கப்பல் கட்டும் நிறுவனம் ஏபிஜி ஷிப்யார்டு, 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி மோசடி.! <!– கப்பல் கட்டும் நிறுவனம் ஏபிஜி ஷிப்யார்டு, 28 வங்கிகளில் ர… –>

28 வங்கிகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஏபிஜி ஷிப்யார்டு என்ற கப்பல் கட்டும் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. குஜராத் சூரத் நகரைச் சேர்ந்த ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் பாரத் ஸ்டேட் வங்கி, திருவாங்கூர் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் வாங்கிய தொகையை வேறு நோக்கங்களுக்கு திருப்பிவிட்டதாகக்  கூறப்படுகிறது. இந்த நிறுவனம், வெளிநாட்டு நிறுவனங்களிலும் பெரும் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில். ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனத்திற்குச் சொந்தமான 13 … Read more

சாலையில் சென்று கொண்டிருந்த முதியவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கைது <!– சாலையில் சென்று கொண்டிருந்த முதியவரிடம் கத்தியைக் காட்டி … –>

சென்னையில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 8 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். படப்பை பகுதியில் நேற்றிரவு பணி முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த ஏரிக்கரையை சேர்ந்த மகேந்திரன் என்பவரை வழிமறித்த 6 இளைஞர்கள், கழுத்தில் கத்தியை வைத்து அவரை கொலை செய்யப்போவதாக மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், … Read more

புகழ்பெற்ற திகில் பட இயக்குனர் டாரியோ அர்ஜன்டோ இயக்கிய புதிய படம் பெர்லின் திரைப்பட விழாவில் வெளியீடு <!– புகழ்பெற்ற திகில் பட இயக்குனர் டாரியோ அர்ஜன்டோ இயக்கிய பு… –>

இத்தாலியைச் சேர்ந்த புகழ் பெற்ற திகில் பட இயக்குனர் டாரியோ அர்ஜன்டோ இயக்கிய “Dark Glasses”, பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. முதுமை காரணமாக கடந்த பத்தாண்டுகளாக படம் எடுக்காமல் இருந்த அவர் 82 வயதில் இந்தப் புதிய படத்தை இயக்கியுள்ளார்.தம்முடைய சிறந்தப் படங்களில் இதுவும் ஒன்று என்கிறார் இயக்குனர் தமது மகளும் நடிகையுமான ஏசியா அர்ஜன்டினோவுடன் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்த அவர் படத்தில் நடித்த தனது மகள் தான் படத்தை சிறப்பாக உருவாக்க உதவியதாகக் … Read more

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் தொடர்பாக நாளை விசாரணை <!– கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் தொடர்பாக நாளை விசாரணை –>

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் தொடர்பான வழக்கின் விசாரணை நாளை நடைபெற உள்ளது. நாளைய விசாரணையைப் பொறுத்தே கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. எனினும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு 16ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் திறப்பது குறித்து நீதிமன்றத்தின் கருத்தை அறிந்த பிறகே முடிவு எடுக்கப்படும் என்று பொம்மை தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் … Read more

நாமக்கல்லில் 3 மளிகை கடைகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து திருட்டு.! <!– நாமக்கல்லில் 3 மளிகை கடைகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து… –>

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள 3 மளிகை கடைகளில் கடந்த 2 ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக பூட்டு உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த 3 மர்ம நபர்கள், கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களைத் திருடி செல்லும் காட்சிகள், அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. Source link

குடும்ப அரசியலைச் சாடிய பிரதமர் மோடி <!– குடும்ப அரசியலைச் சாடிய பிரதமர் மோடி –>

அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் குடும்பக் கட்சிகள் மக்களாட்சியின் சாரத்தையே மாற்றிவிட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் கன்னோசியில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், முதற்கட்டத் தேர்தல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். சாதி, மதம் ஆகியற்றின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என உலகில் இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தியாவில் பல தலைமுறையாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் குடும்பக் கட்சிகள் … Read more

கோவையில் கடை உரிமையாளரின் முகத்தில் ஸ்ப்ரே அடித்து நகைப் பறித்த பெண்.. விடாமல் விரட்டிச் சென்று கொள்ளைக்காரியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.!  <!– கோவையில் கடை உரிமையாளரின் முகத்தில் ஸ்ப்ரே அடித்து நகைப் … –>

கோவையில் கடையில் பொருட்கள் வாங்குவதுபோல் வந்து பெண் உரிமையாளரின் முகத்தில் ஸ்ப்ரே அடித்து நகைப் பறித்த பெண்ணை மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ரத்தினபுரி பகுதியில் சண்முகா கிப்ட் ஆர்ட்டிகல்ஸ் என்ற கடையை நடத்தி வருபவர் செல்வராணி. வெள்ளிக்கிழமை மதியம் இவரது கடைக்கு வந்த பெண்,பரிசுப் பொருளை வாங்கி, அவற்றை பேக்கிங் செய்து தருமாறு கேட்டார். செல்வராணி பொருட்களை பேக்கிங் செய்தபோது, அந்த பெண், திடீரென ஸ்ப்ரே ஒன்றை எடுத்து செல்வராணியின் முகத்தில் அடித்து அவரது கழுத்தில் … Read more

முகக் கவசம் அணிவதில் விலக்கு? அறிக்கை தர தொற்று தடுப்பு குழுவுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்? <!– முகக் கவசம் அணிவதில் விலக்கு? அறிக்கை தர தொற்று தடுப்பு க… –>

பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை தவிர்க்கலாமா என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முகக் கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து மகாராஷ்டிர அரசு பரிசீலித்து வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்திருந்தார். இது குறித்து தகவல் அளிக்க மத்திய, மாநில அரசுகளின் தொற்று தடுப்பு குழுவை கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்த … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 2,812 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.! <!– தமிழகத்தில் ஒரே நாளில் 2,812 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.! –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 2 ஆயிரத்து 812 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 546 பேருக்கும், கோவையில் மேலும் 523 பேருக்கும், செங்கல்பட்டில் 238 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 11 ஆயிரத்து 154 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 17 பேர் உயிரிழந்த நிலையில், 47 ஆயிரத்து 643 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். Source link

கடற்பகுதியில் படகுகளில் நடத்திய சோதனை.. 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.! <!– கடற்பகுதியில் படகுகளில் நடத்திய சோதனை.. 2000 கோடி ரூபாய் … –>

போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு பல்வேறு முகமைகளுடன் இணைந்து கடற்பரப்பில் படகுகளில் நடத்திய சோதனைகளில் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணூறு கிலோ போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளது. இந்தியக் கடற்படை டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு கடற்படையுடன் இணைந்து கடற்பகுதியில் படகுகளில் நடத்திய சோதனைகளில் 800 கிலோ போதைப்பொருட்கள் பிடிபட்டதாகத் தெரிவித்துள்ளது. இவற்றின் சந்தை மதிப்பு இரண்டாயிரம் கோடி ரூபாய் என்றும் தெரிவித்துள்ளது.             Source link