சியளிக்கும் வியாழன் கோள்.. பீட்சா தினத்… –>

பீட்சாவை போல் காட்சியளிக்கும் வியாழன் கோளின் புதிய வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. ஜூனோ விண்கலம் பதிவு செய்த வியாழன் கோளின் மேல்பரப்பின் காட்சிப் பதிவை, பீட்சா தினத்தை முன்னிட்டு நாசா அமைப்பு வெளியிட்டது. இது குறித்து தெரிவித்த அந்த அமைப்பு, பீட்சா போல் காட்சியளிக்கும் வியாழனின் மேற்பரப்பில் உள்ள மஞ்சள் நிறப் பகுதி மிக வெப்பமானதாகவும், கரு நிறப்பகுதி குளிர்ச்சி மிகுந்ததாகவும் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, இணையதளத்தில் அதிக நபர்களால் … Read more

சமாஜ்வாதி எனப் பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் சோசலிசவாதிகள் ஆகிவிட முடியாது-அமைச்சர் ராஜ்நாத் சிங் <!– சமாஜ்வாதி எனப் பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் சோசலிசவாதிகள… –>

சமாஜ்வாதி எனப் பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் சோசலிசவாதிகள் ஆகிவிட முடியாது எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார். ராம்நகரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சமாஜ்வாதி எனப் பெயர் வைத்துள்ளோருக்கும் சோசலிசத்துக்கும் நெடுந்தொலைவு உள்ளதாகக் குறிப்பிட்டார். கொள்கையில் சமரசம் செய்வோர், ஆட்சியைப் பிடிக்கச் சமூகத்தைப் பிரித்துப் பார்ப்பவர்கள் ஒருபோதும் சமாஜ்வாதி ஆக முடியாது எனக் கூறி மறைமுகமாக சமாஜ்வாதிக் கட்சியைச் சாடினார். ராம் மனோகர் லோகியா உள்ளிட்ட தலைவர்கள் பிறந்த பாராபங்கி சோசலிசத்தின் கோட்டையாகத் … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 2,296 பேருக்கு கொரோனா.. 11 பேர் பலி..! <!– தமிழகத்தில் ஒரே நாளில் 2,296 பேருக்கு கொரோனா.. 11 பேர் பல… –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 2 ஆயிரத்து 296 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 461 பேருக்கும், கோவையில் மேலும் 432 பேருக்கும், செங்கல்பட்டில் 208 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 8 ஆயிரத்து 229 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 11 பேர் உயிரிழந்த நிலையில், 41 ஆயிரத்து 699 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.   Source link

விண்ணில் பாய தயாராகும் பி.எஸ்.எல்.வி.-சி 52 ராக்கெட்..! <!– விண்ணில் பாய தயாராகும் பி.எஸ்.எல்.வி.-சி 52 ராக்கெட்..! –>

புவி கண்காணிப்புக்கான செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி 52 ராக்கெட் நாளை காலை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இருபத்தி ஐந்தரை மணி நேர கவுண்ட்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது. புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-04 என்ற அதிநவீன ரேடார் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைகோள் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதற்கான இருபத்தி ஐந்தரை மணி நேர கவுண்ட்டவுன் … Read more

கன்னட நடிகர் சிவராஜ்குமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு <!– கன்னட நடிகர் சிவராஜ்குமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ச… –>

மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் சகோதரரும், நடிகருமான சிவராஜ்குமார், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு தனது மனைவி கீதாவுடன் வந்திருந்த நடிகர் சிவராஜ்குமார் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புனீத் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். மரியாதை நிமித்தமாக நடிகர் சிவராஜ்குமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தாக கூறப்படுகிறது. Source link

மெக்சிகோவில் மேலும் ஒரு பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை <!– மெக்சிகோவில் மேலும் ஒரு பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை –>

மெக்சிகோவில் அண்மையில் 3 செய்தியாளர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டதை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு பத்திரிக்கையாளர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மெக்சிகோவில் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் 5 பத்திரிக்கையாளர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். வியாழன் அன்று ஓவஹாக்கா  மாநிலத்தில் சுட்டு கொல்லப்பட்ட ஹெர்பெர் கோபஸின் அஞ்சலி கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.   Source link

கச்சா பாமாயிலின் இறக்குமதி வரி குறைப்பு – மத்திய மறைமுக வரிகள் வாரியம் <!– கச்சா பாமாயிலின் இறக்குமதி வரி குறைப்பு – மத்திய மறைமுக வ… –>

கச்சா பாமாயிலின் இறக்குமதி வரியை 8 புள்ளி 25 சதவிகிதத்தில் இருந்து 5 புள்ளி 5 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக மத்திய மறைமுக வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இந்த வரி குறைப்பு நாட்டில் பாமாயில் விலையினை கட்டுப்படுத்தும் என்றும் உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரியையும் மத்திய அரசு 7 புள்ளி 5 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைத்துள்ளது. இந்த வரிக் … Read more

ரூ.1 கோடி மதிப்புள்ள இரிடியம் எனக்கூறி செம்பு குடத்தை விற்க முயன்ற தம்பதி.. சிக்கிய பின்னணி..! <!– ரூ.1 கோடி மதிப்புள்ள இரிடியம் எனக்கூறி செம்பு குடத்தை விற… –>

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் எனக் கூறி செம்பு குடத்தை விலை பேசி விற்க முயன்ற தம்பதி போலீசில் சிக்கியுள்ளது. சிவசங்கர் – ஸ்ரீதேவி என்ற அந்த தம்பதி, தங்களிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் இருப்பதாக, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை நம்பிய பன்னீர்செல்வமும், செலவு இல்லாமல் இரிடியத்தை பெற நினைத்து, அந்த இரிடியத்தை திருட திட்டம் தீட்டி, மூன்று பேரை அழைத்துக் … Read more

போராட்டக்காரர்களை கலைக்க பலத்த சப்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்த போலீசார்-நடனமாடி போலீசாரை வெறுப்பேற்றிய போராட்டக்காரர்கள் <!– போராட்டக்காரர்களை கலைக்க பலத்த சப்தத்துடன் பாடல்களை ஒலிக்… –>

நியூசிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த போலீசார் அதீத சப்தத்துடன் பாடல்களை ஒலிக்க விட்ட நிலையில், சற்றும் பின்வாங்காத போராட்டக்காரர்கள், பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி போலீசாருக்கு வெறுப்பேற்றினர். தடுப்பூசி எதிர்ப்பாளர்கள், அந்நாட்டின் நாடாளுமன்றம் செல்லும் சாலைகளின் குறுக்கே கனரக வாகனங்களை நிறுத்தியும், கூடாரங்களை அமைத்தும் 6 நாட்களாக மறியலில் ஈடுபட்டுள்ளனர். கனமழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த போலீசார் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்தனர். அதற்கும் அசராத ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆடி பாடி உற்சாகமடைந்தனர். … Read more