கான்ஸ்டபிள் தகுதி தேர்வில் முறைகேடு : உடல் எடையை அதிகமாக காட்ட அடுக்கடுக்காக ஆடை அணிந்து வந்த பெண் <!– கான்ஸ்டபிள் தகுதி தேர்வில் முறைகேடு : உடல் எடையை அதிகமாக… –>

புதுச்சேரி காவல் துறையின் பெண் கான்ஸ்டபிள் பணியிடத்திற்கான உடல் தகுதி தேர்வில், உடல் எடையை அதிகமாக காட்ட அடுக்கடுக்காக 4 பேண்ட் அணிந்து வந்து எடையை அதிகரிக்க முறைகேட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் தகுதி நீக்கம் செய்து எச்சரித்து அனுப்பினர். உடற்தகுதி தேர்வில் பங்கேற்ற ஒரு பெண் உடல் மெலிந்து இருந்தார். ஆனால், காவலர் உடல் தகுதிக்கு தேவையான 45 கிலோ எடை இருந்தார். போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பணியில் இருந்து பெண் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி, எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை – புஸ்ஸி ஆனந்த் <!– நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித… –>

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடுகிறது எனவும், எந்த கட்சிக்கும் ஆதரவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் விஜய்யின் உத்தரவுபடி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடுகிறது எனவும், எந்த கட்சியுடனும் கூட்டணியில்லை எனவும் கூறப்பட்டுள்ளது Source link

பெண் காவலர்களுக்கான சீருடைக்கு ஆண்களே அளவெடுத்ததால் சர்ச்சை <!– பெண் காவலர்களுக்கான சீருடைக்கு ஆண்களே அளவெடுத்ததால் சர்ச்சை –>

ஆந்திர மாநிலத்தில் பெண் காவலர்களுக்கான சீருடைக்கு ஆண்களே அளவெடுத்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. நெல்லூர் மாவட்டத்தில் சீருடை தைப்பதற்கு பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெண் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கு சீருடை அளவெடுக்கும் பணியில் ஆண்கள் இருந்ததால் பெண் காவலர்கள் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பொறுப்பிலிருந்த தலைமைக்காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Source link

தனது நிலத்தை ஒட்டி பட்டாசு ஆலை கட்டப்படுவதை எதிர்த்து, விவசாய நிலத்திலேயே தற்கொலை செய்துகொண்ட விவசாயி <!– தனது நிலத்தை ஒட்டி பட்டாசு ஆலை கட்டப்படுவதை எதிர்த்து, வி… –>

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே தனது நிலத்தை ஒட்டி பட்டாசு ஆலை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த விவசாயி, புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், தனது நிலத்திலேயே விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். கைலாசபுரத்தைச் சேர்ந்த சதுரகிரி என்ற அந்த விவசாயியின் நிலத்தை ஒட்டி, மரியராஜ், ப்ரேம்குமார் என இருவர் பட்டாசு ஆலை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு ஆலையால் விவசாய நிலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சதுரகிரியின் நிலத்தை … Read more

உள்ளூர் கால்பந்து கிளப் ரசிகர்களிடையே மோதல் : விளையாட்டை வேடிக்கை பார்க்க வந்த 19 வயது ரசிகர் உயிரிழப்பு <!– உள்ளூர் கால்பந்து கிளப் ரசிகர்களிடையே மோதல் : விளையாட்டை … –>

கிரீஸில் இரு வேறு உள்ளூர் கால்பந்து கிளப் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் 19 வயது இளைஞர் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், விளையாட்டு போட்டி தொடர்பான மோதல்களை தடுக்க கடுமையான விதிகள் அமல்படுத்தப்படும் என அந்நாட்டி அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு துறையை சீர்திருத்தும் வகையில் விரைவில் சட்டம் இயற்றப்படும் என கிரீஸ் அரசு தெரிவித்துள்ளது. Source link

2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு : 49 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு <!– 2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு : 49 பேர் குற்றவாளி… –>

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு குஜராத்தின் முக்கிய நகரமான அகமதாபாத்தில் அடுத்தடுத்து  21 குண்டுகள் வெடித்த தொடர் தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் இந்தியன் முஜாஹிதீன் என்று சொல்லக்கூடிய ஐ.எம்.தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 77 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கின் விசாரணை கடந்த செப்டம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், தீர்ப்பு செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது. 49 பேர் குற்றவாளிகளாக … Read more

தமிழகத்தில் இன்று 4,519 பேருக்கு கொரோனா தொற்று <!– தமிழகத்தில் இன்று 4,519 பேருக்கு கொரோனா தொற்று –>

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 20,237 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 792 பேருக்கு கொரோனா தொற்று உறுதி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 37 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 90,137 பேருக்கு சிகிச்சை. Source link

அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள் 7 பேரின் உடல்கள் கண்டெடுப்பு <!– அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணு… –>

அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள் 7 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மிக உயர்ந்த மலைப்பகுதியான காமெங் செக்டர் (Kameng sector) பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் 7 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர். இந்நிலையில் வீரர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்ததை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

மகன்கள் சரியாக பார்த்து கொள்ளாததால், தம்பதி தீக்குளித்து தற்கொலை <!– மகன்கள் சரியாக பார்த்து கொள்ளாததால், தம்பதி தீக்குளித்து … –>

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கூலித் தொழிலாளி ஒருவர் உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாக இருந்ததாலும் , தனது மகன்களிடம் இருந்து போதிய உதவி கிடைக்காத விரக்தியிலும் மனைவியுடன் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சியோன்புரத்தைச் சேர்ந்த செல்வ ஜெயசிங் – தங்கம் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் திருமணமாகி தனியே வசித்து வரும் நிலையில், ஒரு மகன் இவர்களுடன் வசித்து வருகிறார். கட்டுமான தொழிலாளியாக … Read more

ஹிஜாப் விவகாரம் : கர்நாடகாவில் – பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை <!– ஹிஜாப் விவகாரம் : கர்நாடகாவில் – பள்ளி, கல்லூரிகளுக்கு 3 … –>

கர்நாடகாவில் – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாணவர்களில் ஒருபிரிவினர் வன்முறை – பதற்றம் துப்பாக்கிச்சூடு நடத்தி மாணவர்களை கலைத்த போலீசார் கர்நாடகாவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு கல்லூரிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவித்து, கர்நாடக மாநில அரசு உத்தரவு கர்நாடகாவில் சில இடங்களில், ஹிஜாப் விவகாரத்தை கண்டித்து மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து போராட்டம் இருதரப்பாக பிரிந்து போராடும் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் – கர்நாடக முதலமைச்சர் தாவணகெரே ஹரிகர் பகுதியில் … Read more