கனடாவில் லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தினால் பொருளாதார பாதிப்பு ஏற்படும்… அமெரிக்கா எச்சரிக்கை <!– கனடாவில் லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தினால் பொருளாதார பாத… –>

கனடாவில் லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தினால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. எல்லை தாண்டி செல்லும் லாரி டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்கிற அரசின் உத்தரவை எதிர்த்து, ட்ரக் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் ஒட்டாவாவில் தொடங்கிய போராட்டம் தற்போது பல்வேறு பகுதிகளுக்கும் பரவி உள்ளது. விவசாயப் பொருட்களுக்கான விநியோகப் பாதையான அம்பாசிடர் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அமெரிக்கா, கனடா இடையே கார் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள இரு … Read more

பா.ஜ.க. அரசின் மீதான மக்களின் விரக்தி உ.பி. தேர்தல் முடிவில் தெரியும் – லாலு பிரசாத் <!– பா.ஜ.க. அரசின் மீதான மக்களின் விரக்தி உ.பி. தேர்தல் முடிவ… –>

பா.ஜ.க. அரசின் மீதான மக்களின் விரக்தி உத்தரபிரதேச மாநில தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவரும் என ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியில்  ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்த லாலு பிரசாத் யாதவ், பணவீக்கம், வறுமை பற்றி பேசாமல் அயோத்தி, வாரணாசி குறித்து பேசி பா.ஜ.க.வினர் மக்களை திசை திருப்பவதாக கூறினார்.  Source link

திமுக எம்பி தமிழில் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதிலளித்ததால் மக்களவையில் அமளி.! <!– திமுக எம்பி தமிழில் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பிய… –>

திமுக எம்பி  தமிழில் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதிலளித்ததால் மக்களவையில் அமளி ஏற்பட்டது. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.  கேள்வி நேரத்தில் திமுக உறுப்பினர் கணேசமூர்த்தி தமிழில் எழுப்பிய கேள்வியின் முதல் பகுதியை தாம் கவனிக்கவில்லை என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார். இதையடுத்து சபாநாயகர் ஒம் பிர்லா மீண்டும் கேள்வியைக் கேட்கும்படி ஆங்கிலத்தில் கூற தாம் தமிழில்தான் கேட்க முடியும் என்று மீண்டும் தமிழில் கேள்வி … Read more

உலக மக்கள் தொகையில் பாதி பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் – சுகாதார பாதுகாப்பிற்கான ஐரோப்பிய கமிஷனர் <!– உலக மக்கள் தொகையில் பாதி பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்த… –>

உலக மக்கள் தொகையில் பாதி பேர் கொரோனாவுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக உணவு, மற்றும் சுகாதார பாதுகாப்பிற்கான ஐரோப்பிய கமிஷனர் Stella Kyriakides தெரிவித்துள்ளார். பிரான்சில் நடந்த உலக சுகாதாரத் துறையினர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், உலகளாவிய தடுப்பூசி பிரசாரத்தை அதிகரிக்க கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். ஐரோப்பாவில் 1 புள்ளி 7 பில்லியன் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, ஏறத்தாழ 165 நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மற்ற நாடுகளை விட ஆப்பிரிக்காவில் தடுப்பூசி … Read more

பிரதமர் மோடி பிப்ரவரி 14,16,17 ஆகிய தேதிகளில் பஞ்சாபில் பிரச்சாரம் <!– பிரதமர் மோடி பிப்ரவரி 14,16,17 ஆகிய தேதிகளில் பஞ்சாபில் ப… –>

பிரதமர் மோடி வரும் 14, 16, 17 ஆகிய தேதிகளில் பஞ்சாப் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மாளவா, தோவாபா, மாஜா ஆகிய மூன்று பகுதிகளையும் உள்ளடக்கி இந்தப் பிரச்சாரத்தை மோடி மேற்கொள்ள உள்ளார். முதல் கூட்டம் ஜலந்தரில் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.இரண்டாவது பிரச்சாரக் கூட்டம் 16 ஆம் தேதி பதான்கோட்டிலும் மூன்றாவது கூட்டம் அபோஹரில் 17 ஆம் தேதியும் நடைபெற உள்ளதாக பஞ்சாப் மாநில பாஜக பொதுச் செயலாளர் சுபாஷ் சர்மா தெரிவித்துள்ளார். பஞ்சாபில் தேர்தல் … Read more

