பெண் ஒருவர் ஏடிஎம் மிஷினிலேயே விட்டுச் சென்ற பத்தாயிரம் ரூபாய் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மனிதநேயமிக்க இளைஞர்.. .. <!– பெண் ஒருவர் ஏடிஎம் மிஷினிலேயே விட்டுச் சென்ற பத்தாயிரம் ர… –>

புதுச்சேரியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற நபர், வேறொரு பெண் ஒருவர் மிஷினிலேயே தெரியாமல் விட்டுச் சென்ற பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். முருங்கப்பக்கம் கிராமத்தில் உள்ள காமராஜர் வீதியை சேர்ந்த சாந்தி என்ற அந்த பெண் அப்பகுதியில் இருந்த ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கச் சென்ற நிலையில், ரகசிய எண்ணை கொடுத்த பிறகும் பணம் வராததால், வங்கியில் தகவல் தெரிவித்துவிட்டு வீட்டுக்கு சென்றிருக்கிறார். சிறிது நேரம் கழித்து ஏ.டி.எம்.மில் இருந்து பணம் வெளியே … Read more

உள்ளாட்சித் தேர்தல் நாளன்று பொது விடுமுறை அறிவிப்பு <!– உள்ளாட்சித் தேர்தல் நாளன்று பொது விடுமுறை அறிவிப்பு –>

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள பிப்ரவரி 19ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. Source link

வான்பரப்புக்கு அருகே பறந்து சென்ற ரஷ்ய குண்டு வீச்சு விமானங்களை திருப்பி அனுப்பிய இங்கிலாந்து போர் விமானங்கள் <!– வான்பரப்புக்கு அருகே பறந்து சென்ற ரஷ்ய குண்டு வீச்சு விமா… –>

இங்கிலாந்து வான் எல்லைப் பகுதியில் நுழைய முயன்ற ரஷ்ய குண்டு வீச்சு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்ற அச்சத்தில் இங்கிலாந்தும் தனது பங்கிற்கு உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் செய்து வருகிறது. இந்நிலையில் வடகடல் பகுதியில் இங்கிலாந்து வான் பரப்பின் 100 மைல்களுக்கு முன்னதாக ரஷ்யாவின் Tu-95 Bear F என்ற குண்டு வீச்சு விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. இதையறிந்த இங்கிலாந்தின் ராயல் ஏர்ஃபோர்ஸ் விமானங்கள் விரைந்து சென்று ரஷ்ய விமானங்களை … Read more

பிரதமரின் பேச்சைக் கண்டித்து போராட்டம்.. டிஆர்எஸ், பாஜக தொண்டர்கள் ஒருவரையொருவர் தாக்கியதால் பரபரப்பு <!– பிரதமரின் பேச்சைக் கண்டித்து போராட்டம்.. டிஆர்எஸ், பாஜக த… –>

தெலங்கானா மாநிலம் ஜன்கானில் தெலங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஆந்திர மாநிலப் பிரிவினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதைக் கண்டித்துத் தெலங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சியினர் கருப்புக்கொடி காட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினர் அங்குத் திரண்டு வந்ததால் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.  Source link

பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் ; ஆசிரியர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் சாலை மறியல் <!– பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் ; ஆசிரியர்களின் அலட்சியமே … –>

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் ஆசிரியர்கள் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி, பெற்றோர் மற்றும் உறவினர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பாப்பான் விடுதி அரசுப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர், செவ்வாய்கிழமை மதியம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், பெற்றோர் இல்லாத நேரம் வீட்டில் கொண்டு வந்து ஆசிரியர்கள் விட்டுச் சென்றனர் என்று கூறப்படும் நிலையில், மருத்துவமனை செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். ஆசிரியர்களின் அலட்சியமான செயல்பாடே … Read more

இங்கிலாந்தில் மலை இடுக்கில் சிக்கி விழி பிதுங்கி நின்ற ஆட்டை மீட்ட வீரர்.! <!– இங்கிலாந்தில் மலை இடுக்கில் சிக்கி விழி பிதுங்கி நின்ற ஆட… –>

