தமிழகத்தில் ஒரே நாளில் 3,086 பேருக்கு கொரோனா தொற்று.! <!– தமிழகத்தில் ஒரே நாளில் 3,086 பேருக்கு கொரோனா தொற்று.! –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 3 ஆயிரத்து 86 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 590 பேருக்கும், கோவையில் மேலும் 569 பேருக்கும், செங்கல்பட்டில் 261 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 14 ஆயிரத்து 51 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 25 பேர் உயிரிழந்த நிலையில், 56 ஆயிரத்து 2 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.   Source link

அமெரிக்காவில் தனியார் நிறுவனம் விண்ணில் ஏவிய ராக்கெட் நடுவானில் வெடித்து சிதறியது.! <!– அமெரிக்காவில் தனியார் நிறுவனம் விண்ணில் ஏவிய ராக்கெட் நடு… –>

அமெரிக்காவில் தனியார் நிறுவனம் விண்ணில் ஏவிய ராக்கெட் நடுவானில் வெடித்து சிதறியது. அந்நாட்டின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ராக்கெட் ஏவும் நிறுவனமான அஸ்ட்ரா ஸ்பேஸ் நிறுவனம், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் செயற்கை கோளை வர்த்த ரீதியில் விண்ணில் நிலை நிறுத்த ராக்கெட் மூலம் ஏவும் பணியில் ஈடுபட்டது. முதல் முறையாக புளோரிடாவில் உள்ள தளத்தில் இருந்து அந்த நிறுவனத்தின் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் விண்நோக்கி சீறிப்பாய்ந்த அந்த ராக்கெட் 14 வது நிமிடத்தில் விண்ணிலேயே … Read more

வீட்டுக்காவலில் இருந்த தென்கொரியர்கள் வெளிநாடு தப்பிச் சென்ற விவகாரம்.. தென்கொரிய தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழக காவல்துறையிடம் சிபிஐ விசாரணை நடத்த திட்டம்.! <!– வீட்டுக்காவலில் இருந்த தென்கொரியர்கள் வெளிநாடு தப்பிச் செ… –>

ஜி.எஸ்.டி. மோசடி வழக்கில் சிக்கி, வீட்டுக் காவலில் இருந்த தென்கொரியர்கள் 2 பேர், வெளிநாடு தப்பிச் சென்ற விவகாரத்தில் தென்கொரிய தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழக காவல்துறையிடம் சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. 40 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி செலுத்தாத முறைகேடு வழக்கில் சிக்கி, செங்கல்பட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக் காவலில் இருந்த தென் கொரிய மோசடி நபர்கள் இருவரும், தனியார் வாகனம் மூலம் ஐதராபாத்திற்கும், அங்கிருந்து விமானம் மூலம் மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு தப்பிச் சென்றதும் … Read more

நெதர்லாந்து மிருகக்காட்சி சாலையில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ள காண்டாமிருகக் குட்டி <!– நெதர்லாந்து மிருகக்காட்சி சாலையில் சுற்றுலாப் பயணிகளை கவர… –>

நெதர்லாந்து நாட்டில் மிருகக்காட்சி சாலையில் பிறந்து 3 மாதங்களே ஆன காண்டாமிருக குட்டியினை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர். Arnhem பகுதியில் அமைந்துள்ள Burgers மிருகக்காட்சி சாலையில் காண்டாமிருகங்கள், ஒட்டகச்சிவிங்கிகள்,வரிக்குதிரைகள் உள்ளிட்ட மிருகங்கள் உள்ளன. இந்த நிலையில்  Stark என்ற பெயர் கொண்ட காண்டாமிருகக் குட்டி 3 மாதங்களுக்கு பிறகு பார்வையாளர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இந்த குட்டியின் தற்போதைய எடை 200கிலோவுக்கும் அதிகமாகும். இதனுடைய தாயின் எடை 2ஆயிரம் கிலோவாகும் Source link

திருநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் இளைஞர் ஒருவர் பலி; 50 பேர் காயம் <!– திருநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில்… –>

புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூரில் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். ஐம்பதுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். முத்தாரம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த இருநூற்றுக்கு மேற்பட்ட காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற காளை முட்டியதில் கீழப்பட்டியைச் சேர்ந்த பாண்டிமுருகன் என்கிற இளைஞர் உயிரிழந்தார்.  Source link

