மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்.. ஆந்திரா வாழ் தமிழர்கள் சார்பாக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் ரோஜா <!– மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்.. ஆந்திரா வாழ் தமிழர்க… –>

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்பாட புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் இலவசமாக வழங்க உள்ளது. முன்னதாக நகரி சட்ட மன்ற உறுப்பினர் ரோஜா தமிழக முதல்வரை சந்தித்து சித்தூர் மாவட்டத்தில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு, தமிழ்மொழி பாடதிட்டத்திற்காக 10,000 புத்தகங்கள் இலவசமாக வழங்க கோரிக்கை விடுத்திருந்தார். இதனையேற்று ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான ஆண்டுத்தமிழ் பாட நூல்கள் வகுப்பிற்கு தலா 1000 பிரதிகள் வீதம் இலவசமாய் வழங்க … Read more

உக்ரைன் : உறைந்த ஏரியின் நடுவே பனியில் சிக்கித் தவித்த நாய்.. தனது உயிரைப் பொருட்படுத்தாமல் நாயைக் காப்பாற்றிய இளைஞர்.! <!– உக்ரைன் : உறைந்த ஏரியின் நடுவே பனியில் சிக்கித் தவித்த நா… –>

உக்ரைன் நாட்டில் பனிப் பாளத்தில் சிக்கித் தவித்த நாயை இளைஞர் ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றினார். டொனெட்ஸ்கில் என்ற இடத்தில் உறைபனி காரணமாக அங்கிருந்த நீர் நிலைகள் அனைத்தும் பனியாக மாறிப் போயின. இதில் மைனஸ் 7 டிகிரி என்ற வெப்பநிலையில் கல்மியஸ் ஏரியும் உறைந்து போனது. இந்த ஏரி வழியாக வந்த இரு நாய்களில் ஒன்று பனிப் பாளத்தின் நடுவே சிக்கி உயிருக்குப் போராடியது. இதனைக் கண்ட இளைஞர் ஒருவர் தனது ஆடைகளைக் … Read more

ராஜஸ்தானில் ராணுவ சீருடையில் வலம் வந்து இந்தியாவின் தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய உளவாளி கைது.! <!– ராஜஸ்தானில் ராணுவ சீருடையில் வலம் வந்து இந்தியாவின் தகவல்… –>

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் இந்திய ராணுவ சீருடையில் வலம் வந்து ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்த நிலையில் ராஜஸ்தான் போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சக்திபால் சக் என்ற பெயரிட்ட அந்த நபர் ராஜஸ்தானின் சிறிய டவுண் ஒன்றில் எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் ராணுவ சீருடையில் சென்று நட்புகொண்டு தகவல்களைப் பெற்று பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். ராணுவ வாகனங்களின் புகைப்படங்கள், ரகசிய ஆவணங்கள் போன்றவை அவருடைய மொபைலில் … Read more

விழுப்புரத்தில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்.! <!– விழுப்புரத்தில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமு… –>

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் எடுத்துவரப்பட்ட 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 4.14 கிலோ வெள்ளிப் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 10 லட்சத்து 32 ஆயிரத்து 953 ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. … Read more

கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து.! <!– கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து.! –>

கேரளாவில் பெருந்தொற்று குறைந்து வருவதையடுத்து ஞாயிற்றுக் கிழமைகளில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கேரள அரசின் உயர்மட்டக் கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஞாயிற்றுக் கிழமைகளில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 28ம் தேதி பள்ளி, கல்லூரிகள் முழுமையாகச் செயல்படும் என்றும் அதுவரை 50 விழுக்காடு மாணாக்கர்களுடன் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலுவா சிவராத்திரி, மாரமன் … Read more

சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது, நுழைவு வாயிலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்ட அதிமுக எம்.எல்.ஏ <!– சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது, ந… –>

சென்னையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக இன்று நடைபெற்ற சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்.எல்.ஏ., சி.மகேந்திரன் சட்டமன்றத்திற்குள் செல்வதற்கு முன்பாக நுழைவு வாயிலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டார். இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட போது, வரலாற்று சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் சட்டபேரவை கூட்டத்திற்கு தான் முதல் முறையாக வந்தததால் மகிழ்ச்சியில் விழுந்து கும்பிட்டதாக அவர் தெரிவித்தார். இவர் பொள்ளாச்சி தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

டெல்லியில் நாளை மழை பெய்தால் காற்றின் தரம் மேம்பாடு அடையக்கூடும் – வானிலை மையம் <!– டெல்லியில் நாளை மழை பெய்தால் காற்றின் தரம் மேம்பாடு அடையக… –>

டெல்லியில் காற்றின் தரம் குறைந்து தொடர்ந்து மோசமான நிலையிலேயே நீடிக்கிறது. இன்று அங்கு காற்றின் தரக்குறியீடு 280 என்ற அளவில் பதிவாகி உள்ளது. டெல்லியை ஒட்டியுள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் 297 ஆகவும், ஹரியானாவின் குருகிராமில் 200 ஆகவும் காற்றின் தரக்குறியீடு உள்ளது. நாளை எதிர்பார்த்தபடி மழை பெய்யும்பட்சத்தில் மாலை வேளையில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்து மிதமான நிலைக்கு மேம்பாடு அடையக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. Source link

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இடங்களில் மது விற்க தடை – தமிழக அரசு <!– உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இடங்களில் மது விற்க தடை – … –>

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள இடங்களில் மதுபானங்களை விற்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், வாக்குப்பதிவு நடைபெற உள்ள இடங்களில் பிப்ரவரி 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான வரும் 22ஆம் தேதியன்று வாக்கு எண்ணும் பகுதியிலும் மதுபானம் விற்க தடை விதிக்கப்படுவதாக … Read more

காங்கிரசுக்கு கடும் கண்டனம்.. நாடாளுமன்றத்தில் மோடி உரை..! <!– காங்கிரசுக்கு கடும் கண்டனம்.. நாடாளுமன்றத்தில் மோடி உரை..! –>

ராணுவ தளவாட உற்பத்தி வளாகங்களை தமிழகம் மற்றும் உத்தரபிரதேசத்தில் அமைக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள பிரதமர் மோடி, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் திட்டத்தால் நாடு தன்னிறைவு பெறும் என குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் நிலையில், அதற்கு பதிலளித்து மக்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றியுள்ளார். கொரோனா சூழலில் நமது சுகாதாரத்துறை மற்றும் முன்கள பணியாளர்கள் … Read more

குடும்ப கடனை அடைப்பதில் தகராறு : தந்தையை கொலை செய்த தாய், மகன் <!– குடும்ப கடனை அடைப்பதில் தகராறு : தந்தையை கொலை செய்த தாய்,… –>

கோவையில் குடும்ப கடனை யார் அடைப்பது என்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியும் மகனும் சேர்ந்து தாக்கியதில் கணவர் உயிரிழந்ததால் இருவரும் கைது செய்யப்பட்டனர். கீரணத்தம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி குடும்பத்தாருக்கு 8 லட்சம் ரூபாய் கடன் உள்ளதாக கூறப்படுகிறது. குடி பழக்கம் கொண்ட பழனிசாமி பலரிடம் கடன் வாங்கி மது குடித்து வந்ததாக கூறப்படும் நிலையில்,கடந்த 3 மாதங்களாக கடனை திருப்பி செலுத்துவது தொடர்பாக பழனிசாமிக்கும், அவரது மனைவி ஜானகி, மகன் சுபாஷ் இடையே … Read more