பசுமாடுகளை ஏற்றி வந்த லாரியை மட்டும் அனுமதியுங்கள் ஐயா.. போலீசாரின் கால்களில் விழுந்து மன்றாடிய விவசாயி.. <!– பசுமாடுகளை ஏற்றி வந்த லாரியை மட்டும் அனுமதியுங்கள் ஐயா.. … –>

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை மட்டும் அனுமதிக்குமாறு விவசாயி ஒருவர் போலீசாரின் கால்களில் விழுந்து வேண்டுகோள் விடுத்தார். பண்ணாரி சோதனை சாவடி வழியாக நேற்று மாலை 6 மணியளவில் பசு மாடுகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. இரவு நேர போக்குவரத்துத் தடை நேரம் தொடங்கியதாகக் கூறி அந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு வந்த விவசாயி ஒருவர், இரவு முழுவதும் கால்நடைகள் லாரியில் … Read more

வான்வெளியில் ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை – ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் <!– வான்வெளியில் ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருப… –>

வான்வெளியில் ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் யாரும் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள SETI அமைப்பின் ஆய்வாளர்கள், மேற்கு ஆஸ்திரேலிய பாலைவனத்தில் உள்ள முர்ச்சிசன் வைட்ஃபீல்ட் அரே என்ற உலகின் மிக உணர்திறன் வாய்ந்த ரேடியோ தொலைநோக்கி மூலம் வான்வெளியை ஆராய்ச்சி செய்தனர். 144 வெளிக் கோள்களையும், ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களையும் SETI ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்தனர். சுமார் 7 மணி நேரம் நடத்தப்பட்ட நீண்ட ஆராய்ச்சியின் போது, நட்சத்திரங்கள் மற்றும் … Read more

7 ஆண்டுக்கால ஆட்சியில் பொருளாதாரம் வளர்ச்சி – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் <!– 7 ஆண்டுக்கால ஆட்சியில் பொருளாதாரம் வளர்ச்சி – நிதியமைச்சர… –>

பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், நேரடி அந்நிய முதலீடும் அந்நியச் செலாவணிக் கையிருப்பும் அதிகரித்துள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து மாநிலங்களவையில் பேசிய அவர், அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் பட்ஜெட் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்தார். பிஎம் கதி சக்தித் திட்டத்தின் மூலம் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இதுவரை இல்லா வகையில் செலவிடப்பட உள்ளதாகத் தெரிவித்தார். வேளாண்மையில் டிரோன்களின் பயன்பாட்டால் உரங்கள் பூச்சிக்கொல்லிகளைத் திறமையாகப் பயன்படுத்தவும், பயிரிடும் பரப்பு, விளைச்சல் ஆகியவற்றை … Read more

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடையை அறியாமல் இரவு முழுக்க வரிசைக் கட்டி நின்ற வாகனங்கள்.. <!– திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடைய… –>

தமிழகம் – கர்நாடகத்தை இணைக்கும் ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அது தெரியாமல் அவ்வழியாக வந்த வாகனங்கள் இரவு முழுக்க வரிசை கட்டி நின்றன. வன விலங்குகளின் நடமாட்டம் காரணமாக திம்பம் மலைப்பாதையில், இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையறியாமல், அங்கு வந்த வாகனங்கள், பண்ணாரி சோதனைச் சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. இதையடுத்து, காலை 6 மணிக்கு மேல் வழக்கம்போல் திம்பம் மலைப்பாதை வழியாக அனைத்து வாகனங்களும் … Read more

பெரு நாட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழப்பு <!– பெரு நாட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் … –>

தென் அமெரிக்க நாடான பெருவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். Pataz மாகாணத்தில் மலைப்பாதையில் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த 100 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த பேருந்தில் பயணித்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்காலம் என அதிகாரிகள் தெரிவித்தனர். Source link

பண்பாடுகளின் ஒன்றியம் இந்தியா எனத் தெரிவித்த ராகுல் காந்திக்கு வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் கண்டனம் <!– பண்பாடுகளின் ஒன்றியம் இந்தியா எனத் தெரிவித்த ராகுல் காந்த… –>