இங்கிலாந்தில் செங்குத்துத்தான மலையின் நடுஇடுக்கில் சிக்கிக் கொண்ட செம்மறிஆட்டை மீட்கச் சென்ற வீரரை ஆடு கீழே இழுக்க முயலும் வீடியோ வெளியாகி பரவி வருகிறது. வேல்சில் உள்ள செங்குத்தான மலையின் நடுவில் சிக்கிக் கொண்ட செம்மறி ஆட்டை விலங்குகள் நல ஆர்வலர்கள் இருவர் மீட்க முயன்றனர். கயிறு கட்டி இறங்கியவரை ஆடு கிழே இழுக்க முயன்றது. உடன் வந்த மற்றொரு வீரர் விரைவாக செயல்பட்டு ஆட்டை பத்திரமாக மீட்டார். Source link

ஹிஜாப் வழக்கு.. விரிவான அமர்வுக்குப் பரிந்துரை <!– ஹிஜாப் வழக்கு.. விரிவான அமர்வுக்குப் பரிந்துரை –>

கர்நாடகக் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து செல்லத் தடை விதித்ததை எதிர்த்து மாணவியர் தொடுத்த வழக்குகளை விரிவான அமர்வு விசாரிக்கப் பரிந்துரைத்த உயர் நீதிமன்றத் தனி நீதிபதி, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டார். நீதிபதி கிருஷ்ண தீட்சித் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் வழக்கறிஞரும், அரசு வழக்கறிஞரும் வழக்கை விரைந்து விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டனர். விரிவான பரிசீலனை தேவைப்படுவதால் விரிவான அமர்வுக்குப் பரிந்துரைப்பதாக நீதிபதி கிருஷ்ண தீட்சித் தெரிவித்தார். இதையடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும்படி மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர். … Read more

பெற்றோரை தற்கொலைக்குத் தூண்டியதாக மகன் மீது வழக்குப்பதிவு <!– பெற்றோரை தற்கொலைக்குத் தூண்டியதாக மகன் மீது வழக்குப்பதிவு –>

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெற்றோரை தற்கொலைக்குத் தூண்டியதாக மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சியோன்புரத்தைச் சேர்ந்த செல்வ ஜெயசிங் – தங்கம் தம்பதி, கடந்த திங்கட்கிழமை இரவு தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டனர். சம்பவத்தன்று செல்வ ஜெயசிங் தனது தம்பிக்கு போன் செய்து, “மகன்கள் தங்களை சரிவர கவனிக்கவில்லை, எனவே தாங்கள் தற்கொலை செய்துகொள்ளப் போகிறோம்” எனக் கூறியது விசாரணையில் தெரியவந்தது. தம்பதியின் இளைய மகன் ஏசு ஜெபினை பிடித்து விசாரிக்கையில், தனக்கு திருமணம் செய்துவைக்கக் கேட்டு, … Read more

பெங்களூரில் 2 வாரங்கள் போராட்டம் நடத்தத் தடை.. <!– பெங்களூரில் 2 வாரங்கள் போராட்டம் நடத்தத் தடை.. –>

பெங்களூரில் பள்ளி கல்லூரிகளில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள் எந்த வகையான கூட்டங்களும் போராட்டங்களும் நடத்த இரண்டு வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பள்ளி கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிவது தொடர்பாகப் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் மாநிலம் முழுவதும் மூன்று நாட்களுக்குக் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பெங்களூர் மாநகரக் காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளி கல்லூரிகளின் வாயிலில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள் கூட்டங்களோ, போராட்டங்களோ நடத்தத் தடை விதித்துள்ளது. இந்தக் … Read more

செல்பி எடுத்த போது பள்ளத்தாக்கில் விழுந்த இளைஞரின் உடல் 8 நாட்களுக்குப் பின் மீட்பு <!– செல்பி எடுத்த போது பள்ளத்தாக்கில் விழுந்த இளைஞரின் உடல் 8… –>

கொடைக்கானலில் செல்பி எடுக்கும் போது 1,500 அடி பள்ளத்தாக்கில் தவறி விழுந்த இளைஞரின் உடல் 8 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டது. கடந்த வார புதன்கிழமை, ராம்குமார் என்ற இளைஞர், தடை செய்யப்பட்டுள்ள ரெட் ராக் பகுதியில் உள்ள பாறையின் முனையில் நின்று செல்பி எடுத்த போது தவறி பள்ளத்தாக்கில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. திங்கட்கிழமை டிரோன் கேமரா உதவியுடன் 1,500 அடி இளைஞரின் உடல் அழுகிய நிலையில் தலையின்றி கண்டுபிடிக்கப்பட்டது. பலத்த பனி மூட்டத்துக்கு மத்தியில், 2 நாட்களாக … Read more