ஹெச்ஐவி கிருமியைக் கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானி காலமானார் <!– ஹெச்ஐவி கிருமியைக் கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானி காலமானார் –>

எச்ஐவி கிருமியைக் கண்டுபிடித்த என்ற பெருமைக்குரிய பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி லுக் மாண்டாக்னியர் தனது 89வது வயதில் காலமானார். பாஸ்டர் நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக இருந்தபோது 1983ம் ஆண்டு எச்ஐவி கிருமியைக் கண்டுபிடித்தார். எச்ஐவி வைரஸ் குறித்த கண்டுபிடிப்புகளை யார் முதலில் கண்டுபிடித்தது என்பது குறித்து காலே என்ற விஞ்ஞானியுடன் அவர் நீண்ட போராட்டம் நடத்தினார். இறுதியில் இருவரும் அந்தச் சாதனையைப் பகிர்ந்து கொண்டனர். கடந்த 2008ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை சக ஆய்வாளருடன் மான்டாக்னியர் … Read more

இந்தியாவில் ஊடுருவிய 8 பாகிஸ்தான் மீனவர்கள்.. 30 மணி நேரமாக தேடுதல் வேட்டை <!– இந்தியாவில் ஊடுருவிய 8 பாகிஸ்தான் மீனவர்கள்.. 30 மணி நேரம… –>

குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் அடுத்தடுத்து 11 மீனவர் படகுகள் இந்திய நீர்பரப்பில் ஊடுருவியதை டிரோன் மூலம் கண்டுபிடித்த எல்லைப் பாதுகாப்பு படையினர் மறைந்து இருக்கும் பாகிஸ்தான் மீனவர்களைப் பிடிக்க சிறப்பு கமாண்டோ படையினரை இந்திய விமானப் படையின் உதவியுடன் ஆற்றங்கரையில் மூன்று இடங்களில் களமிறக்கினர். 30 மணி நேரமாக ஹராமி நலா எனுமிடத்தில் தேடுதல் வேட்டையில் எல்லைப் பாதுகாப்பு படை கமாண்டோக்கள் ஈடுபட்டுள்ளனர். அங்கு மறைந்துள்ள 8 பாகிஸ்தானிய மீனவர்கள் தப்பிச் செல்ல வழியே இல்லை … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களை கவரும் வகையில் வித விதமான முறைகளில் பிரச்சாரம் <!– நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களை கவரும் வகையில… –>

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களை கவரும் வகையில் வித விதமான முறைகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டர். முன்னதாக வாக்காளர்களை கவரும் வகையில் நடன கலைஞர்கள் நடனமாடினர்.   ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 21வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அபூபக்கர் சித்திக் உடலில் வண்ண விளக்குகளையும், பந்துகளையும் கட்டிக் கொண்டு ஊர்வலமாக … Read more

சவுதி அரேபியாவில் ட்ரோன் மூலம் ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்த முயற்சி… 12 தொழிலாளர்கள் காயம் <!– சவுதி அரேபியாவில் ட்ரோன் மூலம் ஹவுதி போராளிகள் தாக்குதல் … –>

சவுதி அரேபிய விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 12 பேர் காயமடைந்தனர். ஏமன் எல்லைக்கு அருகில் உள்ள அபா விமான நிலையத்தின் மீது ஹவுதி போராளிகள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்றனர். இதையடுத்து வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் ட்ரோனை சவுதி அதிகாரிகள் சுட்டு வீழ்த்தினர். ஆனால் வீழ்த்தப்பட்ட ட்ரோனின் பாகங்கள் விழுந்ததில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் காயமடைந்ததாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. Source link

அடுத்த 2 நாட்களுக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடும் பனிமூட்டம், குளிர் இருக்கும் – வானிலை ஆய்வு மையம் <!– அடுத்த 2 நாட்களுக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில… –>

அடுத்த இரண்டு நாட்களுக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடும் பனிமூட்டமும் குளிரும் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிட்ட தட்ட அனைத்து வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலையில் சரிவு காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி உத்தரப்பிரதேசம் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலையிலும் நள்ளிரவிலும் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 2 நாட்களுக்கு … Read more

தாயாருடன் துணி துவைக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து 2 சிறுமிகள் உயிரிழப்பு <!– தாயாருடன் துணி துவைக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து … –>

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே தாயாருடன் துணி துவைக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவேரிப்பாக்கம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரேகா தனது 8 மற்றும் 12 வயது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தன் அண்ணன் வீட்டருகே உள்ள கிணற்றில் துணி துவைக்கச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, கிணறு அருகே விளையாடிக்கொண்டிருந்த இரு குழந்தைகளும் அடுத்தடுத்து தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. குழந்தைகளை காப்பாற்ற ரேகாவும் … Read more

இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது – பிரதமர் மோடி <!– இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது … –>

இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் சஹரன்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், இஸ்லாமிய பெண்களின் நலனுக்காக பாஜக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாகவும், காலம் காலமாக இழைக்கப்பட்டு வந்த அநீதியான முத்தலாக் நடைமுறையை ஒழிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.  பாஜகவிற்கு இஸ்லாமிய பெண்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதன் காரணமாகவே, எதிர்க்கட்சிகள் தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவதாகவும் பிரதமர் மோடி … Read more

இந்த மண்ணின் மனத்தோடு, குணத்தோடு,நிறத்தோடு உருவான இயக்கம் தி.மு.க – முதலமைச்சர் <!– இந்த மண்ணின் மனத்தோடு, குணத்தோடு,நிறத்தோடு உருவான இயக்கம்… –>

திமுக தான் இந்த மண்ணின் மனத்தோடு, குணத்தோடு,நிறத்தோடு, உணர்வோடு உருவான இயக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும்  கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இருந்து காணொலி மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழர்களுக்கான உரிமையை மீட்பதற்காக, தமிழ் மொழியை காப்பதற்காக,  தமிழ்நாட்டை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக மாற்றுவதற்காக போராடி வருவதாக கூறினார். ஈரோட்டை திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் … Read more

உ.பி.யில் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் நிறைவு.. 60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல்..! <!– உ.பி.யில் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் நிறைவு.. 60 … –>

உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில், 60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசச் சட்டமன்றத்திற்கு மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், முதற்கட்டமாக மேற்கு உத்தரப்பிரதேசத்தின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 58 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு சில இடங்களில் வாக்கு இயந்திரத்தில் கோளாறுகள் ஏற்பட்டபோதிலும், வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றதாக … Read more

சாலையில் படுத்து கிடந்த பசு மாடுகளை வண்டியில் ஏற்றி கடத்தி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை <!– சாலையில் படுத்து கிடந்த பசு மாடுகளை வண்டியில் ஏற்றி கடத்த… –>

திருக்கோவிலூரில் சாலையில் படுத்து கிடந்த பசு மாடுகளை சில மர்ம நபர்கள் வண்டியில் ஏற்றி கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இம்மாதம் ஒன்றாம் தேதி இரவு சாலையில் படுத்து கிடந்த 8 பசு மாடுகள் மறுநாள் காலை மாயமாகின. மாட்டின் உரிமையாளர்களுள் ஒருவர், அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, நள்ளிரவில் சரக்கு வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் மாடுகளின் கழுத்தில் கயிறு கட்டி, … Read more