பண்பாடுகளின் ஒன்றியம் இந்தியா எனத் தெரிவித்த ராகுல்காந்தி வடகிழக்கு மாநிலங்களை விட்டுவிட்டதை அந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் கண்டித்துள்ளனர். உத்தரப் பிரதேசம் கேரளம் போல் ஆகிவிடும் என யோகி ஆதித்யநாத் கூறியதற்கு டுவிட்டரில் பதிலளித்த ராகுல்காந்தி, காஷ்மீர் முதல் கேரளம் வரையும், குஜராத் முதல் மேற்கு வங்கம் வரையும் உள்ள பண்பாடுகளின் ஒன்றியமான இந்தியா அழகானது எனத் தெரிவித்திருந்தார். இதைக் கண்டித்துள்ள திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ், அழகான வடகிழக்கு மாநிலங்களை ராகுல்காந்தி மறந்து விட்டதாகவும், தாங்களும் … Read more

நீட் குறித்து நேருக்கு நேர் முதலமைச்சருடன் விவாதிக்க தயார் – எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் <!– நீட் குறித்து நேருக்கு நேர் முதலமைச்சருடன் விவாதிக்க தயார… –>

முதலமைச்சரின் சவாலை ஏற்கிறேன் – இ.பி.எஸ் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் பரப்புரை நீட் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயார் – இ.பி.எஸ் “நீட் விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்தாதீர்” முதலமைச்சருடன் ஓ.பி.எஸ்-ம், நானும் விவாதிக்க தயார் – இ.பி.எஸ் நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ் தான் – இ.பி.எஸ் சரித்திரம் தெரியாமல் சவால் விடுகிறார்கள் – இ.பி.எஸ்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை … Read more

கொலம்பியாவில் ராணுவத் தளத்தில் மோட்டார் சைக்கிள் வெடிகுண்டுத் தாக்குதல் – 2 வீரர்கள் உயிரிழப்பு <!– கொலம்பியாவில் ராணுவத் தளத்தில் மோட்டார் சைக்கிள் வெடிகுண்… –>

கொலம்பியாவில் ராணுவ தளத்தில் மீது நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு தாக்குதலில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். ராணுவ தளத்திற்குள் உணவு டெலிவிரி செய்வது போல் மர்ம நார் நுழைய முயன்றதாகவும், வீரர்கள் தடுத்ததால் தளத்தின் முன் மர்ம நபர் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் வீரர்கள் தெரிவித்தனர். தாக்குதலில் இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளூர் கிளர்ச்சி படைகள் தான் காரணம் என அதிபர் … Read more

மனநலம் பாதித்த மூதாட்டியை தர தரவென இழுத்துச் சென்று தாக்கிய மாணவர் கைது <!– மனநலம் பாதித்த மூதாட்டியை தர தரவென இழுத்துச் சென்று தாக்க… –>

திருப்பதியில் மனநலம் பாதித்த மூதாட்டியை சாலையில் தர தரவென இழுத்துச் சென்று கல்லூரி மாணவர் தாக்கும் வீடியோ வெளியான நிலையில் இளைஞரை போலீசார் கைது செய்தனர். ரங்கா ரெட்டி மாவட்டம் ஷாத் நகரில் சாலையில் காயங்களுடன் இருந்த மூதாட்டியிடம் பொது மக்கள் விசாரித்த போது இளைஞர் தாக்கியது தெரியவந்துள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த மக்கள், இளைஞரை தாக்கும் வீடியோவை கொண்டு போலீசில் புகாரளித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அதேபகுதியை சேர்த கல்லூரி மாணவர் … Read more

திருச்சியில் பள்ளிக், கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து சப்ளை – 7 பேர் கைது <!– திருச்சியில் பள்ளிக், கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து … –>

திருச்சியில் பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்ததாக 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், பாலக்கரை, அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதை மாத்திரை, மருந்துகளை சட்டவிரோதமாக சப்ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் காட்டூரை சேர்ந்த 2 பேர் மற்றும் கல்லுக்குழி, முடுக்குப்பட்டியை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 7 பேரைகைது செய்து அவர்களிடம் … Read more