வாகன உற்பத்தி இலக்கைக் குறைத்தது டொயோட்டா <!– வாகன உற்பத்தி இலக்கைக் குறைத்தது டொயோட்டா –>

மூன்றாம் காலாண்டில் இலாபம் வீழ்ச்சி, மின்னணு சிப் தட்டுப்பாடு ஆகியவற்றால் டொயோட்டா நிறுவனம் நடப்பாண்டு வாகன உற்பத்தி இலக்கை 90 இலட்சத்தில் இருந்து 85 இலட்சமாகக் குறைத்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையான மூன்றாம் காலாண்டில் டொயோட்டா நிறுவனத்தின் செயல்பாட்டு இலாபம் 50 ஆயிரத்து 880 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தைவிட 21 விழுக்காடு குறைவாகும். வாகன உற்பத்திக்கான மின்னணுச் சிப்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான வாகன உற்பத்தி … Read more

ஆட்டோவில் நகைப்பையை தவற விட்ட தம்பதியர்… நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த ஓட்டுநருக்கு பாராட்டு <!– ஆட்டோவில் நகைப்பையை தவற விட்ட தம்பதியர்… நேர்மையாக போலீ… –>

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தம்பதியர் ஆட்டோவில் தவறவிட்டுச்சென்ற நகைப்பையை நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர்.  நேற்று ஹஷாம் நகரில் இருந்து டோலிசௌக் பகுதிக்கு ஆட்டோவில் திரும்பிய மிர்சா சுல்தான் பெய்க் – சமீரா பேகம் தம்பதியினர் சுமார் 5 லட்சம் மதிப்புடைய நகைகள் அடங்கிய பையை ஆட்டோவிலேயே விட்டுவிட்டு இறங்கியுள்ளனர். பின்னர் இது தொடர்பாக அவர்கள் லங்கார் ஹவுஸ் போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து அவர்களது நகைப்பையை மீட்கும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். … Read more

இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை <!– இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 29 ஆய… –>

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பட்டப்பகலில், நகையை அடகு வைத்து கொண்டு சென்ற ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருமண விழாக்களில் மைக் செட் அமைக்கும் வேலை பார்த்து வரும் ஜெய் கணேஷ் என்பவர், நேற்று மாலை காமராஜ் நகரில் உள்ள வங்கியில் நகையை அடகுவைத்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதில் ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை … Read more

எல்லையில் நேட்டோ படைகளை வலுப்படுத்த, கிழக்கு ஐரோப்பா நடவடிக்கை <!– எல்லையில் நேட்டோ படைகளை வலுப்படுத்த, கிழக்கு ஐரோப்பா நடவட… –>

உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்திருப்பதன் எதிரொலியாக கிழக்கு ஐரோப்பாவில் நிறுத்தப்பட்டிருக்கும் நேட்டோ படைகளை வலுப்படுத்தும் வகையில் கூடுதல் அமெரிக்க படைகள் ருமேனியா வந்தடைந்திருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் வசில் டன்கு தெரிவித்துள்ளார். அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பேரில் அமெரிக்கா மேலும் 3 ஆயிரம் படை வீரர்களை போலந்து மற்றும் ருமேனியா நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் ஜெர்மனியின் வில்செக் பகுதியில் இருந்து ருமேனியாவிற்கு கிட்டத்தட்ட ஆயிரம் பீரங்கிப்படைக் குழுவினரை இடம் மாற்றியிருப்பதாக அமெரிக்காவின் ராணுவ … Read more

கொரோனா சோதனையைக் கைவிடும் எய்ம்ஸ் மருத்துவமனை <!– கொரோனா சோதனையைக் கைவிடும் எய்ம்ஸ் மருத்துவமனை –>

