"ராம்ராஜ் காட்டன்" நிறுவனத்தின் விளம்பரத் தூதராக யாஷ் நியமனம்.! <!– &quot;ராம்ராஜ் காட்டன்&quot; நிறுவனத்தின் விளம்பரத் தூதராக யாஷ் நிய… –>

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் விளம்பரப் பிரதிநிதியாக பிரபல கன்னட திரைப்பட கதாநாயகன் யாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூரை சேர்ந்த முன்னணி ஆடை தயாரிப்பு நிறுவனமான ராம்ராஜ் காட்டன், வேட்டிகள், சட்டைகள் மற்றும் உள்ளாடைகளை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. கே.ஜி.எஃப் திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்த யாஷ், ராம்ராஜ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். Source link

கடந்த பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் மீனவர்களுக்கு 70 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் <!– கடந்த பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் மீனவர்களுக்கு 70 சதவ… –>

கடந்த பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் மீனவர்களுக்கு 70 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் தமிழக மீனவர்களை ஒவ்வொரு முறையும் மீட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும்,  2014ம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்ற பின் தமிழக மீனவர்கள் மீது  துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறவில்லை என்றார். Source link

இங்கிலாந்து அரசின் அறிவுறுத்தலை மீறி உக்ரைனில் தங்க முடிவெடுத்துள்ள குடிமக்களை மீட்க ராணுவம் முன்வராது – அந்நாட்டு அரசு <!– இங்கிலாந்து அரசின் அறிவுறுத்தலை மீறி உக்ரைனில் தங்க முடிவ… –>

இங்கிலாந்து அரசின் அறிவுறுத்தலை மீறி உக்ரைனில் தங்க முடிவெடுத்துள்ள குடிமக்களை மீட்க ராணுவம் முன்வராது என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். உக்ரைன் எல்லை அருகே ரஷ்யா படைகளை குவித்து வருவதால், அங்கு வசிக்கும் இங்கிலாந்து நாட்டவர்கள் விமான சேவைகள் உள்ள போதே வெளியேறி விடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தானில், விமானம் மூலம் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது போல் உக்ரைனில் மேற்கொள்ள முடியாது என இங்கிலாந்து அரசு எச்சரித்துள்ளது. அதே போல், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டு மக்களும் … Read more

போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட 200 டன் கஞ்சா தீவைத்து எரித்து அழிப்பு.! <!– போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட 200 … –>

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே 200 டன் கஞ்சா போதைப் பொருட்களைக் காவல்துறையினர் தீவைத்து எரித்து அழித்தனர். ஆந்திரம், ஒடிசா மாநில மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாகக் கஞ்சா பயிரிடப்பட்டு இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட 200 டன் கஞ்சாவை அனகாபள்ளி அருகே கோடூரில் காவல்துறையினர் தீவைத்து எரித்து அழித்தனர். அழிக்கப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு 850 கோடி ரூபாய் எனக் கூறப்படுகின்றது. கடந்த ஓராண்டில் 7,552 ஏக்கரில் பயிரிட்டிருந்த … Read more

மாமியாரிடமே கொள்ளையடித்த மருமகள்.. சிசிடிவியால் சிக்கினார் ! <!– மாமியாரிடமே கொள்ளையடித்த மருமகள்.. சிசிடிவியால் சிக்கினார் ! –>

சென்னையில் கொள்ளையனை ஏற்பாடு செய்து மாமியாரிடமிருந்தே தங்கச் சங்லியைப் பறித்துவிட்டு, ஒன்றும் தெரியாதவர் போல போலீசில் புகாரளித்த பெண், சிசிடிவியில் சிக்கி 2 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார்.  சென்னை ஆவடியை அடுத்த அண்ணனூரைச் சேர்ந்தவர்கள் வினோத்குமார் – லதா தம்பதி. வினோத்குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நிலையில், வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் லதா மளிகைக் கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை காலை வினோத்குமார் வேலைக்கும் லதா கடைக்கும் சென்றுவிட்டனர். 60 வயதான வினோத்குமாரின் … Read more

ஆளின்றி தானே இயங்கும் ஹெலிகாப்டர் பரிசோதனையை மேற்கொண்ட அமெரிக்கா.! <!– ஆளின்றி தானே இயங்கும் ஹெலிகாப்டர் பரிசோதனையை மேற்கொண்ட அம… –>

முதல் முறையாக பைலட் இல்லாமல் இயங்கும் ஹெலிகாப்டரை அமெரிக்கா வெற்றிகரமாக பரிசோதனை மேற்கொண்டது. அந்நாட்டின் கென்டக்கி மாநிலத்தில், இந்த ஆளில்லா பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர் சுமார் 30 நிமிடங்கள் வானில் பறக்க வைத்து பரிசோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4,000 அடி உயரத்தில் மணிக்கு 125 மைல்கள் வேகத்தில் பறந்த அந்த ஹெலிகாப்டர், கச்சிதமாக மீண்டும் தரை இறங்கியது. அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பிளாக் ஹாக் ஹெலிகாப்டரை இயக்கி பரிசோதிக்கப்பட்டுள்ளது. மிக … Read more

கர்நாடகாவில் திருமண வரவேற்பில் மூளைச்சாவு ஏற்பட்டு மணமகள் உயிரிழப்பு.. அவரது உடலுறுப்புகளை தானமாக வழங்கிய பெற்றோர்.! <!– கர்நாடகாவில் திருமண வரவேற்பில் மூளைச்சாவு ஏற்பட்டு மணமகள்… –>

கர்நாடகாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது மூளைச்சாவு ஏற்பட்டு மணமகள் உயிரிழந்த நிலையில், அவரது உடலுறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கியுள்ளனர். கோலார் அடுத்த சீனிவாசப்பூரைச் சேர்ந்த சைத்ரா என்ற அந்தப் பெண்ணுக்கு கடந்த 7ஆம் தேதி காலை திருமணம் நடைபெறவிருந்தது. முந்தைய நாளான 6ஆம் தேதி மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. உறவினர் ஒவ்வொருவராகச் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தபோதே திடீரென சைத்ரா மேடையிலேயே மயங்கி விழுந்துள்ளார்.இதைப்பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவரை … Read more

ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வால் பிரச்சனை இல்லை – குஷ்பூ <!– ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வால் பிரச்சனை இல்லை – கு… –>

நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின் 129வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து, சாலிகிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார்.  Source link

ஜப்பானில் உணவு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.! <!– ஜப்பானில் உணவு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்க… –>

ஜப்பானின் நீகாட்டா மாகாணத்தில் உணவு தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த தொழிற்சாலையில் நள்ளிரவில் தீடீரென தீப்பற்றிய நிலையில், தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், 4 பெண்கள் உட்பட 5 பேரை சடலமாக மீட்டுள்ளனர். பின்னர், சுமார் 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர்.  Sanko Seika என்னும் பிரபலமான உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்திற்கான … Read more

ஹிஜாப் தொடர்பாக உள்நோக்கம் கொண்ட கருத்தை தெரிவிக்க வேண்டாம் – மத்திய அரசு <!– ஹிஜாப் தொடர்பாக உள்நோக்கம் கொண்ட கருத்தை தெரிவிக்க வேண்டா… –>

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக உள்நோக்கம் கொண்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ள மத்திய அரசு, உள்நாட்டு விவகாரங்களில் வெளி கருத்துக்கள் எப்போதும் ஏற்கப்படாது என குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, கர்நாடகாவின் சில கல்வி நிறுவனங்களில் நிலவிய சீருடை தொடர்பான பிரச்சனை உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு, வழிமுறைகள் மற்றும் ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். … Read more