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு.! <!– சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் கு… –>

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவு 1 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தி.நகர் பகுதியில் நள்ளிரவில் பாஜக தலைமை அலுவலகத்தில் 3 மதுபாட்டில்களுடன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாஜக தலைமை அலுவலகத்தின் கதவு சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. . சம்பவ இடத்தில் துணை ஆணையர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   Source link

பாலஸ்தீனத்தில் கொரோனா பரவல் உச்சம் – பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் <!– பாலஸ்தீனத்தில் கொரோனா பரவல் உச்சம் – பல்வேறு கட்டுப்பாடுக… –>

பாலஸ்தீனத்தில் கொரோனா பரவல் உச்சம் தொட்டதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. நாளொன்றுக்கு 300 என்ற எண்ணிக்கையில் பரவல் தற்போது 64 ஆயிரமாக அதிகரித்து உச்சம் தொட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. காஸா, வெஸ்ட் பேங்க் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் முழுமையான தடுப்பூசி செலுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் அதிகளவிலான பரிசோதனை மற்றும் தடுப்பூசி மையங்களை அரசு திறந்துள்ளது. Source … Read more

உத்தரப் பிரதேசத்தில் 35 ஆண்டுகளாக விவசாயிகளுக்காக அணையாமல் எரியவிடப்படும் ஒரு அணையா ஜோதி <!– உத்தரப் பிரதேசத்தில் 35 ஆண்டுகளாக விவசாயிகளுக்காக அணையாமல… –>

உத்தரப்பிரதேசத்தில் விவசாயி ஒருவரது வீட்டில் அமர் கிசான் ஜோதி என்ற பெயரில் 35 ஆண்டுகளாக ஜோதி எரியூட்டப்பட்டு வருகிறது. சிசவுலி என்ற இடத்தில் கடந்த 1987ம் ஆண்டு விவசாய சங்கத் தலைவரான மகேந்திர சிங் திகாயத் இந்த ஜோதியை ஏற்றியதாகக் கூறப்படுகிறது. தினசரி ஒன்றே கால் கிலோ நெய் மூலம் இந்த ஜோதி எரியூட்டப்படுவதாக அதனைப் பாதுகாத்து வரும் நரேந்திர திகாயத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வணக்கம் தெரிவிக்கும் வகையில் அமர் கிசான் ஜோதி … Read more

தடுப்புச் சுவரால் தவித்து நின்ற யானைகள்.. உடனடி நடவடிக்கை எடுத்த ரயில்வே ! <!– தடுப்புச் சுவரால் தவித்து நின்ற யானைகள்.. உடனடி நடவடிக்கை… –>

நீலகிரியில் யானைகள் வழக்கமாக வலசை செல்லும் வழித்தடத்தில் ரயில்வே சார்பில் சுவர் எழுப்பியதால் அவை பரிதவித்து நின்ற காட்சிகள் வெளியான நிலையில், அந்த சுவர் உடனடியாக இடிக்கப்பட்டுள்ளது.  கூட்டம் கூட்டமாக வசிக்கும் இயல்பு கொண்ட யானைகள், தங்களது வழித்தடத்தை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் துல்லியமாக நினைவில் வைத்து, தடம் மாறாமல் செல்லக் கூடியவை. கடந்த 2ஆம் தேதி வீடியோ ஒன்று வெளியானது.அதில் நீலகிரி மாவட்டம் ஹில்க்ரோவ் ரயில்நிலையத்தின் அருகே ரயில் தண்டவாளத்தை ஒட்டி ரயில்வே துறை சார்பில் … Read more

ஒமைக்ரான் கண்டறியப்பட்ட பின் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர் – உலக சுகாதார அமைப்பு <!– ஒமைக்ரான் கண்டறியப்பட்ட பின் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர் -… –>

ஒமைக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்டது முதல் இதுவரை 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதியில் ஒமைக்ரான் வேறுபாடு குறித்து அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 13 கோடி பேருக்கு தொற்று உறுதி செய்யபட்டதாக தெரிவிக்கப்பட்டுளது. டெல்டா மாறுபாடை விட ஒமைக்ரான் வீரியம் குறைந்து காணப்படுவதாகவும், ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் திறன் தடுப்பூசிக்கு இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் 5 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பது சோகத்திற்கு அப்பாற்பட்டது என உலக … Read more