இந்தியாவின் 129 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி இருப்பதாக தகவல் <!– இந்தியாவின் 129 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி இர… –>

1975 ஆம் ஆண்டு முதல் இதுவரை இந்தியாவின் 129 செயற்கைகோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் செலுத்தி இருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த 46 ஆண்டுகளில் 36 நாடுகளுடைய 342 செயற்கைகோள்களையும் இஸ்ரோ விண்ணில் ஏவி இருப்பதாக கூறினார். இதற்கிடையே, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து வருகிற 14-ம் … Read more

வீட்டு வாசலில் கண்டெடுத்த செல்போன் மற்றும் 2,000 ரூபாய் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டு <!– வீட்டு வாசலில் கண்டெடுத்த செல்போன் மற்றும் 2,000 ரூபாய் ப… –>

விழுப்புரத்தில் வீட்டு வாசலில் கண்டெடுத்த செல்போன் மற்றும் 2,000 ரூபாய் பணத்தை ஒப்படைத்த 12 வயது சிறுவனை மாவட்ட எஸ்.பி பாராட்டினார். கொரோனாவால் தாய் தந்தையை இழந்த ஜீவா என்ற அந்த சிறுவன், வீட்டு வாசலில் கேட்பாரற்று கிடந்த பையைத் திறந்து பார்த்த போது, உள்ளே 15,000 ரூபாய் மதிப்பிலான செல்போன், 2000 ரூபாய் பணம் மற்றும் 3 ஏடிஎம் கார்டுகள் இருந்துள்ளன. ஜீவா தனது பராமரிப்பாளருடன் எஸ்.பி அலுவலகம் சென்று விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதாவிடம் பையை … Read more

உண்மையை எதிர்கொள்ள இயலாமல் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு-அமைச்சர் நிர்மலா சீதாராமன் <!– உண்மையை எதிர்கொள்ள இயலாமல் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இ… –>

உண்மையை எதிர்கொள்ள இயலாமல் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் ஆட்சியில் மின் இணைப்பு இல்லாமல் இருண்ட காலம் அதிகமாக இருந்தது என்றார். ஆனால் தற்போது ஒவ்வொரு கிராமத்திலுள்ள வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து … Read more

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்திற்கு தடை <!– திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்திற்கு தடை –>

விலங்குகளின் நலன் கருதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்க ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில், தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச் சாவடியில் மாலை 6 மணிக்கு 10 மற்றும் 12 … Read more

ஜெர்மனியில் மதுபோதையில் சாலையோரத்தில் நின்றிருந்த 31 கார்கள் இடித்து தள்ளிய சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து தீ விபத்து.! <!– ஜெர்மனியில் மதுபோதையில் சாலையோரத்தில் நின்றிருந்த 31 கார்… –>

ஜெர்மனியில் சாலையோரம் நின்றிருந்த 31 கார்களை இடித்துத் தள்ளிய சரக்கு வாகனம், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் புகுந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து தீ விபத்துக்குள்ளானது. சரக்கு வாகனம் ஏற்படுத்திய பெரும் விபத்தில் சிக்கிய 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மதுபோதையில் வாகனத்தை ஓட்டுநர் செலுத்தியதே பெரும் விபத்துக்கான காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மதுபோதையில் இருந்த ஓட்டுநரை கைது செய்ததாகவும், சரக்கு வாகனம் துருக்கி நிறுவனத்தை சேர்ந்தது என்றும் தெரிவித்தனர். Source link

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக கள்ளக்காதலனின் மனைவி, குழந்தைகளை கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய கொடூரப் பெண் <!– தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக கள்ளக்காதலனின் மனைவி, கு… –>

கர்நாடகாவில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக, கள்ளக்காதலனின் மனைவி, குழந்தைகளை கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய கொடூரப் பெண்ணை கைது செய்த போலீசார், கூலிப்படையை தேடி வருகின்றனர். கங்காராம் – லட்சுமி தம்பதிக்கு, மூன்று குழந்தைகள் இருந்தனர். ஒரு வாரத்திற்கு முன் லட்சுமியின் அண்ணன் மகனான சிறுவனும் வீட்டுக்கு வந்திருந்த நிலையில், திடீரென வீட்டுக்குள் புகுந்த கும்பல், அவர்களை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. விசாரணையில், கங்காராமுக்கு மனைவியின் பெயர் கொண்ட லட்சுமி என்ற வேறொரு பெண்ணுடன் … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 3,592 பேருக்கு கொரோனா.. 25 பேர் பலி..! <!– தமிழகத்தில் ஒரே நாளில் 3,592 பேருக்கு கொரோனா.. 25 பேர் பல… –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 3 ஆயிரத்து 592 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 663 பேருக்கும், கோவையில் மேலும் 654 பேருக்கும், செங்கல்பட்டில் 290 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 14 ஆயிரத்து 182 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 25 பேர் உயிரிழந்த நிலையில், 66 ஆயிரத்து 992 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.   Source link

மணிப்பூர் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் தேதிகள் மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு <!– மணிப்பூர் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல்… –>

மணிப்பூர் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் தேதிகள் மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த முதற்கட்டத் தேர்தல் பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெறும் – தேர்தல் ஆணையம் மார்ச் 3 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இரண்டாம் கட்டத் தேர்தல் மார்ச் 5 ஆம் தேதி நடைபெறுமென அறிவிப்பு Source link

மடகாஸ்கரைத் தாக்கிய "பட்சிராய்" சூறாவளியால் 92 பேர் உயிரிழப்பு <!– மடகாஸ்கரைத் தாக்கிய &quot;பட்சிராய்&quot; சூறாவளியால் 92 பேர் உயிரி… –>

மடகாஸ்கர் தீவை தாக்கிய பட்சிராய் (Batsirai) சூறாவளியால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட அனா (Ana) சூறாவளியால் 55 பேர் உயரிழந்து, ஒரு லட்சத்து 30,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது தாக்கிய பட்சிராய் (Batsirai) சூறாவளியால் 91,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் மூழ்கியும், இடிபாடுகளில் சிக்கியும் இதுவரை 92 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட இகோங்கோ (Ikongo) மாநிலத்தில் மட்டும் 60 பேர் உயிரிழந்தனர். Source … Read more

வரும் நிதியாண்டில் டிஜிட்டல் கரன்சி.. ரூபாய்க்கும் டிஜிட்டல் கரன்சிக்கும் வித்தியாசம் இருக்காது – ஆர்பிஐ ஆளுநர் <!– வரும் நிதியாண்டில் டிஜிட்டல் கரன்சி.. ரூபாய்க்கும் டிஜிட்… –>

மத்திய அரசின் டிஜிட்டல் கரன்சி வரும் நிதியாண்டில் வெளியிடப்படுமென என அறிவித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், புழக்கத்தில் உள்ள ரூபாய்க்கும் டிஜிட்டல் கரன்சிக்கும் வித்தியாசம் இருக்காது என தெரிவித்தார். மும்பையில் இது குறித்து பேசிய அவர், கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி உறுதியான கொள்கையை கொண்டுள்ளதாகவும், கிரிப்டோ கரன்சிகள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் நிதி நிலையின் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், கிரிப்டோ கரன்சி முதலீடு குறித்து எச்சரித்த சக்திகாந்த தாஸ், … Read more