தி.மு.க ஆட்சி என்பது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல, ஒரு இனத்தின் ஆட்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் <!– தி.மு.க ஆட்சி என்பது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல, ஒரு இனத்தி… –>

தி.மு.க ஆட்சி என்பது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல, ஒரு இனத்தின் ஆட்சி என குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு கலங்கரை விளக்கமாக தி.மு.க. திகழ்வதாக தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி வாயிலாக முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் பேசிய அவர், இந்திய விடுதலை போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகளை போல, குமரி மாவட்ட எல்லை போராட்ட தியாகிகளை … Read more

வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த பாம்பு.. உயிரைப் பணையம் வைத்து பாம்பைக் கொன்ற வளர்ப்பு நாய்கள்.. <!– வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த பாம்பு.. உயிரைப் பணையம் வ… –>

புதுச்சேரியில் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை, இரண்டு வளர்ப்பு நாய்கள் சேர்ந்து கடித்துக் கொன்று உரிமையாளர்களை காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மூலக்குளத்தைச் சேர்ந்த ரமணி – சித்ரா தம்பதி ராட் வீலர் வகையைச் சேர்ந்த 2 நாய்களை வளர்த்து வருகின்றனர். இரண்டில் ஒரு நாய் கடந்த சில தினங்களாக சோர்ந்து காணப்பட்டுள்ளது. மருத்துவரிடம் அழைத்துச் சென்று வந்த பிறகும் நாய் சோர்வாகவே காணப்பட்ட நிலையில், மொட்டை மாடியில் உடலில் காயங்களுடன் கண்ணாடி விரியன் பாம்பின் … Read more

குப்பையில் காணாமல் போன 5 சவரன் நகையை 3 மணி நேரமாக தேடி உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்கள்.! <!– குப்பையில் காணாமல் போன 5 சவரன் நகையை 3 மணி நேரமாக தேடி உ… –>

சிவகங்கையில் காணாமல் போன ஐந்தரை சவரன் தங்கச் சங்கிலியை சுமார் 3 மணி நேரம் குப்பைமேட்டில் தேடிக் கண்டுபிடித்த தூய்மைப் பணியாளர்கள், அதனை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். சிவகங்கை மாளவியார் தெருவைச் சேர்ந்த நாகேஸ்வரி என்ற பெண், தனது ஐந்தரை சவரன் தங்கச் சங்கிலியை தொலைத்துவிட்டு தேடியுள்ளார். காலை தனது தெருவில் வந்து குப்பை சேகரித்துச் சென்ற தூய்மைப் பணியாளர்களிடமும் அதுகுறித்துக் கூறியுள்ளார். இதனையடுத்து தூய்மைப் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து குப்பைமேட்டில் சுமார் 3 மணி நேரம் தேடி … Read more

கிரிப்டோகரன்சி வருமானத்துக்கு வரி விதிக்க அரசுக்கு உரிமை உள்ளது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் <!– கிரிப்டோகரன்சி வருமானத்துக்கு வரி விதிக்க அரசுக்கு உரிமை … –>

கிரிப்டோகரன்சிகள் மீதான வருமானத்துக்கு வரி விதிப்பதால் அதற்குச் சட்டப்படியான அங்கீகாரம் அளித்ததாகக் கருத முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கிரிப்டோகரன்சி தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினரின் வினாவுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், கிரிப்டோகரன்சி மீதான வருமானத்தின் மீது வரி விதிக்க அரசுக்கு உரிமை உள்ளது என்றார். இப்போதுள்ள நிலையில் கிரிப்டோகரன்சியைச் சட்டப்படியானதாக அறிவிக்கவோ, தடைசெய்யவோ போவதில்லை என்றும், உரிய ஆலோசனைக்குப் பின் அது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கிரிப்டோகரன்சி மீதான … Read more

கட்சி நிர்வாகியை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பதிவான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு.! <!– கட்சி நிர்வாகியை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர ப… –>

கட்சி நிர்வாகியை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பதிவான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.  கடந்த ஆண்டு செப்டம்பர் 24 தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில், மாவட்ட கிளைச் செயலாளரை தாக்கியதாக ராஜேந்திர பாலாஜி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை ரத்து செய்யக் கோரி 5 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா … Read more

லிபியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் கொல்ல முயற்சி <!– லிபியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் கொல்ல முயற்சி –>

லிபியாவில் பிரதமர் Abdulhamid al-Dbeibah கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் பிரதமரின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த எந்த தகவலுமில்லை என்றும் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு குளறுபடிகளால் பிளவுபட்டு கிடக்கும் லிபியாவில், தேர்தல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. தேர்தலுக்கு பின்னரே ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகுவேன் என Abdulhamid al-Dbeibah … Read more

புதுச்சேரியில் திமுக பிரமுகர் வீட்டு முன்பு நாட்டு வெடிகுண்டு வீசிய நபரை தேடி வரும் போலீசார் .! <!– புதுச்சேரியில் திமுக பிரமுகர் வீட்டு முன்பு நாட்டு வெடிகு… –>

புதுச்சேரியில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் வீட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். உப்பளம் நேதாஜி நகரைச் சேர்ந்த திமுக பிரமுகரான இருதயராஜ், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்காக தேர்தல் பணியை மேற்கொண்டவர். மாலை நான்கரை மணியளவில் மர்ம நபர் ஒருவன், நாட்டு வெடிகுண்டை இருதயராஜ் வீட்டு வாசலில் வீசியுள்ளான். குண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்த நிலையில், இருதயராஜ் குடும்பத்தினர் வீட்டுக்குள் இருந்ததால் அசம்பாவிதங்கள் … Read more

திருவாரூரில் கனமழை காரணமாக நாளை சனிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.! <!– திருவாரூரில் கனமழை காரணமாக நாளை சனிக்கிழமை பள்ளி மற்றும் … –>

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை சனிக்கிழமை அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை தொடரும் கனமழை காரணமாக விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவிப்பு Source link

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிப்பு <!– இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இரண்டாவது முறையாக கொரோனாவால் … –>

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இளவரசர் அலுவலக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், இளவரசர் சார்லஸ் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  Source link

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி.! <!– மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரி… –>

ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி வெற்றி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி மூன்று போட்டிகளை கொண்ட தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியது இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இந்திய அணி அபார வெற்றி பெற்றது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை எளிதாக வீழ்த்தியது Source link