பாட்டிலுக்குள் லதா மங்கேஷ்கரின் உருவப்படத்தை பதித்து மினியேச்சர் கலைஞர் அஞ்சலி <!– பாட்டிலுக்குள் லதா மங்கேஷ்கரின் உருவப்படத்தை பதித்து மினி… –>

ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தை சேர்ந்த புகழ் பெற்ற மினியேச்சர் கலைஞர் ஈஸ்வர ராவ், மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் படத்தை பாட்டிலுக்குள் உருவாக்கி அஞ்சலி செலுத்தியுள்ளார். கண்ணாடித் துண்டுகள், காகிதங்கள் வெட்டி அதை பாட்டிலுக்குள் செலுத்தி லதா மங்கேஷ்கரின் உருவத்தை அவர் பாட்டிலுக்குள் பதித்துள்ளார்.  லதா மங்கேஷ்கரின் மிகப்பெரிய ரசிகரான தாம் அவர் மறைவால் வருந்துவதாகவும் லதா பாடிய பாடல்கள் என்றும் மறையாது என்றும் ஈஸ்வர ராவ் தெரிவித்துள்ளார்.  Source link

அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன – எடப்பாடி பழனிசாமி <!– அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன – எட… –>

அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் அருகே பனமரத்துப்பட்டியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2500 ரூபாய் வழங்கியதாகத் தெரிவித்தார். Source link

தொழில்நுட்பக் கோளாறால் டிவிட்டர் கணக்குகள் திடீரென முடக்கம்.. <!– தொழில்நுட்பக் கோளாறால் டிவிட்டர் கணக்குகள் திடீரென முடக்க… –>

டிவிட்டர் சமூக ஊடகம் சுமார் ஒரு மணி நேரம் முடங்கியதால் உலகம் முழுவதும் பல கோடி பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர். தொழில் நுட்ப கோளாறு காரணமாக டிவிட்டர் கணக்கில் பயனாளர்கள் பதிவிட இயலாத நிலை காணப்பட்டது. இப்பிரச்சினை உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டதாகவும் நிலைமை சீராகி இயல்புக்கு வந்துவிட்டதாகவும் டிவிட்டரின் தொழில்நுட்பக் குழுவினர் அறிவித்துள்ளனர் Source link

இந்தியாவில் புதிதாக 50,407 பேருக்கு கொரோனா உறுதி.. 804 பேர் பலி <!– இந்தியாவில் புதிதாக 50,407 பேருக்கு கொரோனா உறுதி.. 804 பே… –>

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், இன்று புதிதாக 50 ஆயிரத்து 407 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்றுக்கு 804 பேர் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டின் தினசரி பாதிப்பு விகிதம் 3 புள்ளி 48 சதவீதமாக குறைந்திருப்பதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நாடு முழுவதும் 6 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு … Read more

பணத்திற்காக விஷ ஊசி செலுத்தி கால் டாக்ஸி ஓட்டுநரை கொலை செய்த தம்பதி.. <!– பணத்திற்காக விஷ ஊசி செலுத்தி கால் டாக்ஸி ஓட்டுநரை கொலை செ… –>

கோவை மாவட்டம் வடவள்ளியில் பணத்திற்காக விஷ ஊசி செலுத்தி கால் டாக்ஸி ஓட்டுனரை கொலை செய்த தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். ஓணாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த  தனியார் டாக்சி ஓட்டுனர் சனு என்பவர் கடந்த 9ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த ஸ்டீபன் மற்றும் அவரது மனைவி அமலோற்பவத்தை கைது செய்தனர். விசாரணையில் … Read more

ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 15 பேர் படுகாயம் <!– ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக… –>

ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 15 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பட்கீஸ் மாகாணத்தில் உள்ள மசூதியில் வாசல் அருகே குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 3 குழந்தைகள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. Source link

பெண்கள் விடுதலைபெற வேண்டும்,சிறைப்படுத்திக் கொள்ளக் கூடாது – ஹிஜாப் குறித்து கங்கனா ரணாவத் கருத்து <!– பெண்கள் விடுதலைபெற வேண்டும்,சிறைப்படுத்திக் கொள்ளக் கூடாத… –>

பெண்கள் விடுதலையாவதை கற்றுக்கொள்ள வேண்டும், கூண்டுக்குள் தங்களை சிறைப்படுத்திக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார். கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில் கல்லூரியில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரத் தடைவிதிக்கப்பட்டதையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்தன. இப்பிரச்சினை குறித்து சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரணாவத், ஈரானில் 50 ஆண்டுகளில் பெண்களுக்கு புர்கா முதல் பிகினி வரை உடை விஷயத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்த மற்றொரு பதிவரின் கருத்தை மேற்கோள் காட்டியுள்ளார். பெண்கள் … Read more

உக்ரைனை விட்டு உடனே வெளியேறுங்கள் – அமெரிக்கர்களுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை <!– உக்ரைனை விட்டு உடனே வெளியேறுங்கள் – அமெரிக்கர்களுக்கு ஜோ … –>

உக்ரைனை விட்டு உடனே வெளியேறுங்கள் என்று அமெரிக்கர்களுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார், உக்ரைன் எல்லையில் ரஷ்யாவின் பீரங்கி பயிற்சிகள், படைகள் குவிப்பு காரணமாக எந்நேரமும் படையெடுப்பு நிகழலாம் என்ற அச்சம் நிலவுகிறது. போரைத் தவிர்க்க பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளன. உக்ரைனில் மீதமிருக்கும் அமெரிக்கர்கள் இப்போதே வெளியேற வேண்டும் என்றும், பிரச்னை விரைவில் மோசமடையக் கூடும் என்றும் பைடன் கூறியுள்ளார். ரஷ்யப் படையெடுப்பு ஏற்பட்டால் அமெரிக்கர்களைக் காப்பாற்ற அமெரிக்காவும் படைகளை அனுப்பினால் அது … Read more

வேலூரில் ஏ.டி.எம். எந்திரங்களை வேண்டுமென்றே பழுதடையச் செய்யும் விசித்திர நபரை தேடி வரும் போலீசார்.! <!– வேலூரில் ஏ.டி.எம். எந்திரங்களை வேண்டுமென்றே பழுதடையச் செய… –>

வேலூர் மாவட்டம் காட்பாடியில், ஒட்டுவதற்கு பயன்படுத்தும் பசையை தடவி, வேண்டுமென்றே ஏ.டி.எம். எந்திரங்களை பழுதடையச் செய்யும் விசித்திர ஆசாமியை போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர். அங்கு ஏ.டி.எம். இயந்திரங்கள் அடிக்கடி பழுதானதை அடுத்து, வங்கி அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, பேண்ட், சர்ட் போட்டு வாடிக்கையாளர் போல் ஏ.டி.எம். மையத்திற்கு வரும் அந்த நபர், தாம் கையில் கொண்டு ஏ.டி.எம்,. கார்டில் பசையை தடவி அதனை எந்திரத்திற்குள் செலுத்துகிறார். சிறிது நேரத்தில் ஏ.டி.எம் … Read more

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான உரிமை எந்த விதத்திலும் மறுக்கப்படாது – ஆளுநர் தமிழிசை <!– புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான உரி… –>

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான உரிமை எந்த விதத்திலும் மறுக்கப்படாது என்றும் இங்கு முதலமைச்சர் மட்டுமே முதலமைச்சராக செயல்படுகிறார் என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி மற்றும் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை ஆரியபாளையத்தில் நடைபெற்றது. இதில் முதமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  Source link