சேற்றில் சிக்கினாலும் நிற்காமல் ஓடும்.. 20 நிமிடத்தில் சாதாரண சைக்கிளை மின்சார சைக்கிளாக மாற்றும் புதியவகை சாதனம்! ஆனந்த் மகேந்திரா பாராட்டு! <!– சேற்றில் சிக்கினாலும் நிற்காமல் ஓடும்.. 20 நிமிடத்தில் சா… –>

சாதாரண சைக்கிளை மின்சார வாகனமாக மாற்றும் வகையிலான பேட்டரி சாதனத்தை கண்டுபிடித்த நபருக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்ய ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், நபர் ஒருவர் தாம் கண்டுபிடித்த கருவியின் செயல்பாடுகள் குறித்து விளக்குகிறார். மணிக்கு 26 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த பேட்டரி சைக்கிள் கரடுமுரடான பாதையிலும் சென்றும் வருவதோடு, சேற்றில் சிக்கினாலும் … Read more

உண்மையை உறுதிசெய்துகொள்ளாமல் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் புண்படுத்தும்படி உள்ளது-மேற்குவங்க ஆளுநர் <!– உண்மையை உறுதிசெய்துகொள்ளாமல் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவி… –>

மேற்குவங்கச் சட்டப்பேரவை முடக்கம் பற்றி உண்மை அறியாமல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து, மனதை புண்படுத்துவதாக ஆளுநர் ஜெகதீப் தங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் டுவிட்டரில் வெளியிட்ட கருத்துக்குப் பதிலளித்துள்ள மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர், முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே சட்டமன்றத்தை முடக்கியதாகத் தெரிவித்துள்ளார். சட்டமன்ற முடக்கம் குறித்து முடிவெடுத்த தொடர்செயல்பாடுகளையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதுமான தகவல் இல்லாமல் நிகழ்வுகள் குறித்து அவசரமாகக் கருத்துத் தெரிவிப்பதை இது … Read more

பசிபிக் கடலில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா விரட்டியடித்ததாக தகவல் <!– பசிபிக் கடலில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா விரட்டியட… –>

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா ரஷ்யா இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பசிபிக் கடலில் அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா விரட்டியடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறுகையில், வடக்கு பசிபிக் கடலில் குறில் தீவுக்கு அருகே ரஷ்யாவின் போர்க்கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அமெரிக்கா கடற்படையின் விர்ஜீனியா வகை நீர்மூழ்கி கப்பலை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளது. அந்த இடத்தைவிட்டு செல்லுமாறு தாங்கள் விடுத்த கோரிக்கையை அந்த நீர்மூழ்கி கப்பல் ஏற்க மறுத்ததால், … Read more

டெல்லியில் 10ஆண்டு பழைமையான டீசல் வாகனத்தைப் பயன்படுத்த அனுமதி கோரிய வழக்கு முறையீடு தள்ளுபடி <!– டெல்லியில் 10ஆண்டு பழைமையான டீசல் வாகனத்தைப் பயன்படுத்த அ… –>

டெல்லியில் பத்தாண்டுக்கு மேல் பழைமையான டீசல் வாகனத்தைப் பயன்படுத்த அனுமதி கோரிய முறையீட்டை ஏற்கத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. டெல்லியில் காற்று மாசடைவதைத் தடுக்கும் நடவடிக்கையாகப் பத்தாண்டுக்கு மேல் பழைமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுக்கு மேல் பழைமையான பெட்ரோல் வாகனங்கள் இயக்கப் பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது. இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி மத்திய அரசு செய்த முறையீட்டை ஏற்கெனவே தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. ஒரு டீசல் வாகனம் வெளியிடும் மாசு, 24 பெட்ரோல் … Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! <!– தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! –>

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் இன்று மழை பெய்யக்கூடும் தமிழ்நாட்டில் திடீர் மழைப்பொழிவு ஏன்.? மாலத்தீவிலிருந்து வடகடலோர கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் மழைப்பதிவு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழைப்பதிவு – சென்னை … Read more

சுரங்கம் தோண்டும் போது மண் இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் 7 பேர் உயிருடன் மீட்பு <!– சுரங்கம் தோண்டும் போது மண் இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்க… –>

மத்தியப் பிரதேசத்தில் கால்வாய்ப் பணிக்காகச் சுரங்கம் தோண்டியபோது மண் இடிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களில் 7 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கத்னி மாவட்டத்தில் சிலீமனாபாத் என்னுமிடத்தில் கால்வாய்த் திட்டத்துக்காகச் சுரங்கம் தோண்டும்போது மண் இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து மண்ணை அகற்றி 7 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் இருவரை மீட்கும் பணிகள் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பான பிரச்சாரம் <!– நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பான பிரச்சாரம் –>

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மக்களைக் கவர்வதற்காக பல்வேறு வகையிலும் வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் 12 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மங்கள கவுரி எண்ணெய் விற்றும், 16வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முத்துகாமாட்சி சிக்கன் விற்றும் நூதன முறையில் வாக்குகள் சேகரித்தனர். கடலூர் மாவட்டம் கடலூர் மாநகராட்சி 27வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சங்கீதா வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கி வாக்கு சேகரித்தார். … Read more

இந்தியாவில் புதிதாக 44,877 பேருக்கு கொரோனா தொற்று உறுதி <!– இந்தியாவில் புதிதாக 44,877 பேருக்கு கொரோனா தொற்று உறுதி –>

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று குறைந்து 44 ஆயிரத்து 877 ஆக பதிவாகி உள்ளது.  ஒரே நாளில் கொரோனா பாதித்த 684 பேர் உயிரிழந்துள்ள  நிலையில், 1 லட்சத்து 17 ஆயிரத்து 591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 3 புள்ளி 17 சதவீதமாக குறைந்திருப்பதுடன், நாடு முழுவதும் 5 லட்சத்து 37 ஆயிரத்து 45 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.  Source link

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை <!– எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீன… –>

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கடந்த வாரம் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்கள் மற்றும் 3 விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் 11 பேர் சிறைபிடிக்கப்பட்டிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. Source link

காதலர் தினத்தை முன்னிட்டு ருசியான, இதயங்களை கரையச் செய்யும் சாக்லெட்டுகள் தயாரிக்கும் கலைஞர் <!– காதலர் தினத்தை முன்னிட்டு ருசியான, இதயங்களை கரையச் செய்யு… –>

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பெல்ஜியத்தில் விருதுகள் பல பெற்ற சாக்லேட் தயாரிப்பாளரான பெர்னார்ட் ஸ்கோபன்ஸ் இதயங்களை கரையச் செய்யும் புதிய காரம், ராஸ்பெரி, உலர் பழங்கள் நிறைந்த ருசியான இனிப்பான சாக்லெட்டுகளைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஈஸ்டர் நெருங்கும் நிலையில் காதலும் காற்றில் தவழ்கிறது. இதில் தனது தனித்திறமையைக் காட்டும் ஸ்கோபென்ஸ், மிகச்சிறந்த சாக்லெட் தயாரிப்பவர் என்று பிரான்ஸ் விடுதியில் 4 ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் பல விருதுகளைக் … Read more