உலகில் அதிக தேடப்படும் அழிந்து போன 25 உயிரினங்களின் பட்டியலை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் <!– உலகில் அதிக தேடப்படும் அழிந்து போன 25 உயிரினங்களின் பட்டி… –>

உலகில் அதிக தேடப்படும் அழிந்து போன 25 உயிரினங்களின் பட்டியலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். டெக்சாஸை தளமாகக் கொண்ட அமைப்பான Re:wild என்ற அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தப் பட்டியலைத் தயாரித்துள்ளனர். இந்தப் பட்டியலில் பிளாங்கோ பிளைன்ட் எனப்படும் கண்களற்ற சாலமன் மீன்கள் இடம் பெற்றுள்ளன.  கடந்த 1951ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த வகை மீன்கள் அரிதாகவே தென்பட்டதாகக் கூறும் விஞ்ஞானிகள் நீரின் வெகு ஆழத்தில் பிளைன்ட் சாலமன்கள் வாழ்வதால் அவற்றிற்கு கண்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதேபோல் … Read more

'உத்தரவுகளுக்கு இடைக்கால தடை கிடையாது' – ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டம் <!– 'உத்தரவுகளுக்கு இடைக்கால தடை கிடையாது' – ஹிஜாப் வழக்கில் … –>

ஹிஜாப் விவகாரம் குறித்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை தேசிய அளவில் பெரிதாகக் கூடாது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை மாணவர்கள் அணியக்கூடாது என அம்மாநில உயர்நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இடைக்கால … Read more

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத அடையாளத்துடன் செல்லக் கூடாது – நடிகை குஷ்பு கருத்து.! <!– பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத அடையாளத்துடன் செல்லக் கூடாது … –>

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், ஹிஜாப் அணிவது, காவித்துண்டு அணிவது உள்ளிட்ட எந்த மத அடையாளத்துடனும் செல்லக் கூடாது என நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பூ கருத்து தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், கல்வி நிலையங்களில் சாதி, மதம் பார்க்கக் கூடாது எனவும், அனைவரும் சமம் எனவும் கூறினார். மேலும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதும், காவி துண்டு அணிவதும் தவறான செயல் எனவும் குஷ்பு கூறினார். Source … Read more

அதிபராக பதவிவகித்த போது அலுவல் சார்ந்த கோப்புகளை கிழித்து கழிவறையில் டிரம்ப் கொட்டியதாக தகவல் <!– அதிபராக பதவிவகித்த போது அலுவல் சார்ந்த கோப்புகளை கிழித்து… –>

அமெரிக்கா அதிபராக பதவிவகித்த போது அலுவல் சார்ந்த கோப்புகளை கிழித்தெறிந்து வெள்ளை மாளிகையின் கழிவறையில் டொனால்ட் டிரம்ப் கொட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. புளோரிடாவில் உள்ள டிரம்பின் பண்ணை வீட்டில் இருந்து 15 பெட்டிகளில் அரசு சார்ந்த ஆவணங்களை திங்கட்கிழமையன்று அந்நாட்டின் தேசிய ஆவண காப்பக அலுவலகம் மீட்டது. அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய டிரம்ப், இந்த ஆவணங்களை தன்னுடனே எடுத்துச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வெள்ளை மாளிகை ஆவணங்கள் … Read more

நேரு நினைத்திருந்தால் சுதந்திரம் கிடைத்த போதே கோவாவை விடுவித்திருக்கலாம் – பிரதமர் மோடி <!– நேரு நினைத்திருந்தால் சுதந்திரம் கிடைத்த போதே கோவாவை விடு… –>

நேரு நினைத்திருந்தால், 1947-ல் சுதந்திரம் கிடைத்த போதே, போர்ச்சுக்கீசிய ஆளுகையில் இருந்து கோவாவை விடுவித்திருக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வருகிற 14ஆம் தேதி, கோவாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதனை ஒட்டி, அம்மாநிலத்தின் மப்பூசா பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, நேரு நினைத்திருந்தால் நாடு சுதந்திரம் அடைந்த சில மணி நேரங்களிலேயே கோவாவை விடுவித்திருக்கலாம் எனவும், ஆனால், போர்ச்சுக்கீசிய ஆளுகையில் இருந்து கோவாவை விடுக்க, சுதந்திரத்திற்கு பிறகு 15 ஆண்டுகள் ஆனது … Read more