கொரோனா சூழலில் உள்நோயாளியாகச் சேர்க்கவும், அறுவைச் சிகிச்சைக்கும் முன் நோயாளிகளுக்குச் சோதனை செய்து கொரோனா இல்லை எனச் சான்று பெற்றிருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டது. இப்போது கொரோனா சோதனையைக் கைவிடுவதாக அறிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, அறுவைச் சிகிச்சைக்கும், வழக்கமான பராமரிப்புக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அறிகுறியற்ற நோயாளிகள், வெளிநோயாளிகள், அவசர நோயாளிகள் ஆகியோருக்கு இது பொருந்தும் என அறிவித்துள்ளது. ஐசிஎம்ஆர் வெளியிட்ட தேசிய வழிகாட்டுதலின்படி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.   Source link

அதிமுக வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டி எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் <!– அதிமுக வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டி எடப்பாடி பழனிச… –>

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். காஞ்சிபுரம், தாம்பரம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டினார். இதேபோன்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், ஓசூர், சேலம் மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். Source link

லாரி ஓட்டுநர்களுக்குத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை கண்டித்து லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல் <!– லாரி ஓட்டுநர்களுக்குத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை கண்ட… –>

கனடாவில் லாரி ஓட்டுநர்களுக்குத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை கண்டித்து, கனரக லாரிகளை சாலைகளின் குறுக்கே நிறுத்தி அவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளதால், கனடாவை அமெரிக்கா உடன் இணைக்கும் முக்கிய சாலை மூடப்பட்டுள்ளது. கனடாவில் இருந்து 75 சதவீத ஏற்றுமதிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் நிலையில், 10 நாட்களுக்கு மேலாகத் தொடரும் இந்த சாலை மறியலால், இரு நாடுகளுக்கும் இடையே தினமும் 8,000 லாரிகள் சென்று வரும் அம்பாசடர் பாலத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால் கனடாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட … Read more

நைட்ரிக் ஆக்ஸைடு வாயு சிகிச்சை அளிக்கப்படும்போது கொரோனாவால் பாதித்தவர்கள் விரைவாக குணமடைவதாக ஆய்வில் தகவல் <!– நைட்ரிக் ஆக்ஸைடு வாயு சிகிச்சை அளிக்கப்படும்போது கொரோனாவா… –>

கொரோனா தொற்று பாதித்து ஆக்சிஜன் குறைபாடால் அவதிப்படும் நோயாளிகளை குறைந்த செலவில் விரைவாக குணமடையச் செய்யும் வகையில் நைட்ரிக் ஆக்ஸைடு வாயுவை முகரச் செய்யும் சிகிச்சை குறித்து கேரளாவின் அம்ரிதா மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அம்ரிதா விஷ்வ வித்யபீடத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சேர்ந்து ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், அம்ரிதா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் மீது சோதனை செய்து பார்க்கப்பட்டதில், சாதாரண சிகிச்சையோடு நைட்ரிக் ஆக்ஸைடு வாயு சிகிச்சை அளிக்கப்படும்போது, கொரோனா வைரஸ் கிருமிகளை … Read more

கார் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் உயிரிழப்பு ; கார் ஓட்டுனரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த உறவினர்கள் <!– கார் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் உயிரிழப்பு ; கார் ஓட்ட… –>

கோயம்புத்தூரில் 4 சக்கர தள்ளுவண்டியில் சாலையில் சென்ற மாற்றுத்திறனாளி முதியவர் மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அங்கு திரண்ட அவரது உறவினர்கள், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த 66 வயது நடராஜன் என்ற முதியவர், ரத்தினபுரி பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டொயோட்டா ஃபார்ட்சியூனர் கார் எதிர்பாராதவிதமாக அந்த முதியவர் … Read more

கொலம்பியாவின் டோஸ்கேப்ராடாஸ் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை.. நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு <!– கொலம்பியாவின் டோஸ்கேப்ராடாஸ் பகுதியில் வெளுத்து வாங்கிய க… –>

கொலம்பியாவின் டோஸ்கேப்ராடாஸ் (Dosquebradas) பகுதியில் கன மழை வெளுத்து வாங்கியதன் எதிரொலியாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சேதங்களை விவரிக்கும் டிரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்திருப்பதுடன், 35 பேர் படுகாயமடைந்திருப்பதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள Otun ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் முன்னெச்சரிக்கையாக கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காஃபி பயிர் அதிகம் விளையும் இந்த … Read more